Veள்ளி Black Colour ஜுவல்லரி


     அன்று நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு…
     
இன்று மாலை தி.நகரில் இருக்கும் VBC ஜுவல்லரிக்கு வர முடியுமா? ஒரு பிரச்னை என்றார்.
     
விபரம் கேட்டேன்.

சொன்னார்.
     
அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. அதுசமயம், அவரது மனைவி வீட்டில் அந்த ஜுவல்லரியில் வெள்ளிச் சொம்பு, தட்டு, விளக்கு, குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் வாங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வந்தபின் , வாங்கிய வெள்ளிப்பொருட்களை அட்டைப்பெட்டியிலிருந்து பிரித்துப் பார்த்தபோது, கன்னங்கரேர் என்று இருந்திருக்கிறது. உடனே பயந்துபோய், எடுத்துக்கொண்டு அந்த ஜுவல்லரிக்குச் சென்றிருக்கிறார்கள். கடையில்,  அதைப்பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாமல், உப்புக் காற்றுப் பட்டால் வெள்ளி கறுத்துப்போவது சகஜம்தான் என்று நண்பரை பல்வேறு காரணங்கள் சொல்லி, சமாதானப்படுத்தி, மீண்டும் பாலீஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

     அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் 2 நாட்களில் மீண்டும் அனைத்து வெள்ளிப்பொருட்களும் வேகமாகக் கறுக்கத் துவங்கி, ஒரு வாரத்தில் மீண்டும் முழுக்கருமையை அடைந்திருக்கிறது. மீண்டும் கடைக்குப் படையெடுத்திருக்கிறார். மீண்டும் சமாதானம் …மீண்டும் பாலீஷ்..!! மீண்டும் நடந்தால் என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார். அதெல்லாம் நடக்காது நடந்தால் நாங்கள் மாற்றித் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

     அது நடந்து மூன்றாவது முறை, நான்கே நாட்களில் மீண்டும் அனைத்துப்பொருட்களும் கருப்பாகவே, அதற்குப்பிறகுதான் என்னை அழைத்திருக்கிறார். அந்த வெள்ளிப் பொருட்களைப் பார்த்து அதிர்ந்தே போனேன். கருப்பு கிரானைட்டில் செய்யப்பட்டதைப்போல் இருந்தது.



     நான் அவரிடம், உங்களுக்கு வேறு வெள்ளிப்பொருட்கள்   வேண்டுமா? அல்லது என்ன செய்யலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்…

     இல்லை. அந்த ஜுவல்லரி மேல் நம்பிக்கை போய்விட்டது. எனக்கு வெள்ளிப்பொருட்கள் வேண்டாம். அவற்றை திரும்பக்கொடுத்து, என் பணம் திரும்ப வேண்டும் என்று கேட்டார்.

     ஆகவே, அன்று மாலையே அந்த ஜுவல்லரியை அடைந்தோம்.
     நண்பர் அனைத்து வெள்ளிப்பொருட்களையும் கொண்டு வந்திருந்தார். ஏற்கனவே அவர் சந்தித்த, வெள்ளி செக்‌ஷன் பொறுப்பாளரைச் சென்று பார்த்தோம்.
     சார்! மறுபடியும் எல்லா வெள்ளிச் சாமானும் கருத்துப்போச்சு! என்று நண்பர் துவங்க..
     ஆமா சார்! நாந்தான் முன்னாடியே சொன்னேனே… வெள்ளின்னாலே கருத்துத் தானே போகும்..!! குடுங்க உடனே உங்களுக்கு பாலீஷ் போட்டுத்தரச் சொல்றேன். என்றார்.
     இல்லை.. இவ்வளவு மோசமா எந்த வெள்ளிப் பாத்திரமும் கருத்துப்போய் நான் பாத்ததில்லை. என்று நண்பர் சொல்ல,

அவரும் சளைக்காமல், அது உங்க ஏரியா காத்து, சூழ்நிலையை பொறுத்து இருக்கு.. என்று வாதாட ஆரம்பித்தார்.

அப்போது நண்பர் அவர் ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தி வரும் ஒரு வெள்ளிக் கும்பாவையும், ஒரு குத்துவிளக்கையும் எடுத்துக் காட்டினார். அது கருக்காமல் அப்படியே இருந்தது.

     அப்ப..இது மட்டும் ஏன் இப்படி இருக்கு சொல்லுங்க ! என்றதற்கு..

     அது பழைய காலத்து வெள்ளி …இப்படித்தான் இருக்கும்… இப்பல்லாம் வெள்ளி இப்படி இருக்கிறதில்ல.. என்று சமாளித்தார்.

     நான் என்னையும், “கேட்டால் கிடைக்கும்’ அமைப்பைப் பற்றியும், அறிமுகப்படுத்திக்கொண்டு , பேச்சினுள் நுழைந்தேன்.

