
அது ஒரு
தொடர்வண்டி நிலையம்!
அவன் எங்கோ போகவேண்டும்
அவளும் வந்திருந்தாள் வழியனுப்ப!
திருமணம் ஆன புதிது!
விட்டுச்செல்ல மனமில்லை!
விலகி இருக்கவும் திறனில்லை!
கண்கள் கலங்கவும்,
கைகள் நடுங்கவும்,
ஒருவரை ஒருவர்
உயிராய் உருகி
ஒன்றிப்போய் பார்க்க்கிறார்கள்.
அந்தச்சிறு அணைப்பிலேயே
அழுத்தம் கொடுத்து
சொல்லுகிறான்.
கவலைப்படாதே!
நிறைய நாட்களில்லை!
சீக்கிரம் வந்துவிடுவேன்.!
நீங்கள் செல்வதே
எனக்கு நரகம்தான்!
அப்புறம் என்ன
கொஞ்சம் ,நிறைய ?
கண்ணீர் உகுத்து
கரைகிறாள் அவள்!
வண்டி புறப்படும்
நேரம் வர
மனமின்றி அவனும்
ஏறி விட
புறப்பட்ட வண்டியையே
நீர் படரப் பார்க்கிறாள்!
அவ்விடத்திலேயே நின்று
ஆசுவாசப்படுத்த,
வண்டியும் சென்றுவிட..
அதிசயமாய் எதிரில்
பெட்டியுடன் அவன்!
ஓடிப்போய் முத்துகிறாள்!
என்னவனே!
இவ்வளவு காதலா?
என்னைவிட மனமிலையா?
நான் என்ன தவம் செய்தேன்?
இப்படி நீ இருப்பதால்தான்
இதயம் முழுதும் நிறைகின்றாய் !
இறுக்கமான முகத்துடன்
அவன் சொன்னான்..!
அதெல்லாம் சரி!
வண்டியின் டிக்கெட்டை
உன் பைக்குள் வைத்திருக்கிறாய் !
இனியெப்படி போவது?