உங்க அப்பாதான் கிழவன்! - Buddha Hoga Tera Baap..!






           தொலைக்காட்சிகளில் பார்த்த ட்ரெய்லரும், ராம் கோபால் வர்மாவே பொறாமைப்பட்டு, பூரி ஜெகன்னாத்தைப் பாராட்டி ட்வீட்டியிருந்ததும் படத்தின்மேல் ஒரு ஆர்வத்தைத்தூண்டியிருந்தது.


              பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறியைத்தூண்டியதற்கு இன்னும் ஒரு காரணம் இருந்தது. – அமிதாப் பச்சன்!


      ப்ரகாஷ் ராஜ் ஒரு லோக்கல் தாதா!  வெடிகுண்டுகளை பொது இடங்களில் வைத்து இன்பம் காண்பவர்! ஒரு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில், குற்றவாளியை மோப்பம் பிடித்து, ப்ரகாஷ் ராஜின் அடியாளை கைது செய்கிறார் போலீஸ் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சோனு சூட்! மிகவும் நேர்மையான அதிகாரியாக இருப்பதால், இரண்டு மாதத்துக்குள் மொத்த நகரத்தின் தாதா சாக்கடையையும் சுத்தம் செய்துவிடுவேன் என்று பேட்டி கொடுக்கிறார்.


      தன் ஆளை கைது செய்தது இல்லாமல், தன்னையும் நெருங்கி பிரச்னை செய்துவிடுவாரோ என்று கொதித்து, சோனுவைக் கொல்ல ஒரு ஆளை ஏற்பாடு செய்யுமாறு பணிக்கிறார் ப்ரகாஷ்ராஜ்.! அவர்களும் சோனுவைக்கொல்ல ஒரு சிறந்த ஆளை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.


      வந்து இறங்குகிறார் அமிதாப்! ஒரு பக்கா பழைய தாதா! ஏர்ப்போர்ட்டில் இறங்கும் காட்சியிலேயே அதகளத்தை ஆரம்பிக்கிறார். வரிசைல நில்லுங்க என்று போலீஸ்காரர் சொல்ல, ’நான் நிக்கிற இடத்தில் வரிசை ஆரம்பிக்கும்’ என்று சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது பச்சனின் பஞ்ச்!!


      ஒரு காபி ஷாப்பில் சார்மி, தான் மேட்ரிமனி சைட்டில் பார்த்த ஒருவனைச் சந்திக்க வர, அவன் உனக்கு செட்டாக மாட்டான் என்று உசுப்பேற்றுவதில் ஆரம்பிக்கிறது அமிதாப் – சார்மி நட்பு! தனது தோழியான மினிஷாவிடமும் அமிதாப்பை அறிமுகப்படுத்துகிறார்.


      கல்லூரிக்காலத்திலிருந்து மினிஷா லம்பாவை ஒருதலையாகக் காதலித்து வருகிறார் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சோனு சூட்…! இவர்களுக்கிடையே அமிதாப் அறிமுகமாகி, காதலை கனியச்செய்கிறார்., இந்நிலையில், போலிஸ் ஸ்டேஷன் வாசலிலேயே நிற்கும் ஜீப்பில் ஒரு பாமை வெடிக்க வைத்து, சோனுவை எச்சரிக்கிறார் அமிதாப்.!


           ஒரு கோவில் விழாவில் சோனு, தனது தாய் ஹேமமாலினியுடன் வந்து காரில் இறங்குகிறார். அப்போது அவரைச்சுட – ப்ரகாஷ்ராஜால் நியமிக்கப்பட்டு - காத்திருக்கும் கொலையாளியை காத்திருந்து சுட்டுவிட்டு, தான் யாரென்ற முடிச்சை அவிழ்க்கிறார் அமிதாப்!

அவர் சோனுவின் அப்பா! – இடைவேளை!


       சோனு குழந்தையாக இருக்கும்போதே ஹேமமாலினி- அமிதாப் பிரிந்துவிடுகிறார்கள். தன் மகனுக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது அவனைக்காப்பாற்ற வந்திருக்கிறார் அமிதாப்!

              பின்னர் ப்ரகாஷ்ராஜ் கூட்டத்துக்குள் நுழைந்து, சோனுவைக்கொல்ல அவர்கள் போடும் திட்டங்களை முறியடித்து, அனைவரையும் போட்டுத்தள்ளி...

