மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ன்னு காச் காச்ன்னு கத்திக்கிட்டே இருந்தாலும் கான்கிரீட் பில்லரும் மரம் மாதிரிதானே இருக்குன்னா கன்னா பின்னான்னு வீங்கிக்கிட்டே போகும் பூமில.... முப்பது வருசத்துக்கு முன்னாடி தோட்டக்கலை மூலமா சிறு மரங்களை பயிரிட்டு, ஆராய்ச்சி செஞ்சு பல்வேறு பண்ணைகளை உருவாக்க முன்னோயா இருக்கணும்னு .. அண்ணா பண்ணைன்னு ஒரு பண்ணையை புதுக்கோட்டைக்கிட்ட குடுமியான் மலைல தோட்டக்கலைத்துறை மூலமா அரசாங்கம் உருவாக்கியிருக்கு! (எம்.ஜி.ஆர் அரசு என்று கேள்வி)
அது ஒரு காலத்துல சோலைவனமா இருந்துச்சு!
இனிமே இது வரண்ட மாவட்டமில்லை! வளங்கள் அனைத்தும் திரண்ட மாவட்டம்ன்னு அடுக்குமொழி வசனமெல்லாம் பேசினாங்க!
அண்ணா பண்ணைக்கு கல்விச்சுற்றுலாவா பசங்க எல்லாம் போய்ட்டு வந்த காலமெல்லாம் உண்டு.!
விவரம் தெரியாத வயசுல ஒரு தடவை பஸ் அந்தவழியா போகும்போது பாத்திருக்கேன். பள பளன்னு நிறைய கட்டிடங்களும், மரங்களுமா வளமா பாத்த ஞாபகம் அலையடிக்குது !
இங்கதான் இருக்கே பாத்துக்கலாம்ன்னு...இவ்வளவு வருஷமா ஓட்டிட்டேன். ( பக்கத்துல இருக்குற அற்புதமான ஆள், பயனுள்ள பொருள், புகழ்பெற்ற இடத்தோட மகிமை எப்பத்தான் நமக்கு தெரியப்போகுதோ?) அன்னிக்கு அந்த வழியா வேலை இருந்ததால, வண்டிய விட்டேன்.
அண்ணா பண்ணைங்கிற அந்த வரவேற்பு வளைவை பாத்ததுமே பக்குன்னு இருந்துச்சு! போகப்போக பல அதிர்ச்சிகளை நான் சந்திக்க வேண்டி இருந்தது.

நீங்களே பாருங்க..! பல கோடி ரூபாய் பொருள் செலவுல, அரசு நல்லது பண்ணலாம்ன்னு யோசிச்சு செய்ய ஆரம்பிச்ச திட்டத்தோட இப்போதைய
நிலமைய! ரொம்ப கொடுமை என்னன்னா..பல கட்டிடங்கள்ல ஆள் நடமாட்டமே கிடையாது. இதுலதான் பயிற்சிக்கூடமும் இருக்கு..! அதுல என்ன பண்றாங்கன்னே தெரியலை!

அந்த பிரம்மாண்டமெல்லாம், வேலையே நடக்காம அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்கும் முந்திரி மரங்களோட முடிஞ்சு போயிடுது..!