சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
03 Jan 2011அழைப்பு

மீண்டும் ஒரு நற்செய்தி!

இனிய நண்பர் கேபிள் சங்கரின் சிறுகதைத்தொகுப்பான ‘ மீண்டும் ஒரு காதல் கதை’ நாளை (4.1.11) மாலை டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்படுகிறது. அனைத்து நண்பர்களும் வந்திருந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.





விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுபவர்
பேராசிரியை : திருமதி. பர்வீன் சுல்தானா அவர்கள்
கலந்து கொண்டு சிறப்பிப்பவர்கள் :  இயக்குனர் திரு. சீனு ராமசாமி
ஒளிப்பதிவாளர்: திரு.செழியன்
நடிகர் : திரு. ஆர்.மோகன்பாலு


பதிவர்கள்
அப்துல்லா
லக்கிலுக் (யுவகிருஷ்ணா)
விதூஷ் வித்யா
ஆதிமூலகிருஷ்ணன்.
அகநாழிகை வாசுதேவன்

தேதி : 4/01/11
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : டிஸ்கவரி புக் ஸ்டால்
                நெ.6. முனுசாமி சாலை
               கே.கே.நகர். சென்னை

தனிப் பக்கத்தில் காண →
28 Dec 2010நடப்பு

நீங்கதான் சாவி - புத்தகவெளியீட்டு விழா புகைப்படங்கள்!

 புத்தகத்தை திரு.சீமான வெளியிட, திரு.மனோஜ் கிருஷ்ணா பெற்றுக்கொள்கிறார்.

அனைவரும் கையில் புத்தகங்களுடன்...

 புத்தகத்தில், தான் படித்தவற்றைப்பற்றி, தெளிவாகவும், அழகாகவும் திரு.சீமான் பேசினார்.

 வந்திருந்த அன்பு நண்பர்களும், பதிவர்களும்.... ( சீமான வருவதற்கு முன்)

கூட்டத்தில் ஒரு பகுதி... (சீமான் வந்து சென்ற பின்)


புத்தகவெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்! மின்னஞ்சல் மூலம் வாழ்த்துத்தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
தனிப் பக்கத்தில் காண →
20 Dec 2010அழைப்பு

ஒரு நல்ல செய்தி!

     சிறுவயதில் எல்லோருக்கும் அறிவுரை சொல்லும் சிலரைப்பார்த்திருக்கிறேன். அப்படிச் சொல்பவர்கள், தான் சொல்லியபடி நடந்துகொள்கிறார்களா என்றால், அதுவும் இருக்காது. ஆனால் தன் கடமையை விடாமல் செய்வார்கள். அறிவுரை கேட்டவர்கள் உண்மையிலேயே அதை எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்து, வளர்ந்துவிடுவார்கள். அறிவுரை சொன்னவர், இன்னும் சொல்லிக்கொண்டிருப்பார். வளர்ந்தவர்கள் மீண்டும் அவரிடம் வந்து கேட்பார்கள். அதைப்பார்த்துவிட்டு , அறிவுரை சொல்வதில் ஒரு போதை ஏற்பட்டது. ஆனால் ஒரு சிறிய மாற்றமாக, ’நாமும் வளரணும், அடுத்தவங்களுக்கும் அறிவுரை சொல்லணும்’ என்று எண்ணிக்கொண்டு, சின்னச்சின்ன விஷயங்களில் சரியாக இருக்க ஆரம்பித்தேன்.

        எது சரி, தவறு என்று பல்வேறு புத்தகங்கள் கற்றுக்கொடுத்தன. எப்படி கற்றுக்கொடுக்கவேண்டுமென்று ஜேஸிஐ ( Junior chamber International) மிகவும் உதவியது.தன்னம்பிக்கைப் பயிற்சியாளனாக 8 ஆண்டுகள் ஓடிவிட்டது. இன்றுவரை என்னைச் சரி செய்துகொண்டுதான் இருக்கிறேன். . யாருக்காவது அறிவுரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். என் குறை என்று எண்ணிய -அதிகம் பேசும்-  குணத்தை ,பல்வேறு தலைப்புகளில் நாள்கணக்கில் பேசும் அளவுக்கு நிறையாக , வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. சொல்லும் விஷயங்களையே எழுத ஆரம்பித்தபோதுதான் , நாகரத்னா பதிப்பக உரிமையாளரும் நமது பதிவருமாகிய குகன் அவர்கள், ஒரு சுயமுன்னேற்றப்புத்தகம் எழுதுங்கள் என்று பணித்தார். அதன்படி , சின்னச்சின்ன கட்டுரைகள் அடங்கிய ஒரு புத்தகம் இப்போது தயார்!