 சுபம்!



 

அமிதாப் – தெய்வமே! என்று காலில் விழுந்துவிடலாம். அந்த அளவுக்கு நக்கலும் நையாண்டியும் விளையாடுகிறது. ஆக்ரோஷத்தில் அந்தக்கால அமிதாப் ஆடித்தீர்க்கிறார்.






ப்ரகாஷ் ராஜ் – இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு, கலக்கியிருக்கிறார் மனிதர்! வில்லனுக்கான ஆத்திரமும், அவசரமும்…..சூப்பர்! அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில்…’கண் கலங்க…..’ அப்ப போலீஸே வரலை! அத்தனை பேரையும் நீதான் சுட்ட…!. “ என்று கூறி முடித்து அழ ஆரம்பிக்கையில் அப்ளாஸை அள்ளுகிறார். ஹிந்தி வில்லன்களே …உஷார்!!





சோனு சூட் – அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். ஆனால் ரொமான்ஸுக்குக்கூட சிரிக்கமாட்டேன் என்று இருப்பது இடிக்கிறது. டைரக்டர் அப்படி எதிர்பார்த்திருப்பாரோ?






சார்மி – ரவீணா டேன்டன் – முறையே மகள் – அம்மா கேரக்டர்…கலக்கியிருக்கிறார்கள். படத்தின் நகைச்சுவைக்கு குத்தகை! அதுவும் ரவீணாவின் முகச்சுழிப்புகள் – பின்றீங்க மேடம்!



ஹேமமாலினி – அமைதியான அம்மா! பெரிதாக வேலை இல்லை! கொடுத்த வேலைக்கு பங்கமுமில்லை!






படத்தின் முடிவில்… அமிதாப்புக்கு சமர்ப்பணம் என்று போடுகிறார்கள்.

பூரி ஜெகன்னாத் ஒரு மிகச்சிற்ந்த பொழுதுபோக்குப் படத்தை கொடுத்திருக்கிறார். 

அமிதாப்புக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.




பெங்களூரில் சென்ற வேலை முடிந்தவுடன் ஞாயிறு இரவுக்காட்சியாக கொரமங்களா பி வி ஆரில் ஸ்க்ரீன் 7ல் பார்த்தேன். 9:25க்கு ஷோ என்று கூறி ..சரியாக வினாடி சுத்தமாக படம் போட்டார்கள். என்ன….? டிக்கெட்தான் 240 ரூபாய்!! ஆனால் அந்த மொத்த மாலும் படுசுத்தமாக இருக்கிறது.


Comments

  1. அமிதாப் – தெய்வமே! என்று காலில் விழுந்துவிடலாம். அந்த அளவுக்கு நக்கலும் நையாண்டியும் விளையாடுகிறது. ஆக்ரோஷத்தில் அந்தக்கால அமிதாப் ஆடித்தீர்க்கிறார்.


    // suuppar Sureka. நல்ல படம் போல தெரியுத். அடுத்த மாதம் பெங்களூர் போவேன் அப்போ அதே மாலில் ஒரு படம் பார்த்துடுறேன்..:)

    ReplyDelete
  2. வாங்க தேனம்மை! கண்டிப்பா பாருங்க!

    சென்னை இன்னும் நிறைய வளரணுமோன்னு தோணுது!!

    ReplyDelete
  3. அல்லோ பாஸ் இது என்ன ஆதவன் கதை மாதிரி இருக்கு பாஸ்:))

    ReplyDelete
  4. நல்லதொரு படத்தைப் பற்றிய நல்லதொரு விமர்சனம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. இடைவேளைல நானும் அதேதான் நினைச்சேன் குசும்பா! ஆனா.. அப்புறம் சுத்தமா மாறிப்போய் ....

    நல்லா வந்திருக்கு!!

    ReplyDelete
  6. வாங்க சீனா சார்!

    உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
  7. அதகளம் பண்ணியிருப்பார் அமிதாப்.. அவரோட பழைய படங்களைவிட இப்பத்திய படங்கள்தான் ரொம்பவும் வெரைட்டியா,.. ரசிக்கவைக்கும்படியா இருக்குது..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !