நம்ம ஊர் பக்கம் மொக்கச்சாமி மொக்கச்சாமின்னு ஒரு பையன்
இருக்காங்க..!
அவுக அப்பா பாவம்..ரொம்ப ஏழைப்பட்ட சீக்காளி..
அவன் +2ல நல்லா படிச்சுப்புட்டான்...அப்பா மாதிரி யாருக்கும் சீக்கு வரக்கூடாதுண்ணே..அதுக்காகவே டாக்டருக்குப் படிக்கிறேன்னு அரசாங்க மருத்துவக் கல்லூரில சேந்தாங்க..! படிச்சுட்டு என்னப்பு பண்ணுவன்னு...மேதாவித்தனமா நானும் கேக்க , நம்ம கிராமத்துல ஒரு ஆசுபத்திரி கட்டி சேவை (இடியாப்பம் இல்லங்கோ) செய்வேன்னு சொன்னாங்க..!
நானும் 'அடடா..என்ன ஒரு அக்கறையான புள்ளன்னு அகமகுந்து போயிருந்தேங்க..!
இடையில அவனப்பாக்கும்போது , அவனா வந்து பேசுவாங்க.. எப்புடி போகுது படிப்பெல்லாம்னு கேட்டா.உண்மையிலேயே நான் புண்ணியம் பண்ணிருக்கேண்ணே.பல பேரு லட்சக்கணக்குல செலவழிச்சு படிக்குற படிப்ப எனக்கு செல ஆயிரத்துலயே அரசாங்கம் குடுக்குதுண்ணே..மக்கள் கட்டுற வரிப்பணத்துலதாண்ணே நானெல்லாம் படிக்கிறேன்.. ஆனா..அதே
சலுகையை மார்க் வாங்கின ஒரே காரணத்துக்காகவும் கோட்டாலயும்
,சில டாக்டர் வீட்டு, பெரிய பணக்கார வீட்டு பசங்களும் அனுபவிச்சு
படிக்கிறாங்கண்ணே.. அதாண்ணே கொடுமை..! அப்டின்னு
பொலம்புவான்..!
இப்ப ஒருநாள், என் கெட்டநேரம்.. டிவி பாத்துக்கிட்டிருந்தேன்.. "ஆறரை ஆண்டு கால படிப்பாக மருத்துவப்படிப்பை மாற்றியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்..!
ஒரு ஆண்டு கால கிராமப்புற சேவை அநாவசியம் என்று ஆர்ப்பாட்டம்..! "னு அந்த டிவிக்கார அம்மா புதுக்கவிதை மாதிரி சொன்னுச்சா...அப்புடியே ஒரு காலேஜ காட்ட, அதுல மாணவர்களெல்லாம் ஆவேசமா பேட்டி குடுக்க வர, மொதல்ல தாவி வந்தது... அட! நம்ம மொக்கச்சாமி..!
அவன் சொல்றான்....எங்களை வாழவிடாது இந்த அரசாங்கம்..! இத்தனை வருஷம் படிச்சுப்புட்டு கஷ்டப்படணுமா..? கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் உருவாக்கிப்புட்டு எங்க்ளை அனுப்புங்க...இந்த சட்டத்தை வாபஸ் பெறலைன்னா..சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் னு ஒரே சவுண்டு...!
அப்புடியே சாச்சுப்புட்டான்ங்க..!
எனக்கு சில சந்தேகங்கள்..! உங்களை மாதிரி சிந்திக்கிறவுங்கதான் தீத்துவைக்கணும்..
1. இவுங்களை யாராவது இழுத்துப்பிடிச்சி நீதான் மருத்துவ உலகத்துக்குத்தேவைன்னு கூட்டிட்டு வந்தாகளா?
2. கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் இருந்தா உன்னய எதுக்குடா சேவை செய்யச்சொல்லி கெஞ்சுறோம்..?
