Posts

Showing posts from March, 2011

சித்தப்பா

சிறுவயதில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு உறவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் நடை,உடை, பாவனைகள் எல்லாவற்றையும் கவனித்து அதைப்போல நடக்க நினைப்போம் அல்லது அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்.அப்படி ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மாமா , மூத்த அண்ணன் , சித்தப்பா போன்ற உறவுகள் அமைந்திருக்கும். அப்படி எனக்கு அமைந்த உறவுதான் அவர்! என் அப்பாவின் கடைசித்தம்பி! என் அப்பாவுக்கு அடுத்து அவர்தான் பையன் என்பதால், என் பெரியப்பா மகன்களுக்கு இரண்டு, மூன்று சித்தப்பாக்கள் இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரே ஒரு சித்தப்பாதான்! ஆக, மற்றவர்கள் அவரை ’சின்ன சித்தப்பா’ என்று அழைக்கும்போது, நான் மட்டும் சித்தப்பா என்றே அழைப்பேன்.       எனக்கு விபரம் தெரிந்து அவரை நான் பார்த்தது நாங்கள் இருந்த கலியாப்பட்டி என்ற ஊருக்கு அவர் வந்துசென்றபோதுதான்! ஆனால் அப்போது நான் மிகவும் சிறுவன்! முகத்தையோ நடவடிக்கைகளையோ அவ்வளவாக கவனிக்கவில்லை. பின்னர் நான் மூன்றாவது படிக்கும்போது , அவருக்குத் திருமணம் என்ற பேச்சுக்கள் வந்தபோதுதான் அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன். சொந்த ஊரான கறம்பக்குடிக்கு செல்லும்போது பார்த்தால் , க

பெண்மையே.. பெண்களே..வாழ்க நீங்கள்!

Image
    நம் உலகத்தை அன்புமயமாக்கிய அத்தனை பெருமையும், பெண்களையே சேரும். அவர்களது தாய்மை, சகோதரத்துவம், நட்பு பாராட்டுதல், பாசம்,அன்பு, நேர்த்தி இல்லாமல் ஆண்களின் வாழ்வு சூன்யமாகவே இருந்திருக்கும்.. என் வாழ்வில் நட்பாக, உறவாக உள்ள பெண்களின் பட்டியலில்.. 2008   2009   2010   இவர்கள் போக, மேலும், இந்த ஆண்டில் நட்பு காட்டும் ரேவதி வர்மா தேஜாஸ்ரீ நமீதா ஆருஷி கவிதா ரம்யா மற்றும் அன்புநிறை பதிவர்கள் அகிலா ஸ்ரீராம் மதார் உமா மற்றும் வேலையிட நண்பர்கள் ரமணி சித்ரா ஜானகி சுதா சௌம்யா ஆகிய … என் வாழ்வை அர்த்தப்படுத்தும் அத்துனை பெண்களுக்கும் இந்த பெண்கள் தினத்தில்  எனது உளமார்ந்த அன்பையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன். பெண்களே..பெண்மையே வாழ்க நீங்கள்!

மூன்று வரித்திரைப்படங்கள்

திரைப்படங்களை மூன்றுவரிகளில் எழுதிப்பார்க்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதன் பாதிப்பாக..... சேவல் சண்டையில் குருவின் அடிமை! அவரின் துரோகம் தெரிந்ததே கொடுமை! காட்டிக்கொடுக்காத சிஷ்யனின் நேர்மை இவனின் தொழிலே திருட்டு! போலீஸென நினைத்து எதிரியின் விரட்டு! அவராய் மாறி வில்லனை மிரட்டு! ஊர்சுற்றி லூட்டி அடித்தான் டுட்டோரியலில் தொழில் படித்தான் காதலியைக் கைப்பிடித்தான்! பொது இடத்தில் வெட்டுண்ட கை போலீஸால் தேடப்படும் மெய்! பழிவாங்கும் குடும்பத்தை உறுதி செய்! கண்டுபிடித்ததை பின்னூட்டமிடுங்கள்