சிறு மூளை
உடனே ஒட்டும் பசை விளம்பரம்! பார்த்துக்கொண்டிருந்த மகன் கேட்டான். அப்பா! அது எல்லாத்தையும் ஒட்டுமா? ஆமாம் என்றேன். போனை? ஆமாம்! நோட்டை? ஆமாம்! கார் பொம்மையை? ஆமாம்! அப்புறம் ஏன் அது வச்சிருக்கும் குப்பியில் ஒட்டிக்கலை? 24மணி நேர மருத்துவமனை! வாசலில் பலகை பார்த்து கேட்க ஆரம்பித்தான். எல்லா நேரமும் திறந்திருக்குமா? ஆமாம்! நடுராத்திரி? ஆமாம்! தீபாவளிக்கு? ஆமாம்! ஞாயிற்றுக்கிழமை? ஆமாம்! அப்புறம் ஏன் வாசல்ல கதவு வச்சிருக்காங்க? இவர்களுக்கு பதில் சொல்ல மூளைக்கு என்ன செய்ய?