3. மருத்துவ சேவையை மட்டும்தான் சேவைன்னு சொல்றோம்..ஆனா அது தொழிலா மாறி பல வருசமாச்சுன்னு வெளிச்சம் போட்டு காட்டத்தான் இந்த போராட்டமோ ?
4. கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..?
5. சினிமா டைரக்டராகணுமுன்னா, படாத பாடுபட்டு..,இணையாவோ, துணையாவோ பேரு வரணும்னாலே 5, 6 வருஷம் ஆகும்ங்க..! அப்புறம் முட்டி மோதி 10 வருஷமாயிரும். அவன் படைப்ப வெளில கொண்டுவர..! அந்த மாதிரி இல்லாம.. வெளில வந்தவுன்ன, ஒரு கிளினிக், ஒரு கார், ஒரு வீடு, ஒரு டாக்டரம்மா -நிச்சயம்னு தெரிஞ்சும்.. நம்ம மொக்கச்சாமி மாதிரி ஆளுங்க, அத ஒரு வருஷம் முன்னாடியே அடையணும்னு ஆசைப்படுறது ரொம்ப அநியாயம்தானுங்களே..?
6. இந்த படிப்பை மட்டும்தானே படிச்சு முடிச்சப்புறமும்... PRACTICE..ன்னு சொல்லுவாங்க..? அப்புறம்.. எங்க கிராமத்து ஆளுகள்கிட்ட அதைப்பண்ணித்தொலைக்க வேண்டியதுதானே..?
அதவிட பெருங்கூத்து...நம்ம 'கிழக்குவாசல்' , 'சூர்யவம்ச'மெல்லாம்...ஏதோ காந்திக்கு கொடைபிடிக்கப்போறமாறி போயி..அந்த டாக்டர்..குறிப்பா புள்ளங்ககிட்ட கடலை போடுறது..!பாவம் கிராமத்து ஆளுகளுக்கு எப்புடி தெரியும்? இவங்கள்லாம் நம்ம பயக இல்லின்னு..!
அமைச்சர் அன்புமணி பதவிக்கு வந்தது வேணும்னா விமர்சனத்துக்குரியதா இருக்கலாம்..ஆனா அவரு ரொம்ப நல்லதுதாங்க பண்றாரு...
அவர புரிஞ்சுக்காத இந்த எடுபட்ட பயலுக..கிராமத்துக்கு (அட..அதுக்கு ரூபா 8000 சம்பளம் வேறயாம்) போய் வேலை பாக்க மாட்டேன்னா.. காலேஜ விட்டுட்டு ..........க்கு போகட்டுங்க.!
அதுவும் முழுசா ஒரு வருஷம் கிராமத்தில் இருக்க வேண்டாமாம்...
முதல் நான்கு மாதங்கள் - மக்கள் தொடர்பு பயிற்ச்சி.. [கிராமம்]
இரண்டாம் நான்கு மாதங்கள் - மருத்துவ சோதனைப்பயிற்ச்சி [துணை நகரம்]
மூன்றாம் நான்கு மாதங்கள் - இறுதி கட்ட திறனாய்வு பயிற்ச்சி [நகரம்]
இப்பிடித்தான் ஒரு வ்ருஷம் கணக்காம்...!
அய்யா...அத விட பெரிய கூத்து.. அது இன்னும் சட்டமாகலையாம்....அதுக்கப்புறம் வெளில வந்து நின்னாலாவாவது பரவாயில்லயாம்..! அட படிச்ச கிறுக்கங்களா...!
ஆனா.. இந்த விஷயத்துல மட்டும் அரசாங்கம் எறங்கிப்போச்சு...அப்புறம் ஹவுஸ் சர்ஜனாவும் இருக்க மாட்டோம்னு போராட்டம் பண்ணுவாய்ங்க மொக்கச்சாமிங்க..!
ஒன்று மட்டும் நிச்சயம்.... அதிக சலுகைகள் காலப்போக்கில் உரிமைகளாக கையாளப்படும் அவல உலகில் இருக்கிறோம்..!