Friday, July 22, 2016

ஒரு பிரபலமான நகைக்கடையின் மாதாந்திரச் சீட்டு முதிர்வடைந்ததால், அதற்கான தங்கத்தை வாங்கச் சென்றோம். 11 மாதம் 22000 ரூபாய் கட்டியதில், தங்கமாக 8.5 கிராம் வந்திருந்தது. அன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ. 2941.00. நகையாக எடுத்தால் கூலி , சேதாரம் இல்லை என்று பல வியாபாரக்கொக்கிகள் போடப்பட்டாலும், நான் நகையாக வேண்டாம். அப்படியே தங்கக்காசாக கொடுத்துவிடுங்கள் என்று சொன்னேன். அவரும் 8 கிராம் (1பவுன்) காசாகத்தான் உள்ளது. பணமாக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். ( உண்மையில் இன்னும் அரைகிராம் தங்கத்துக்கு விலைகொடுத்து, ஒரு கிராம் காசாக வாங்குவதுதான் என் திட்டம்!! ) அட! பரவாயில்லையே என்று மீதமிருக்கும் அரை கிராமுக்கு 2941 / 2 = 1470.50 கிடைக்கப்போகிறது என்று கைகளைத் துடைத்துக்கொண்டு நின்றேன். அப்போது காட்டினார் அவரது ராஜதந்திரத்தை...!! சார்.. ! நீங்க 22000 கட்டியிருக்கீங்க! அதுக்கு தங்கம் 8.530 வந்திருக்கு... அப்படிப்பாத்தா சராசரியா ஒரு கிராம் 22000 / 8.53 = 2579 வருது.. அப்போ அரை கிராம் 1289.50 ..அதுல வாட் வரி 1% 220 போக, 1069 பணமா வாங்கிக்குங்க என்று சொல்லிவிட்டு, எனக்குப் பணம் வாங்கிக்கொடுக்க கேஷ் கவுண்ட்டர் நோக்கிச் சென்றார். எனக்கு குழப்பமாக இருந்தது. இது என்னய்யா புதுவிதமான டகால்ட்டி வேலையா இருக்கு என்று நினைத்துக்கொண்டு.. அவரிடம் மீண்டும் சென்று... இல்லை! நீங்க சொல்லும் கணக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கே? என்றேன். அதெல்லாம் இல்லை சார்..!! நீங்க சீட்டுக்கட்டி முடிச்சதும், தங்கமா வாங்கினா பிரச்னை இல்லை. பணமா கேட்டா இந்த 11 மாத ஆவரேஜ்தான் தருவோம் . அதான் ரூல்ஸ் என்றார். நான் பணமாவே கேக்கலையே.. சரியா 530 மில்லி தங்கமாவே குடுத்துருங்க! வாங்கிக்கிறேன் என்றேன். அது இல்லைன்னுதான் பணமாத் தரோம் சார்! இது நடந்துகொண்டிருக்கும்போதே மேனேஜர் அருகில் வந்தார். என்ன சார்? என வினவ... நானும் கதைச்சுருக்கம் சொல்லிவிட்டு,,. நான் உங்களிடம் மாதாமாதம் பணம் கட்டியிருக்கேன். அதாவது பதினோரு மாதம் முன்னரே முதல் தவணையாக 2000 கட்டிட்டேன். ஆனால் அதுக்குப்பதிலா, என் கணக்கில் நீங்க தங்கமாகத்தான் வரவு வச்சிருக்கீங்க !அதாவது, நான் அப்பவே அத்தனை கிராம் தங்கம் வாங்கினதாக அர்த்தம்! இப்படியே ஒவ்வொரு மாதமும், நான் பணம் கட்டும் நாளில் தங்கம் என்ன விலையோ அதைப்பொறுத்துத்தான் என் கணக்கில் தங்கத்தை வரவு வச்சிருக்கீங்க! அப்ப என் கணக்கில் இருப்பது 22000 ரூபாய் பணம் இல்லை.. 8.53 கிராம் தங்கம். !! அதைச் சொல்லித்தான் விளம்பரம் செஞ்சு, வாடிக்கையாளரைச் சேத்தீங்க! இதே தொகையை நான் மாதாமாதம் வங்கியில் போட்டிருந்தால், 6 சதவீத வட்டி போட்டு மாதாந்திர சேமிப்பாகக் கணக்கிட்டு, 11 மாதத்துக்குப்பிறகு வட்டியோட வாங்கிக்கலாம். அதை RD ன்னு சொல்லுவாங்க! இப்போ, என் கணக்கில் உள்ள முழுத்தங்கமும் வேணும்னுதான் கேக்குறேன். ஆனால், உங்க ஆள்தான் 8 கிராம் தங்கமா வாங்கிக்கிட்டு, அரை கிராமுக்குப் பணம் வாங்கிக்கலாம்னு சொன்னாரு! ஆனால், அதிலும் இப்படி ஒரு உட்டாலக்கடி கணக்கைச் சொன்னால், எனக்குச் சரியாகப்படலை!.. நியாயமா, எனக்கு வரவேண்டியது 1470.50 - வாட் வரி 220 போக சரியாக 1250.50 என்றேன். அவரும் லேசாக விளக்கம் சொல்ல முற்பட்டார். நானும், கேட்டுக்கொண்டிருந்துவிட்டு... எனக்கு ஒரு விஷயம் தெளிவு படுத்துங்க.. இந்த கார்டில் என் கணக்கில் நீங்க வரவு வச்சது.. பணமா? தங்கமா? என்றேன். தங்கம் !! இப்ப தங்கத்தோட விலை 2941 ஆனதால் இந்த ஆவரேஜ் போடுறீங்க.. அதே சமயத்தில் விலை குறைஞ்சிருந்தா.. என்னிடம் ஆவரேஜ் போட்டு பணம் கொடுப்பீங்களா? இல்லை.. தங்கமாகவே வாங்கிக்கச் சொல்வீங்களா..? அல்லது அன்றைய விலைக்கு கணக்குப்போட்டு பணம் கொடுப்பீங்களா ? என்றேன். யோசித்தார்! சார்.. எனக்கு நீங்க தரவேண்டியது 8.530 கிராம் தங்கம்! 8 கிராம் இங்க இருக்கு! மீதி 530மிலி கிராமுக்கு தங்கமா கொடுங்க .. அல்லது அப்படியே இன்றைய தங்கம் விலைக்கு காசா கொடுங்க! அப்பதான் நான் போய் வேற கடையில் அதைக்கொடுத்து அப்படியே தங்கமாக வாங்கிக்கமுடியும். எளிமையா இப்படி முடிச்சுக்குங்க! இதான் நியாயமும்கூட என்றேன். அவரும் ஆமோதித்துவிட்டு, ஒரு ஃபோன் பேசினார். பிறகு அவரே கீழ்த்தளத்துக்குச் சென்றார். திரும்பி வந்தார். என் கையில் 8 கிராம் தங்க நாணயமும், 1250 ரூபாய் பணமும் கொடுத்தார். மீதி சில்லறை 50 பைசா? என்றேன். பரிதாபமாகப் பார்த்தார். சரி சரி விடுங்க! நான் உங்க கம்பெனிக்கு 50 பைசா கொடுத்ததாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த தண்ணீர் டிஸ்பென்ஸரிலிருந்து ச்சில் என்று ஒரு டம்ளர் நீரை அருந்திவிட்டு வெளியே வந்தேன். #கேட்டால்கிடைக்கும்

