Wednesday, February 1, 2017

நானும் ஒரு CHO !!

வாழ்வின் மற்றொரு பெரிய மைல் கல்லை எட்டியிருக்கும் நாள் இது! சென்னையில் இயங்கிவரும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான NURATECH LABS நிறுவனத்தின் தலைமை மகிழ்வதிகாரி (Chief Happiness Officer – CHO) ஆக நியமிக்கப்பட்டிருக்கிறேன். உலகெங்கும் உள்ள கிளைகளின் ஊழியர்களின் மகிழ்ச்சிக்கு உத்தரவாதமளிக்கும் உன்னதப்பணி அளிக்கப்பட்டிருக்கிறது ! இந்தப்பதவி ஏற்கும் முதல் தமிழன் என்ற மகிழ்வும், தென்னிந்தியாவிலேயே முதல் Chief Happiness Officer என்ற பெருமையும் கூடுதலாகச் சேர்ந்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கும் மேல் உடன் பயணித்த என்னை, உயர் பதவி கொடுத்து அழகு பார்க்கும் உன்னத உள்ளங்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். நண்பர்களிடம் நன்மைகளைப் பகிர்ந்துகொள்வதைவிட, மகிழ்வதிகாரிக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் ? மேலும், என் ஏனைய எழுத்து, பேச்சு, தொழில்முறைப் பயிற்சி நிகழ்வுகளும் எப்பொழுதும்போல் தொடரும். அனைவரது அன்புக்கும் நன்றிகளுடன் நாள் துவங்குகிறது !!

3 comments :

  1. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

    முகநூலை மூழ்க வேண்டாம் என்று சொன்னால் கோபித்துக் கொள்வீர்கள்... வலைப்பதிவிற்கு ஒரு தலைப்பு கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்... நன்றி...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...