அய்யா..
ஏம்பேரு கந்தக சாமி!
பொறந்த எடம் பூமிதாஞ் சாமி!
நான் வானத்தில் இல்லாத சாமி
ஆனா வாணம் செய்யுற சாமி!
நாம்பாட்டுக்கும் செவனேன்னு
நல்லகாலம் பொறக்குமுன்னு
மண்ணுக்குள்ள மகிழ்ச்சியா
மக்கிக்கெடந்தேன் சாமி!
என்னயத்தேடிவந்து
எக்குத்தப்பா நோண்டித்தந்து
எதுக்காவது பயன்படுவேன்னு
எப்படியோ கண்டுக்கிட்டாங்க.!
மொதல்ல நாம்பாட்டுக்கும்
மொறயாத்தான் இருந்தேன்.
பொறவியிலேயே நமக்கு
கோபம் கொஞ்சம் அதிகம் சாமி!
அதப்போய் மறந்துப்புட்டு
அடக்கிவச்சு அடக்கிவச்சு
அழுத்தமா மூடிவச்சு
ஒருநாள் வெடிக்கவச்சு
ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்டாங்க!
நானும் சும்மா இல்ல..
நாலஞ்சு பயலுகளை நயமா
நரகத்துக்கனுப்பிட்டு..
அதெப்புடி நரகம் னு
அசதியா கேக்குறீகளா?
என்னய தூக்கிப்போட்டு
எகனை மொகனையா
வெளயாண்டவன்
எப்புடி சாமி சொர்க்கம் போவான்?
நல்லதே நடக்காதான்னு
கலங்கிப்போய் கெடந்தப்பதான்
பளபளப்பா எரிய வச்சு
பட்டாசா மாத்தி என்னை
பார்புகழ வச்சாங்க.!
சிவகாசிப்பக்கம்
அந்த சின்னப்புள்ளைங்க
என்னைத்தொட்டு
வேலைபாத்து
அவுக தாத்தா பட்ட கடன
தடுமாறி அடச்சாங்க!
அதுல ஒரு கொடுமை சாமி!
ஏங்கொணம் எனக்கே பிடிக்காது.
மனுசப்பய மாதிரியே
எங்க இருக்கோம்னு தெரியாம
ஏறிக்குதிச்சுப்புடுவேன்.
அப்புடித்தான் செலபேர
அழிக்கவேண்டியதா போச்சு!
எல்லாப்பயலுக்குள்ளும்
எங்கேயோ நான் இருக்கேன்
கோபம் சேமிக்காம
கொதிச்செழுந்து வர்றவனும்
கோபத்துக்கே பொறந்த நானும்
கிட்டத்தட்ட ஒண்ணுதான்!
நல்லவன் ஒருத்தன
நசுக்க நெனக்கிறவன்
ஒருத்தன குறிவச்சு
ஒரு கூட்டம் கொல்லுறவன்
அத்தன பேருந்தான்
என்னோட மொதலாளி!
ஆனாலும் பலதடவை
அவனுக்கே நான் கொலையாளி!
நாட்டு வெடிகுண்டா
நெறய நாள் இருந்திருக்கேன்.!
நக்ஸலைட் பொக்கிஷமா
நாந்தானே எப்பவுமே!
சீனாக்காரன் என் சித்தப்பா
மொறவேணும்
ஆனா இந்த அமெரிக்கா.?
அண்ணன் மொற வேணும்.!
என்னய விட மோசமா
இடம் பொருள் பாக்காம
எதுத்தவன அடிக்கும் பய!
இப்பல்லாம் நமக்கு
வயசாகிப்போச்சு சாமி!
இளந்தாரிப்பயலுக
பலபேரு வந்துட்டாய்ங்க!
டெட்டனேட்டர் பூதம்கிறான்
ஆர் டி எக்ஸ் ங்குறான்!
பாஸ்பரஸ் பாமுங்குறான்!
பெட்ரோல் வெடிகுண்டுங்குறான்!
டைனமைட்டுன்னு ஒரு
சாத்தான செஞ்சவரு
தப்பால்ல போயிருச்சுன்னு
நோபல் பரிசு செஞ்சு
நல்லபேர வாங்கிக்கிட்டாராம்.!
என்னய கண்டபய
என்ன புண்ணியம் செஞ்சாலும்
என் பாவம் கழுவ
இன்னும் எவனும் பொறக்கல !
ஆனாலும் நாந்தான் சாமி
அத்தனைக்கும் மூத்த சாமி!
ஏன்? னு கேளு சாமி
எனக்கப்புறம் இங்க
எத்தனைபேர் வந்தாலும்
மொதல்ல வெடிச்சது
நாந்தான் சாமி!
இருந்தாலும் எனக்கு
மனசு கொதிக்குது சாமி!
எத்தனை பேரை
கொன்னுருப்பேன்!
