புறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..! - 2

பெரிய பெரிய நிறுவனங்கள்ல எல்லாம், எவ்வளவு பெரிய திறமைசாலியா இருந்தாலும், இந்த மாதிரி புறம் சொல்லும் குணமுள்ளவுங்களை வெளில அனுப்பிடுவாங்க..! ஏன்னா புறம் கூறும் நபர்களாலத்தான் ஒரு நல்ல நிறுவனம் அழிஞ்சு போகும்ன்னு அவுங்களுக்கு தெரியும்.

பாட்சா படத்துல தேவன் நக்மாவோட அப்பாவா வருவாரு! அவர்தான் பாட்சாவான ரஜினிக்கிட்ட நல்லவர் மாதிரி நடிச்சு, அவரைப்பத்தி ரகுவரன்கிட்ட புறம் சொல்லி ஏமாத்தப்பாப்பாரு! அதைக்கண்டுபிடிச்சு ரஜினி தப்பிச்சுடுவாரு...அதே சமயம் கூட இருந்தே ஏமாத்தின தேவன் தான் தன் குடும்பத்தை கொன்னதுன்னு தெரிய வ்ந்ததும் ரகுவரனே , தேடிவந்து தேவனை கொன்னுடுவாரு! இதுதான் புறம் கூறுபவர்களோட நிலமை!

இந்த குணத்தை விரட்ட , முடிஞ்சவரைக்கும் ,அடுத்தவுங்களை குறை சொல்லாம இருக்கலாம். அப்படி சொல்றதா இருந்தா அவுங்க முன்னாடியே சொல்லிடலாம். அதை விட்டுட்டு, கோழைத்தனமா பின்னாடி போய் அவுங்களைப்பத்தி சொன்னா, அதை ரகசியமாவே சொன்னாலும் அது ஒரு நாள் வெளில வந்து நமக்கு அவமானமா போயிடும்.

வெளிவராமல் போன ஜக்குபாய் பட போஸ்டரில் ஒரு வாசகம் இருக்கும்...இறைவா! நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்! இதைவிட அழகா புறம் கூறும் நண்பர்கள் பத்தி எப்படி சொல்லமுடியும்?

ஏன்னா நமக்காக பிறரைப்பத்தி குறை சொல்பவர்கள் ! பிறருக்காக நம்மைப்பற்றியும் கட்டாயம் குறை கூறுவார்கள். இந்த நினைப்பு எப்பவும் இருந்தா போதும். நாமும் அடுத்தவுங்களைப்பத்தி பின்னால் பேசமாட்டோம். அடுத்தவுங்களும் நம்மகிட்ட பிறரைப்பத்தி சொல்ல பயப்படுவாங்க!
அதையும் மீறி சொன்னா ஒரே ஒரு தடவை இப்படி சொல்லிப்பாருங்க! " இப்படித்தானே மத்தவுங்ககிட்ட என்னப்பத்தி சொல்லுவீங்க"? அதுக்கப்புறம் புறம்கூறும் வாசனையே உங்க பக்கம் அடிக்காது.

எல்லாரையும் அகம் மகிழ பாராட்டி பழகிட்டா புறத்துக்கு வேலையே இருக்காது.

இப்ப புறம் மட்டுமில்ல..அகம் மகிழ்ந்தும் கூறுகிறேன். வாழ்த்துக்கள்!

Comments

  1. ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்

    பாட்டி அன்றே சொல்லிட்டுப் போயாச்சு:-)

    ReplyDelete
  2. சுரேகா வாழ்த்துக்கள். மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  3. ///இறைவா! நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்!///


    நல்லாத்தான் சொல்லி இருக்காங்க!

    ReplyDelete
  4. ///நமக்காக பிறரைப்பத்தி குறை சொல்பவர்கள் ! பிறருக்காக நம்மைப்பற்றியும் கட்டாயம் குறை கூறுவார்கள்.///

    100 சதவிதம் உண்மை.

    ReplyDelete
  5. உள்ளும் புறமும் ஒன்றாய் அதுவும் நன்றாய் இருத்தல் வேண்டும். இது தானே நீங்க சொல்ல வாறீங்க?

    ReplyDelete
  6. துளசி கோபால் said...

    //ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்

    பாட்டி அன்றே சொல்லிட்டுப் போயாச்சு:-)//

    வாங்கம்மா!

    ஆமா சிம்பிளா பாட்டி சொன்னதைத்தான் பேரன் இழுத்து சொல்லவேண்டி இருக்கு!

    ReplyDelete
  7. நிஜமா நல்லவன் said...

    //சுரேகா வாழ்த்துக்கள். மிக அருமையான பதிவு.//

    வாங்க ....
    நன்றிங்க!

    ReplyDelete
  8. நிஜமா நல்லவன் said...

    //உள்ளும் புறமும் ஒன்றாய் அதுவும் நன்றாய் இருத்தல் வேண்டும். இது தானே நீங்க சொல்ல வாறீங்க?//

    அதே அதே...மேலும்..புறம் உடம்பு சம்பந்தப்பட்டது இல்லாம, வார்த்தைல விஷமில்லாம, விஷயத்தோட இருக்கணும்னு சொல்றேன்.

    ReplyDelete
  9. ullondru vaithu puram ondru pesuvor uravu kalavamai vendum nu
    adihalar solli irukaha illa.


    தன்னைப்பத்தி புகழ்ந்துக்க விஷயமில்லாதபோது, அடுத்தவங்களைப்பத்தி இகழ்ந்தா சந்தோஷமா இருக்குறதுதான் காரணம்!

    miha chariyana varthaihal.100 kku 90% ippadidhan irukkanga surekka.
    nalla thalaipu.

    vazhthukkaludan,
    subbu.

    ReplyDelete
  10. //இறைவா! நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்!//

    அடடே!!! இது நல்லாயிருக்கே..

    ReplyDelete
  11. subbu. said...

    //ullondru vaithu puram ondru pesuvor uravu kalavamai vendum nu
    adihalar solli irukaha illa.//

    வாங்க சுப்பு...நான் சொல்ல மறந்த மேற்கோளை காட்டிட்டீங்க! நன்றி!

    //miha chariyana varthaihal.100 kku 90% ippadidhan irukkanga surekka.
    nalla thalaipu.//

    ஆமாம்..நானும் பாத்திருக்கேன்..
    நன்றிங்க!

    ReplyDelete
  12. ரூபஸ் said...



    //அடடே!!! இது நல்லாயிருக்கே..//

    வாங்க..உண்மை அதுதான் இல்லயா?

    ReplyDelete
  13. Excellent topic! surekaa!
    ஏன்னா நமக்காக பிறரைப்பத்தி குறை சொல்பவர்கள் ! பிறருக்காக நம்மைப்பற்றியும் கட்டாயம் குறை கூறுவார்கள்.

    migavum unmai. Naanum realise panni irukkiren!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !