அய்யனாரே! என்று சொல்லி படையல் படைக்கும்போதும், வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு கேட்கும்போதும், என்றாவது ஒருநாள் ஊருக்குள் அழைப்பார்கள் என்றுதான் நானும் நம்பிப்போய் நின்றுவந்தேன்.
காவல் தெய்வம் என்று கவனமாய்த் தள்ளிவைத்து, ஊர்வலத்தில் வர இயலா உருவத்தைக் கொடுத்துவிட்டு, குதிரையொன்றை நிற்கவைத்து, கூரைகூடக் கட்டாமல் கொண்டாடி நடிக்கிறார்கள்.