எத்தன நிம்மதி
தின்னுருப்பேன்!
இதெல்லாம் வேணாம்னு
இப்பவே முடிவெடுத்து
என்னய மறுபடியும்
எடுத்த எடத்துலயே
புதைங்க சாமி!
அப்படிச்செய்யலைன்னா
அதுவரைக்கும்...
ஆக்கலுக்கு யாருன்னு
அடிச்சுக்குங்க சாமி!
14 Feb 2012ட்விட்டுரை
ட்விட்டுரை # 2
எனது பல்வேறு காலகட்ட கீச்சுக்களின் தொகுப்பு :
அக்கா..வீட்டிலியே இருந்தா வெளிச்சொத்துக்களை யாரு பாத்துப்பா? _அப்ப சரி!! குடும்பத்தோட வெளில போய் பாதுகாத்துருங்க! - அப்ப மக்கள்? ஹெஹெஹெ!!
சொத்துக்குவிப்பு வழக்கில், அப்ரூவரானா அல்வாக்கடை வச்சுத்தரேன்னாரு வூட்டுக்காரரு...நான் வரேன்க்கா!! #யாருடீ இவுங்களை வெளில அனுப்பிச்சது?
முல்லைப் பெரியாறை விட்டுட்டு மன்னைப் பெரியோரை நினைக்கும் இந்த தமிழ்க்கூட்டம்..!! கிடைத்த கேப்பில் கட்டையப்போடுடே சாண்டி!!
நானே எப்படிடா வெளில போலாம்... இதுவரைக்கும் அமுக்கினதை அனுபவிக்கலாம்னு நெனச்சிக்கிட்டுருந்தேன்.மவராசி..தானே கழட்டிவுட்டுட்டா! #யாரு?யாரோ!
காந்தித்தனம் நன்றுதான்… எதிராளி ஆங்கிலேயனாக இருக்கும் பட்சத்தில்..! இந்தியனென்றால்..டையர்த்தனம்தான் நல்லது..#ச்சுட்டேபுடணும்!
பணக்கார பையனை காதலிக்கும், அழகான பெண்ணை காதலனுக்கும் அறிமுகப்படுத்துங்கள்!அப்புறம் என்ன ? Break Up தான்! ஸ்வீட் எடு கொண்டாடு #Breakup Idea
அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமான்னு கேட்டால்...ரெண்டுபேரையுமே பிடிக்காது முகத்துக்கு நேராகச் சொல்லும் நேர்மையான பாப்பாதான் நாளைய VIP
இனி ஒரு விதி செய்யப் புறப்படும் மருத்துவ விஞ்ஞானியின் வேலை. இனி ஒரு வியாதி செய்வது!! - இது என் 9ம் வகுப்பில் எழுதியது!!
நீங்கபாட்டுக்கு மலைக்குப் போறேங்கிறீங்க? நாங்க இங்க ஒரு பெரிய பிரச்னைக்கு பிச்சிக்கிட்டிருக்கோமே மேdam!!
30
நாளில் 3000 கோடி செலவழிக்கணுமா அருணாச்சலம்!! # டேய் அண்ணனை பஸ்ஸில் ஊரைச்சுத்திக்காட்டி , பால் வாங்கிக்குடு!
ஊழலை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது - சோனியா # ஏன் இந்த திடீர்த் தற்கொலை முடிவு?
அணு உலை வேணுங்கிற அப்பாடக்கரெல்லாம் அங்கயே உக்காந்துக்கவேண்டியதுதானே? சொல்லிட்டு டெல்லிப்பக்கம் ஓடிர்றானுங்க! #நீங்க இருந்து காட்டுங்க!
பள்ளி இருக்கும் நாளில் 7:30 மணிக்கு எழுப்ப பெரிய போரே நடக்கும்..! லீவுன்னு சொன்னவுடனே பயபுள்ளை 6 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஆட்டம்.!.#சேட்டை மகன்.
எது எப்படியோ? இன்னிக்கு ஒரு சொந்தக்காரப்பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சு அவன் வாழ்க்கையை சீரழிச்சாச்சு!
அப்பாடா!
மயக்கம் என்ன : அடுத்தவன் காதலியை சுடலாம்.. நம்ப படத்தை அடுத்தவன் சுடப்புடாது..! இதுதான் கருத்து.. இல்லையா யுவர் ஆனர்? #டவுட்டு
நான் ஏன் எந்தக்கருத்துமே சொல்லாம ‘மண்’ மோகனா இருக்கேன்னு தெரியுதா? ஏதாவது பேசினா அடிக்கிறாய்ங்க! இல்ல சரத்து? #யாரு? யாரோ!
800
ஆண்டு பழமையான அனுமார் கோவிலை எப்படிச் சுருக்கமாகச் சொல்வது? ‘மாருதி 800’ !! # முடியல!