    
    ஆம் நண்பர்களே! ‘நீங்கதான் சாவி!’ என்ற தலைப்பில் , நாகரத்னா பதிப்பகம் வெளியிடும் எனது புத்தகம் வரும் 25ம் தேதி , சனிக்கிழமை மாலை 4:30க்கு , நமது டிஸ்கவரி புத்தக அரங்கில் வெளியிடப்பட இருக்கிற்து. புத்தகத்தை திரு.சீமான் அவர்கள் வெளியிடுகிறார். அவருக்கு அடுத்ததாக 5.30க்கு மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் ஒரு பொதுக்கூட்டம் இருப்பதால் குறித்தநேரத்தில் கூட்டம் ஆரம்பித்துவிடும். 

        தாங்கள் அனைவரும் , கண்டிப்பாக வந்திருந்து விழாவினை சிறப்பித்துத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முகவரி:

டிஸ்கவரி புக் பேலஸ். 
எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே கே நகர் மேற்கு. சென்னை- 78
செல்- 9940 44 6650

தனிப் பக்கத்தில் காண →
26 Nov 2010அழைப்பு

கால ஓட்டத்தில் காணாமல் போனவை !










அதெல்லாம் அந்தக்காலம்’
என்று அங்கலாய்க்கும் மனோபாவம்
அனேகமாய் எல்லோருக்கும்
ஆங்காங்கே வருவதுண்டு!

அடிப்படைக்காரணமாய்
சிறுவயதில் சிறப்பாக
நீங்கள் பார்த்த ஒரு விஷயம்
மாறிப்போய் வந்திருக்கும்!

கால ஓட்டம் அதன் காரணமாய்
கட்டாயம் இருந்திருக்கும்!

எத்தனையோ ஆண்டுகள்
உங்கள் உணர்வோடு கலந்துவிட்டு
இப்போது திடீரெனறு
இல்லாமல் போய்விட்ட
அவ்விஷயம் உங்களுக்குள்
தாக்கங்கள் தந்திருக்கும்!


மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும்
மாறியவை என்னவென்று
மறக்காமல் இருப்போம் !

வேப்பங்குச்சிகள் செய்துவந்த
பல்விளக்கும் வேலைதன்னை
பிரஷ்கள் தட்டிப்பறித்ததுபோல்

நெற்றிப்பொட்டாய்
ஜொலித்திட்ட சாந்தை,
ஸ்டிக்கர் பொட்டு
சாய்த்ததுபோல்

கெந்தி விளையாடும்
கில்லிதாண்டை
கிரிக்கெட் ஆட்டம்
கெடுத்ததுபோல்

கடிதம் எழுதும்
அழகுதன்னை
கையில் செல்போன்
பறித்ததுபோல்....


டிக்கெட் எடுத்து
விசிலடித்து
பார்த்த திரையரங்கைடிவிடியும் , விசிடியும்
வீழ்த்தியதுபோல்


ஆப்ரகாம் பண்டிதர் தெரு
நண்பனை நேரில்
வைத்துக்கொண்டே
அமெரிக்க புதியவனுடன்
சாட்டுவதுபோல்,





எத்தனை எத்தனை
மாற்றங்கள்!

கல்கோனா,
கட்டை வண்டி
பெல்பாட்டம் பேண்ட்
பெட்ரோமாக்ஸ் விளக்கு
ஆடுபுலி ஆட்டம்
அம்புலிமாமா புத்தகம்
ஐந்து பைசா நாணயம்
ஆரஞ்சு மிட்டாய்
சாவி கொடுக்கும் கைக்கடிகாரம்
சக்கரங்களாகும் பனங்காய்
பல உருவம் எடுக்கும் பாம்பே மிட்டாய்
கும்பலாய் கூடாரம் போடும் சர்க்கஸ்
எருமலை போன்ற குழந்தைகள் திரைப்படம்


 என
காலஓட்டத்தில் நாம் கடந்து வந்த
விஷயங்கள் !

அது ஒரு பொருளாக இருக்கலாம்
செயலாக இருக்கலாம்!
விழாவாக இருக்கலாம்!
விளையாட்டாக இருக்கலாம்!

விலங்ககாக இருக்கலாம்!
உணவாக இருக்கலாம்!
உடையாக இருக்கலாம்!
வாகனமாய் இருக்கலாம்..!

எதுவாக இருந்தாலும்
இதயத்தில் தோன்றுவதை
எழுத்தில் கொண்டுவாருங்கள்!


அப்படியே அதன் லிங்கை எனக்கும் பின்னூட்டமிடுங்கள்!
அனுபவம் ஒன்று காத்திருக்கிறது!
அவரவர் பெயர்களுடன்!


(ஏற்கனவே எழுதியிருந்தாலும் அனுப்பலாம்)

எடுத்துக்காட்டாக....

  - புதுகைத் தென்றல்


 - மங்களூர் சிவா


--          வெண்பூ

-பரிசல்காரன்
தனிப் பக்கத்தில் காண →