     அப்போ… இதுல எதை நான் வெள்ளின்னு சொல்றது? அதைச் சொல்லுங்க ? என்றேன்.

     ரெண்டுமே வெள்ளிதான்..  இப்பல்லாம், மக்கள் ரொம்ப பளபளன்னு இருக்கணும்னு விரும்புறதால, கொஞ்சம் கெமிக்கல் கலந்திருப்பாங்க அவ்வளவுதான் என்றார்.

     அப்போ, இது தரமான வெள்ளி இல்லைன்னு நீங்களே சொல்றீங்களா? என்றேன்.

     அப்படியில்லை.. இதோ பாருங்களேன். எங்க கடையில் இருக்கும் அத்தனை வெள்ளிப்பொருளும் அப்படியே பளபளன்னுதானே இருக்கு ? என்று கேட்டார்.

     அப்போதுதான், அந்த டிஸ்ப்ளேயில் இருக்கும் வெள்ளிப்பொருட்களை நான் நுட்பமாக கவனித்தேன். அவை அனைத்துமே ஒரு ப்ளாஸ்டிக் கவரால் லேமினேட் செய்யப்பட்டு முழுமையாக மூடி வைக்கப்பட்டிருந்தன.

     அதை அப்படியே அவரிடம் சொல்லி.. அந்த பிளாஸ்டிக் கவரெல்லாம் நீக்கிட்டு நீங்க டிஸ்ப்ளேல காமிச்சா நான் நம்புவேன். என்றேன்.

     அதற்கு..இல்லை..தூசி படிஞ்சிரும் அதான் என்று சமாளித்தார்.

சரி..உங்கள் கடையின் வெள்ளி தரமானதாகவே இருந்துட்டுப் போகட்டும். எங்களுக்கு..இப்படிக் கறுத்துப்போகும் வெள்ளிப்பொருட்கள் வேண்டாம். எங்கள் பணத்தைக் குடுத்துருங்க! என்று கேட்டேன்.

     அதுக்கு முதலாளியைத்தான் நீங்க கேட்கணும். என்றார்.

நான் வாங்கும்போது முதலாளியைக் கேட்டா என்னிடம் வித்தீங்க…? அப்படிக் கேட்கணும்னா, நீங்களே கேட்டுட்டு வாங்க என்று நான் கொஞ்சம் குரலை உயர்த்த.

     அவரே கீழிறங்கி, முதலாளியைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்துக்குப்பிறகு வந்தார்.

     உங்க பிரச்னையையும், நீங்க யாருன்னும் முதலாளிக்கிட்ட சொன்னேன். நீங்க விரும்புறதால, உங்க பணத்தைத் திரும்பக் கொடுக்கச் சொல்லிட்டாரு.. என்று சொல்லி, தொகையைக் கணக்கிட ஆரம்பித்தார்.

     நான். இதில் கணக்குப் போட என்னங்க இருக்கு? வாங்கின தொகையை அப்படியே திரும்பிக் கொடுத்திருங்க! வெள்ளியை வேணும்னா எடை போட்டுப் பாத்துக்குங்க! அதில் ஏதாவது குறைஞ்சா கழிக்கலாம் என்றேன்.

     சரி என்று சொல்லிவிட்டு, நண்பர் பெயரில் செக் போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். அதைப்பார்த்ததும் எங்களுக்கு மீண்டும் ஒரு ஷாக்! சுமார் 94703 ரூபாய்க்கான பில்லுக்கு 1 சதவீதம் வரி 947 ரூபாய் கழித்திருந்தார்கள்.

     நண்பர் சூடாகிவிட்டார்.

உங்க பொருளைப்பயன்படுத்தவே முடியலைன்னு நான் திருப்பிக் கொடுக்கிறேன். அதற்கான பில்லும் என்கிட்ட இருக்கு! அதுவும் திருப்பித்தரேன். பில்லைக் கேன்ஸல் செய்வதுதானே முறை? அப்புறம் ஏன் வரி பிடிக்கிறீங்க என்று கத்த,

     பொறுப்பாளர், எங்களை முதலாளியிடம் அழைத்துச் சென்றார்.

முதலாளி, பதட்டத்துடன் காணப்பட்டார்.

     நான் பொறுமையாக எங்கள் நியாயத்தை எடுத்துச் சொன்னேன்.

அதெல்லாம் முடியாது. உங்களுக்காகத்தான் பணமே திருப்பித்தரேன்னு ஒத்துக்கிட்டேன். கட்டின வரியை நான் திருப்பி வாங்க முடியாது. இந்த பில்லுக்கான வரியை யார் கட்டுறது? இதுல என்ன 1000 ரூபாய்க்குக் கணக்குப் பாக்குறீங்க? குடுக்குறதை வாங்கிக்கிட்டு போங்க! என்று சீறினார்.

