இலவசங்கள் வசப்படுமா?
உங்களுக்காக இவ்வளவு விஷயங்களை இலவசமாகச் செய்திருக்கிறோம். எங்களையா வீழ்த்தவேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் ஒரு பக்க விளம்பரம் ஒன்றை நாளிதழ்களில் தந்திருக்கிறது. மிகவும் அபத்தமான கையேந்தலாகத்தான் இதைப் பார்க்கமுடிகிறது. இலவசமாக ஒரு பொருளைத்தருவதற்குமுன் தனி மனிதனின் கணக்கொன்று உண்டு. உண்மையிலேயே பிரதிபலன் பார்க்காமல் அவனுக்குத்தந்துவிடுவது.! அல்லது இவனால் கட்டாயம் காரியம் ஆகும் என்று இலவசமாக அதைத்தருவது! இதில், கலைஞரின் இலவசங்களுக்குப் பிண்ணனி என்னவென்று எல்லோருக்கும் தெரியும். என்றுமே மனிதர்கள் தன் தவறுகளை மறைக்க தானத்தில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், அது தன் பணத்தில்தான் இருக்கும். இவரோ, தன் குடும்பத்தினர் அனைவரது ஆக்கிரமிப்பும் கட்சி, சமூகம், அரசு அலுவலகங்கள் என்று சந்துபொந்தெல்லாம் வியாபித்திருப்பதை மறைக்க, இதோ இலவசம் ! அதோ இலவசம் என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கென்ன? சொந்தப்பணமா? அரசுதான் டாஸ்மாக் மூலம் அள்ளிக்கொடுக்கிறதே! இது உன் வீட்டைக் கொளுத்திக்கொள்கிறேன். அதில் கிடைக்கும் காப்பீட்டுத்தொகையில் உனக்கு உணவு வாங்கித்தருகிறேன் என்பதைப்போல் இருக்க