by Surekaa Sundar

July 22, 2016 at 01:01AM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

6 comments :

 1. நல்லாச் செஞ்சீங்க.

  ReplyDelete
 2. இப்படி எல்லாம் கேக்க கவுரவம் பாத்துகிட்டு நிறைய இழக்கிறோம்.

  ReplyDelete
 3. இப்படித்தான் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 4. Monthly scheme in Gold shops are outdated saving option. Plz don't invest in gold. Gold is not right way for investment, use other available saving schemes in Bank or Mutual funds.

  ReplyDelete
 5. வணக்கம்
  அமேசான் தமிழ் இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் OFFERS மற்றும் COUPONS பற்றி தெரிவிக்கும் தளம்
  ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நண்பர்கள் இந்த தளத்தில் கிடைக்கும் கூப்பன் கோடுகளை பயன் படுத்தி, உங்களது பணத்தை மிச்சம் செய்யலாம்
  இந்த தளத்தில் Amazon, Flipkart, Snapdeal, Paytm, Freecharge, Jabong, Redbus, Pizzahut, Yepme மேலும் பல தளங்களின் OFFERS கிடைக்கிறது மேலும் விவரங்களுக்கு
  amazontamil

  ReplyDelete
 6. ஆன்லைன் DATA ENTRY செய்து சம்பாதிக்க வேண்டுமா ?
  ஆன்லைன் வேலை தேடி தேடி சலித்து ஏமாந்து போனவர்களுக்கு இந்த பதிவு ஒரு ஊக்கமாக இருக்கும்.அதிகப்படியான ஆசையே உங்கள் துன்பத்திற்கு காரணம் இங்கு நாங்கள் சொல்வதும் பார்த்ததும் அனுபவித்தும் இருக்கிறோம் .இப்பொழுது நாங்கள் ஏமாற்றம் என்ற நிலை இல்லாமல் அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க வைக்க முடியும் என்று உறுதி கூறுகிறோம். போதும் என்ற மனம் உள்ளவர்கள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக தினமும் ரூபாய் 200 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும். கண்டிப்பாக உங்கள் உழைப்பு முக்கியம் மேற்குறித்த தகுதிகள் உள்ள நபர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் .நன்றி .
  ஆன்லைன் வேலை மூலம் சம்பாதிக்க வேண்டுமா ?
  தேவையான தகுதிகள் :
  1.கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்.
  2.டைப்பிங் ஓரளவுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
  3.பொறுமையாக கற்று கொள்ளும் குணம் .

  வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

  மேலும் விவரங்களுக்கு
  Our Office Address
  Data In
  No.28,Ullavan Complex,
  Kulakarai Street,
  Namakkal.
  M.PraveenKumar MCA,Managing Director.
  Mobile : +91 9942673938
  Email : mpraveenkumarjobsforall@gmail.com
  Our Websites:
  Datain
  Mktyping

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...