     ஆமா..உங்க கடையை நம்பி வந்து வாங்கி, கல்யாணச்சீரா வச்சு, கருத்துப்போன வெள்ளியை வச்சுட்டீங்கன்னு சம்பந்திக்குள்ள சண்டை வந்து , குடும்பமே நாறினாலும் பரவால்ல..!! மேலும் நம்பி வந்த வாடிக்கையாளரை துச்சமா மதிச்சு மூணு வாட்டி அலைய விட்டு, வெள்ளியே இல்லாத ஒண்ணை தலையில் கட்டுவீங்க அதுவும் பரவால்ல.. ஆயிரம் ரூபாய்க்கு நாங்க கணக்குப் பாக்கக்கூடாது. ஆனால், நீங்க மட்டும் விக்காத பொருளுக்கு எங்களிடம் வாட் வசூல் பண்ணுவீங்களா? அப்படியே வாங்குற எல்லா வாட்டையும் நேர்மையா வணிகவரி அலுவலகத்தில் கட்டுறீங்களா? செக் செஞ்சுருவோமா? கேன்ஸல் பில்லைத் திருப்பிக் கொடுத்தா, அந்த வாட் கழிச்சுக்கலாம்னு சாதாரண பி.காம் பட்டதாரிக்குக் கூட தெரியும். உங்கள்ட்ட வாங்குற வரைக்கும் வாடிக்கையாளர் புத்திசாலி, உங்க தப்பை கண்டுபிடிச்சிட்டா அவன் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்படும்  பிச்சைக்காரன்..கிறுக்கனா? என்று ஒரு எகிறு எகிறினேன்.

அடுத்த நிமிடம் பழைய செக் கிழிக்கப்பட்டு, வாங்கிய அதே ரூ.94703 க்கான செக் கைக்கு வந்தது.

ஜுவல்லரி வைத்திருப்பவர்கள் எல்லாரும் பெரிய முதலாளிகள். அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று நாமாகவே நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் ஏதோ ஒரு விதத்தில் கறப்பதுதான் அவர்களது நோக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் செய்யும் அத்துனை தகிடுதத்தங்களையும் நாம் தட்டிக்கேட்காத வரைதான் அவர்களால் ஆட முடியும். கொஞ்சம் எதிர்த்துக் கேட்க ஆரம்பித்தால் போதும். எல்லாம் சரியாகி விடும்.

நம்புவோம்.


கேட்டால்… கிடைக்கும்! 

Comments

  1. மிகச் சிறந்த முன்னுதாரணம் இந்நிகழ்வு . வெகுவான வாசகர்களுக்கு சென்று சேர வேண்டிய தகவல் . பதிவிட்டமைக்கு நன்றி சுரேகா ...

    ReplyDelete
  2. Super..!! சிலிர்க்குது .. ஹீரோ சுரேகா

    ReplyDelete
  3. உங்களைப் போல் எல்லோரும் "விசயம்" தெரிந்து எகிறினால், கேட்டதும் + கேட்காததும் கிடைக்கலாம்...

    ReplyDelete
  4. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  5. ப்ளஸ்ஸில் பதிவிடுகிறேன், நன்றி.

    ReplyDelete
  6. http://blogintamil.blogspot.fr/2014/04/blog-post_8767.html

    ReplyDelete
  7. [தைரியமாய்] கேட்டதும் கிடைத்தது... அருமை.

    ReplyDelete
  8. 100% தூய்மையான வெள்ளி நிச்சயம் கருத்துதான் போகும்...! சில வெள்ளிபாத்திரங்களில் வெள்ளை பித்தளை என்ற உலோகத்தை சேர்ப்பார்கள் அப்படி சேர்கப்பட்ட தரமற்ற வெள்ளி விரைவில் கருத்து போகாது...! நீங்கள் திரும்ப கொடுத்தது தரமான வெள்ளி பாத்திரங்களை...!!!
    வெள்ளி நல்ல வெள்ளியா என சோதிக்க டெஸ்ட்டிங் செய்து பார்த்து இருக்க வேண்டும்...அப்போது தெரிந்து இருக்கும் அதன் தூய்மைதன்மை....!!!

    ReplyDelete
  9. சில கோவில்களில் தேர்கள் மற்றும் சில கிரீடங்கள் தூய்மையான வெள்ளியில் செய்யபட்டு இருக்கும் அவற்றை கவனித்து பாருங்கள் கருத்து இரும்பு போல இருக்கும் சில கோவில்களில் அடிக்கடி பாலீஸ் போட்டபடியே இருப்பார்கள்...!

    ReplyDelete
  10. Tks for giving the confidence.....but vbc has lost the old charm.....

    ReplyDelete
  11. மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
    சுப்புதாத்தா
    www.subbuthatha72.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com
    www.Sury-healthiswealth.blogspot.com
    www.movieragha.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !