மங்களூர் சிவாவுக்கு ஒரு முரட்டு பின்னூட்டம்
மங்களூர் சிவா போட்ட இந்தப்பதிவுதான், இந்தப்பதிவுக்குக்காரணம்.. முதலில் எனக்கு பார்த்திபனின் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது! வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் செத்துதான் தொலைப்போமே! செத்து என்ன செய்யப்போகிறோம் வாழ்ந்துதான் தொலைப்போமே! இதில் இரண்டு விஷயங்களை அலச வேண்டியிருக்கு! முதல்ல.. ஆண் பெண் உறவுமுறை .. (ஏன்னா இதுதான் அதிகபட்ச உணர்ச்சிவசப்படலுக்கான காரணி) அடுத்து..தற்கொலை ! இந்த ஆண், பெண் உறவுமுறையை நாம சரியா பாக்கலைங்கறதுதான் பெரிய கொடுமை! அது, அன்றாடம் சம்பாதிச்சு வாழ்க்கை நடத்துறவனா இருந்தாலும் சரி! அடுத்த ஜென்மத்துக்கும் சேத்து சம்பாதிச்சு வச்சு சொகுசு வாழ்க்கை நடத்துற ஆளா இருந்தாலும் சரி..(என்ன இருந்தாலும் மூதாதையர் ஒண்ணுதானே ! ) அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பிடிச்சுப்போய். திருமணம் செய்தோ, இல்லாமலோ சேர்ந்து வாழத்துவங்குகிறார்கள்.முதல்ல எல்லாம் சுமுகமாத்தான் போயிக்கிட்டிருக்கும். ஒருத்தர் குறை இன்னொருத்தர் கண்ணுக்குத்தெரியும் வரை ! இந்த இடத்தில் அன்னை தெரசாவின் வாக்கியம் ஞாபகம் வருது.! ' குணத்தைப்பார்க்கத்துவங்கிவிட்டால் நம்மால் அன்புகாட்ட முடியாது! '