சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி !



நமக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மனிதத்தன்மையையும் ,கொன்னு குழம்பாக்கி...மதிய சாப்பாட்டுக்கு பரிமாறிடும்போல இருக்கு இந்த பாழாப்போன கோபம்!

அப்ப கோபமே கூடாதா?-

யாரு சொன்னா? நல்லா கோபப்படணும்!

எப்போதும் கோபப்படுபவன் முட்டாள் !
எப்ப்போதுமே கோபப்படாதவன் மண்ணு !

பாரதியார் கூட ரௌத்திரம் பழகு ன்னார். பழகுதல் என்றாலே ஒரு பயிற்சி இருக்கணும். பயிற்சின்னா அது போலியாக்கூட இருக்கலாம். ஒத்திகை மாதிரி.! ஆனா அதை மனிதர்கள் மேல திருப்புவதில்தான் நாம் தோற்றுவிடுகிறோம்.

நாம் ஒரு விருந்துக்குப்போறோம். நமக்கு கத்திரிக்காயில் செய்த எந்த உணவுப்பொருளும் பிடிக்காது. ஆனா அங்கு அதை போட்டு விடுகிறார்கள். ஒன்றும் சொல்லாமல் ஒதுக்கி வைத்துவிட்டு பிடித்தவற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவோம். சாப்பிடும் பொருளில் நல்லவை அல்லவை பார்க்கத்தெரிந்த நமக்கு வார்த்தைகளில் மட்டும் அப்படி ஒரு கரிசனம். எல்லா வார்த்தைகளையும் எடுத்துப்போட்டுக்கொண்டு.. பதில் ஆக்ரோஷமாய் சொல்கிறேன் பேர்வழி என்று உணர்விடம் தோற்றுப்போய் நிற்போம்.

ஒருவர் சாதாரணமாக...'நாயே' என்று திட்டிவிட்டால்...ஐயோ பாவம் எதிரில் இருப்பவர் மனிதர் என்றுகூட என் நண்பனுக்கு தெரியலையே! அவ்வளவு பரிதாபமாகப்போய்விட்டானே என்று நினைத்துக்கொண்டு, மனதுக்கு இதமளிக்காத ,பிடிக்காத வார்த்தைகளை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால்,
பிழைத்தோம். அதே சமயம், நானா நாய்..நீதான் நாய்..உன் குடும்பமே நாய்..என்று வார்த்தைகளை தடிக்கவிட்டு கிட்டத்தட்ட நாய்க்குரலுக்கு மாறி குரைக்க ஆரம்பித்துவிட்டாலே...சொன்னவனின் நோக்கத்தை பூர்த்தி செய்துவிடுகிறோம். அவன் புன்முறுவலுடன்.நிற்பான். .! ஆஹா என்னமாய் குரைக்கிறான் என்று ! (அல்லது அவனும் சேர்ந்து ஆரம்பித்துவிடுவான்)

குழந்தைகள் கூட , கோபப்படும் கடைக்காரரையோ, பக்கத்து வீட்டுக்காரரையோதான் -போட்டுப்பார்க்கும்!

பாலகுமாரன்...கல்லூரிப்பூக்களில் கூறுவார்.

'கோபம் அடக்குவது என்பது ஒரு ரசவாதம். அதை பொறுமையில் ஊறப்போடவேண்டும். அதற்கு வெறியேற்றவேண்டும். வாழ்வில் ஜெயித்துக்காட்டுவதன் மூலமே கோபத்தை வெளிப்படுத்தமுடியும்'  என்று!

ஆனால் இன்று கோபம் சேமிக்கப்பழகவில்லை நாம் ! அது ஒரு காட்டாறு..அதை அப்படியே விட்டுவிட்டால் உங்கள் ஊருக்குள் புகுந்து எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடும். ஒரு அணை போடுங்கள். மெதுவாக அதன் மதகுகளைத்திறந்துவிடுங்கள். ! கோபத்தில் அழகு மிளிரும்.

மேலாண்மையில் ஒரு விஷயம் சொல்லுவார்கள்...
கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடுதான் அமர்வான் என்று.!

நம் கோபத்தின் ஆழம் எப்போதாவது வெளிப்படும்போதுதான் விளங்கும். எப்போதும் கோபிப்பவர்கள் கேலிக்குரியவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.

நான் சின்ன வயதில், அதிக சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சத்தம்போட்டு அடிக்கத்துரத்தி என, கோபப்படுவார்கள் . என் அம்மாவை கோபப்படுத்தி பார்ப்பதற்காகவே, சேட்டைகள் செய்திருக்கிறேன் என்று இப்போதுதான் விளங்குகிறது. என் குடும்ப மனிதர்களின் கோபங்களும் சச்சரவுகளும் கோபத்தின் மீது எனக்கு ஒரு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதை அடக்கப்பழகி, பின்னர் அதை வெளிப்படுத்தவும் பழகி..ஓரளவுக்கு சமாளித்து ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

அந்த ஹரி சாடு....விளம்பரம்....கோபப்படுபவனின் ஊழியர் மன நிலையை சிறப்பாகச்சொல்லும்!

எனக்குத்தான் பேசத்தெரியும் , எழுதத்தெரியும், இப்போதெல்லாம்...டைப் பண்ணத்தெரியும் என்றால்...நாம் உதாசீனப்படுத்தப்படுவது உறுதியாகிவிடும் ! கருத்து மோதல்களின் கோபம் கருத்துகளிலிருந்து பயணம் செய்து மனிதர்களை அடையும்போது கொஞ்சம் அயர்ச்சியாகத்தான் ஆகிவிடுகிறது. கோபக்காரர்கள் நல்லவர், கெட்டவர் என்ற இரு தகுதிகளிலிருந்தும் விடுபட்டு....இப்படி விமர்சிக்கப்படுகிறார்...அவர் நல்லவர்தான்...ஆனா கொஞ்சம் கோவக்காரர்.! இது எந்த டைப்?

கோபப்படுவதே எதிராளிக்கு தெரியாமல், கோபப்படுவது ஒரு கலை..! ஆனால் அதை ஒரு சாதாரண உணர்ச்சியாக விடாமல், மதித்து..தலையில் வைத்து தூக்கி ஆடும்போதுதான், அது முடிந்தவரை ஆடி ஓய்கிறது. அப்போதுமட்டும் வார்த்தைகளைத்தேர்ந்தெடுத்து வழங்கிவிட்டால். பின்னர் வாங்குப்பட தேவையே இருக்காது.!

அதுக்கு நான் பயன்படுத்தும் ஆயுதம்...- 'நீங்க போய் இப்படி செய்யலாமா? உங்களை இப்படி நினைச்சே பாக்கலையே? உங்க தகுதி என்ன? நீங்களா இப்படி?'.......இப்படி போகும்.! :)

உங்கள் எதிரிக்கு பரிசளிக்க வேண்டுமென்றால் - பிழை பொறுங்கள் (மன்னிப்பு - போர்ச்சுக்கல் வார்த்தையாம் :) )

உங்கள் எதிரியை தண்டிக்கவேண்டுமென்றால் - உதாசீனப்படுத்துங்கள் !

இரண்டும் செய்யாமல் வார்த்தைகள் காதில் நுழைந்து வாய்வழியே வேறு வடிவம் பெற்று அடுத்தவர் கைகளுக்குப்போய், ஆயுதமாகவும் மாறி, வயிற்றுக்குள் சொருகப்படும்போதுதான் தெரியும். (சொருகியவருக்கும் தூக்குதானே) -சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி - சரியாத்தான்
சொல்லியிருக்காங்களோ?   என்று..!

Comments

  1. //சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி - சரியாத்தான்
    சொல்லியிருக்காங்களோ? என்று..!//

    தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க போல, சினம் அதிகம் ஆக ஆக சூழல் கருதி அதை அடக்கிட்டே வருவான் மனிதன், அதாவது நாம கோவப்பட்டா அவங்க தப்பா எடுத்துப்பாங்க என்று , இப்போ என்ன ஆகும் அந்த சினம் என்பது அதிகமா சேமிக்கப்படும் நம் மனதில் அதாவது சேரும், அதிகமாக சேர்ந்தா என்ன ஆகும் மன அழுத்தம் வந்து செத்து போய்டுவான், அதான் சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி, சினத்தை காட்டாமல் சேர்த்து வைக்க கூடாதுனு இதுக்கு அர்த்தம்!

    கோவம் வந்தா அதைக்காட்டிடனும்!

    ReplyDelete
  2. If you express your anger in a more constructive way, the outcome would be productive one rather than the actual by product of destructiveness of nature of the anger itself!

    இந்தக் கலையை நன்கு கைவர கத்துக்கணும்ப்பா... இன்னும் நான் செல்ல வேண்டிய தொலைவு நொம்ப இருக்கு!

    நல்லாருக்கு...

    ReplyDelete
  3. வவ்வால் said...

    //தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க போல, சினம் அதிகம் ஆக ஆக சூழல் கருதி அதை அடக்கிட்டே வருவான் மனிதன், அதாவது நாம கோவப்பட்டா அவங்க தப்பா எடுத்துப்பாங்க என்று , இப்போ என்ன ஆகும் அந்த சினம் என்பது அதிகமா சேமிக்கப்படும் நம் மனதில் அதாவது சேரும், அதிகமாக சேர்ந்தா என்ன ஆகும் மன அழுத்தம் வந்து செத்து போய்டுவான், அதான் சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி, சினத்தை காட்டாமல் சேர்த்து வைக்க கூடாதுனு இதுக்கு அர்த்தம்!

    கோவம் வந்தா அதைக்காட்டிடனும்!//


    வாங்க வவ்வால் !

    அட..இந்தக்கோணம் யோசிக்கவே இல்லையே! நல்லாருக்கு!


    ஆனா..கோபத்தை வெளிப்படுத்தக்கூடாதுன்னு நான் சொல்லலை ! அதை வெளிப்படுத்தும் முறையில்தான் மாற்றம் வேண்டும் என்கிறேன். அதுவும் ஒரு சக்தி..அதை விரயமாக்காமல்..ஆக்கப்பூர்வமாக செலவழிக்கலாம்னு சொன்னேன்.

    அன்பிற்கு முகம் தெரியாதவர்கூட நண்பன். கோபத்துக்கு குடும்பத்தார் கூட பகை ! அதை வெளிப்படுத்தும் விதத்தில்.! அதைத்தான் சொன்னேன்.

    ReplyDelete
  4. Thekkikattan|தெகா said...

    //If you express your anger in a more constructive way, the outcome would be productive one rather than the actual by product of destructiveness of nature of the anger itself!

    இந்தக் கலையை நன்கு கைவர கத்துக்கணும்ப்பா... இன்னும் நான் செல்ல வேண்டிய தொலைவு நொம்ப இருக்கு!

    நல்லாருக்கு...//

    நன்றிங்க்ண்ணா..!

    எல்லாருக்குமே அப்படித்தான்..அனேகமா முதல் 60 வருடம் கஷ்டமா இருக்கும்..அப்புறம்..
    போய்ச்சேர வேண்டியதுதான்.! :)

    ReplyDelete
  5. அன்பு : முகம் தெரியாதவர்களிடம் கூட செல்லும், கோபம் : உதிரதொடர்பு உடையவர்களிடம் கூட செல்லுபடியாகாது.

    ReplyDelete
  6. சுரேகா,

    வவ்வால் சொன்னது கரெக்ட். பத்தாவது பாடத்துல கூட ஒரு போயம் படிச்சிருக்கேன் "தி பாய்சனஸ் ஆப்பிள்" அப்பிடின்னு கோவத்தை சேர்த்து வைப்பதால் மன அழுத்தம்தான் வரும்.

    //
    உங்கள் எதிரியை தண்டிக்கவேண்டுமென்றால் - உதாசீனப்படுத்துங்கள் !
    //
    இது சூப்பர்.

    ReplyDelete
  7. "செல்லும் இடத்துச் சினம் காக்க காவாக்கால்......."

    சொல்லிட்டுப் போயிருக்காருல்லே தாடிக்காரர்.


    முழுக் குறளும் போட்டா அதுக்கு விளக்கம் சொல்லணுமுன்னு வலையுலகில் (எழுதப்படாத)விதி இருக்கு. அதுதான்...........:-)

    ReplyDelete
  8. manithan ethai ethaiyo thaedukiran..adakka muyalkiraan..
    etharkellaamo payirchi edukiraan..
    Vazhkkaiyil munnaertathukkaga...
    aanaal kopatthai kattupadutha enna seikiran.. vazhkkaiyin munnaertathirkku kopam oru thadaikal enpathai arivaana..
    kopam life time mai kooda kuraikirathu..
    kopam antada vazhkkaiyil nadakkum ontuthaan..but evvalavu vipareethamanathu..
    nalla subject eduthirukeenga.. kandippaka ithai padiporai konjam sinthikka vaikkum
    vunavu kattupadu... udarpayirchi entu udampai partiya oru awareness elloridamum irukku... athae pola..kovathaiyum kattupaduthuthal inti amaiyathathaga pin partuvomaga.. entha kaala kattathirukkum thaevaiyana oru pathivu...

    ReplyDelete
  9. வவ்வால் சொல்வது மிக்க சரி!

    கோவம் மட்டும் அல்ல மற்ற உணர்ச்சிகளை அடக்க அடக்க பிரச்சினைகள்தான்!

    ReplyDelete
  10. இந்த விஷயத்துல நான் வவ்வால் அவர்களின் கட்சி.

    அன்பால சாதிக்கலாம் என்பது எல்லா நேரத்திலிம் ஆகாது.

    ஹரிசாடு விளம்பரத்தில் அதிகாரியைப் போல அதிகார் இருந்தால், அவரிடம் அன்பைக் காட்டவா முடியும்.

    ReplyDelete
  11. படிச்சாச்சு . அப்புரம் கமென்ட் போட்ரேன்.

