என் பட்டியலில் உள்ள ஊர்களைப்பற்றி நட்சத்திர வாரம் தாண்டியும் எழுதலாம் போலிருக்கிறது. :)
என் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்த ஊர். அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்!
காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும்.
அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும்.
நான் இருந்தது கோட்டைப்பகுதி! அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம்! வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி!
வாணி தியேட்டர் - காலைக்காட்சிகளும், டிவி டெக்கெடுத்துப்பார்த்த படங்களும், நண்பர்களின் காதல்களும், பல்வேறு மோதல்களும் என சூப்பராகப்போன வாழ்க்கை அது! வாழ்க்கை பற்றிய பயத்துடன் படித்ததால், ஆழமாக ஆட்டம் போட முடியவில்லை. ஆனாலும் எங்கள் ரூமில் இரண்டு பேருக்கு வாடகை கொடுத்துவிட்டு தினமும் பத்து பேர் நெருக்கியடித்துத்தூங்கிய சுகம்...ஆஹா..!
பாண்டியன், முருகேஷ்குமார், அப்துல்லா, கருணாநிதி, பார்த்திபன், எழிலரசு, ரெங்கராஜன்,பேரின்பநாதன்...என ஒரு ஜமா! இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை! எழிலரசு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.
எங்களுக்கு ஒரு சீனியர் இருந்தார். அமைதியாக இருப்பார். தஞ்சாவூர்க்காரர் என்பார்கள். கவிதைகளெல்லாம் எழுதுவார். ராகிங் பண்ணமாட்டார். ஜூனியர்களைப்பார்த்து சினேகமாகச்சிரிப்பார்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு அவரை ஊடகத்திலும், அவர் கவிதைகளைப்பாடலாகவும் பார்த்தேன். அவர்....கவிஞர் யுகபாரதி!
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் இருக்கும் நாங்கள் மன்னார்குடி செல்லும் போது அறந்தாங்கி வழியாகத்தான் செல்வோம் அருமையான ஊர் ஒரு பாலா படத்தில் கூட அந்த பஸ் செல்லும் வளைவு வருமே நினைவுகளை தூண்டி விட்டீர்கள் சுரேகா
ReplyDeleteவாங்க தேனம்மை !
ReplyDeleteஆமாம்.அருமையான ஊர்!
மிக்க நன்றிங்க!
அருமை. நட்சத்திர வாரம் முடிந்தால் என்ன, உங்கள் பட்டியலில் உள்ள ஊர்களைப் பற்றி தொடர்ந்து எழுதுங்கள் சார்.
ReplyDeleteஅறந்தாங்கி என்று படிக்கும் போதே மண்வாசனை மனதை நெருங்குவது போல் ஒரு பிரமை :)...
ReplyDeleteஅறம் + தாங்கி??? :)
//(இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா)//
ReplyDeleteஎன்னா குசும்பு?? ;)
உங்க காலடி பட்டாச்சில்லையா... இனி காஸ்மோ-பாலிடன் சிட்டி என்று அழைச்சிருவோம்... :)
அறந்தாங்கியில் நாங்கள் குட்டைக்குளம் தென் கரையில் இருந்தோம்.என் அப்பா அங்கு ஹார்டுவேர் கடை வைத்திருந்தார்கள்.என் அப்பாவின் மரணத்திற்குப்பிறகு கடை,இடம் எல்லாவற்றையும் விற்று விட்டு, சொந்த ஊர்க்கு வந்து விட்டோம்.1978 முதல் 1992 வரை அறந்தாங்கியில் வாசம்.புற்று மாரியம்மன் கோவில் முதல்,மண்டிக்குளம் மாரியம்மன்,வீரமாகாளியம்மன் கோவில்,பெரிய ஆஸ்பத்திரி,புதுக்குடியிருப்பு வரை என்று ஒவ்வொரு திசைக்கும் இந்த எல்லைகள் வரை சுற்றித்திரிந்த அந்த ஊர் நினைவில் இருந்து நகராது.
ReplyDeleteவாங்க சரவணகுமார்..!
ReplyDeleteமிக்க நன்றிங்க ! கண்டிப்பா எழுதுறேன்.
வாங்க அன்புடன் மணிகண்டன்..!
ReplyDeleteநன்றிங்க! தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும்!
வாங்க சாந்தி லெட்சுமணன்..!
ReplyDeleteஅட..அப்படியா! பாருங்க உலகம் எவ்ளோ சின்னதுன்னு!
நான் அங்கு 1991 முதல் 1994 வரை இருந்தேன். :)
கோட்டை ஏரியாவில்தான் அறை!
அன்பின் சுரேகா
ReplyDeleteஅது சரி - மூணு வருசம் வாழ்ந்த ஊரா = பலே பலே
சிலையப் பாத்து டெம்ப்ட் ஆனானுங்களா .....ம்ம்ம்
2 பேருக்கு வாடகை - 10 பேர் நெருக்கி அடித்துத் தூங்கிய சுகம் - ம்ம் அனுபவிச்சிருக்கீங்க -
நாங்க 10 பேரு திருவனந்த புரத்துல 2 பேர் தங்கற அறையில - சனிக்கிழமை மதியம் ரம்மி ஆரம்பிச்சோமுன்னா - திங்கக்கிழமை காலை வரை தொடரும் - டீ,காபி, சரக்கு, சைடிஷ், சிகரெட்டு - டிபன், சாப்பாடு, டிவீ, எல்லாப்படங்களும் - அங்கே யே தான். ஆமா - அதெல்லாம் பொற்காலம் - இப்பக் கிடைக்குமா
அறந்தாங்கி வீரமாகாளி கோவில் அருமையா இருக்கும். ஒரே ஒரு தடவை என் கல்லூரித் தோழி விசாலட்சி வீட்டுக்கு போகும்போது போயிருக்கேன்
ReplyDeleteAre you studied in Government Polytechnic???
ReplyDeleteHai sureka romba azlahaga sonneenga nan angu piranthatha ninacha eppathan yanakku sonthosama erukku naan
ReplyDeleteEppa malaysia vula erukkean naan vanthu 7 varudama achu adutha matham naan varuhetha ninaicha yanakku eppavea sonthosama erukku
இன்று முழுக்க உங்கள் தளத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தலைப்புகளை படித்து விட்டேன்.
ReplyDeleteஎழுத்தும் பேச்சும் சிலருக்கு மட்டுமே சரியாக வரும். நீங்களும் ஒருவர்.
விரைவில் சிகரம் தொட வாழ்த்துகள்.