SUREKAA
SUNDAR
Home
Books
Blog
Writings
Book Now
நியாய நாய்
29 Sep 2011 · சுரேகா சுந்தர்
விபத்து நடந்து,
வினாடிகளில்
காணாமல் போகும்
நகைகளில்,
தொகைகளில்
இருக்கிறது
மனிதாபிமானப்
பிசாசுக்கும்
சுயநல
தெய்வத்துக்குமான
அமைதிப் போரின்
அநியாய வெற்றி!
வெற்றியின் ருசியில்
நாளைய
விபத்துக்காய்
நாக்கைத்
தொங்கப் போடுகிறது
நியாய நாய்!
← அடுத்த படைப்பு
அனைத்து படைப்புகள்
முந்தைய படைப்பு →