    ReplyDelete
  12. Surekaa sir !......
    சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி -
    சரியாத்தான்
    சொல்லியிருக்கிங்க.......
    கோவப்பட்டவரும் மற்றும் கோவத்த
    வாங்கிக்கொண்டு இருப்பவர் இருவரும்
    அனுபவிக்கும் வலி is the same.
    Nenga இதன் மூலம் yenna.........sollavarengannu இந்த .... onnum purialaye..

    அன்பு : முகம் தெரியாதவர்களிடம் கூட செல்லும், கோபம் : உதிரதொடர்பு உடையவர்களிடம் கூட செல்லுபடியாகாது.

    ithu yethuvume kovamo/anbo thanmaiyai poruthathu...Kovathai urimai ullavarigalidamthan katta/kotta mudiyum. but the angry will never win before the அன்பு!......but some times!.....
    otherwise....
    it is such a nice article.
    congrats!.....

    ReplyDelete
  13. kovam irukkura idathulathan gunam irukkunu solvanga. kovame fullfill panniruchunna appuram enge gunamavadhu, manamavadhu.
    mudinjavaraikkum iniya varthahalaiye,passitive words - use panninale kobathai kattupathalam.
    vathaihalil inimai vanthuvittale kobam - poye pochu.
    it's gone

    ReplyDelete
  14. குசும்பன் said...

    //கோவம் மட்டும் அல்ல மற்ற உணர்ச்சிகளை அடக்க அடக்க பிரச்சினைகள்தான்..//

    அடக்கவேண்டாம் சாமி! சாமர்த்தியமா வெளிப்படுத்துங்க..!

    ReplyDelete
  15. துளசி கோபால் said...

    //"செல்லும் இடத்துச் சினம் காக்க காவாக்கால்......."

    சொல்லிட்டுப் போயிருக்காருல்லே தாடிக்காரர்.//

    வாங்க !
    ஆமாம்மா ! அதுதான் அரசியல்வாதிகளிடமும், அதிகாரம் பண்றவங்ககிட்டயும்.ரவுடிகள் கிட்டயும் காட்டமுடியாம தவிக்கிறோம்.

    ReplyDelete
  16. உலகில் அன்பினால் அனைத்தையும் சாதிக்க முடியும்.கையில் ஒரு சவுக்கும் இருததால்.

    ReplyDelete
  17. உலகில் அன்பினால் அனைத்தையும் சாதிக்க முடியும்.கையில் ஒரு சவுக்கும் இருததால்.

    ReplyDelete
  18. உலகில் அன்பினால் அனைத்தையும் சாதிக்க முடியும்.கையில் ஒரு சவுக்கும் இருததால்.

    ReplyDelete
  19. Grammatical Nitpick:
    ”சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி” - இப்படி எழுதினால் சுரேகா சொல்லும் அர்த்தம் வரும்.

    "சினம் என்னும் சேர்த்தாரைக்கொல்லி" - இப்படி எழுதினால் வவ்வால் சொல்லும் "இப்போ என்ன ஆகும் அந்த சினம் என்பது அதிகமா சேமிக்கப்படும் நம் மனதில் அதாவது சேரும், அதிகமாக சேர்ந்தா என்ன ஆகும் மன அழுத்தம் வந்து செத்து போய்டுவான்" அப்படீங்கற அர்த்தம் வரும்.

    ReplyDelete
  20. வாங்க ரமணன்.

    மேட்டர் சூப்பரா இருக்கே!

    ReplyDelete
  21. செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்
    இல்அதனின் தீய பிற.

    விளக்கம்:

    செல்லாத இடத்திலே சினம் கொள்வதனால் தீமை வரும். செல்லும் இடத்திலும் அதனிலும் தீமையானது வேறு ஏதும் இல்லை.

    இந்தக் குறள் படிப் பாத்தீங்க்ன்னா, நமக்கு மேல இருப்பவரிகளிடமும் கோபப்படக்கூடாது. நமக்குக் கீழே இருப்பவர்களிடமும் கோபப்படக்கூடாது. அப்ப என்ன கருத்து, பொதுவா கோபப்படக் கூடாதுங்றதுதான்.

    நடைமுறையில் சாதியமாங்றதுஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம் மாறும்.


    முடியாது.
    க்ரவங்க கிட்டயும்

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. "கோபத்தினை பொறுமையில் ஊறப்போட வேண்டும்".நல்லதொரு மேற்கோள்.
    அப்புறம் கொஞ்சம் எனது குசும்பு
    "மன்னிப்பு - போர்ச்சுக்கல் வார்த்தையாம்"
    அதனாலதான் அதை விசயகாந்து தமிழுல எனக்கு பிடிக்காத வார்த்தைன்னாரோ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !