Posts

Showing posts from May, 2009

உன்னை நாங்கள் கொன்றுவிட்டோம்!

விபரம் தெரிந்து விளையாடும்போதெல்லாம் வீரத்துக்கு உன்னைதான்நினைப்பேன் ! எதிரிகளை எப்படி கையாள்வது என்று உன் யுக்தி கண்டு ஊரெங்கும் சொல்லுவேன்! தங்க இடமின்றி தடுமாறியதலைமுறைக்கே தலைவன் நீயென தற்பெருமை கொள்ளுவேன்! உன் எல்லாச்செயலிலும் நியாயம் கண்டுபிடித்து உனக்கே சொன்னால் மகிழ்வாய் என்றெண்ணுவேன்! நீ செய்தது தவறாகவே இருந்தாலும் செய்தது நீ என்பதால் சரியென்று வாதிடுவேன். துன்பியல் சம்பவமென்று துணிவுடன் கூறியதற்கு என்ன ஒரு தமிழ் வார்த்தை என்று எக்காளம் பேசிடுவேன்! எப்படி ஊடுருவினாய் அண்ணனே! எல்லா இதயங்களிலும் எந்தவிதச் சிரமமுமின்றி!? நீ இறந்துவிட்டாய் என்று வரும் ஏராள வதந்திகளில் இதுவும் ஒன்றாய் இருக்காதா? உன்னை நாங்கள் எங்கள் இயலாமையால் கொன்றுவிட்டோம்! எங்களை நாங்களே எதிர்க்காமல் தின்றுவிட்டோம். கையாலாகாத அயோக்கியன் கவிதை எழுதுகிறேன். கண்ணீர் என்னமோ கொட்டிக்கொண்டுதானிருக்கிறது!

நரி

Image
கோரைப்பல்லை வச்சு ஒரு இழுப்பு இழுத்துப்பாத்தேன்... அந்தக்காஞ்சு போன மாமிசம் ஜவ்வு மாதிரி வந்ததே தவிர சாப்புட முடியும்னு தோணலை! என்னடா இது இப்படி ரெண்டு நாளா எங்க தேடியும் சரியான ஆகாரமே கிடைக்கலையேன்னு கவலையா இருந்தது. அப்படியே பொடி நடையா நடந்தேன். காட்டுக்குள்ள இருக்குற ஒத்தையடிப்பாதைல அந்தக்கிளவி கூடையத்தூக்கிக்கிட்டு போச்சு...கையில ஒரு பெரிய கம்பு இருந்தது. கூடையில ஏதாவது திங்கிற சாமானாத்தான் இருக்கும். ஆனா எப்படி எடுக்குறது.. கிளவியை அடிச்சுச்சாப்பிடும் அளவுக்கு நமக்கு பலமில்ல! கிளவிக்குத்தெரியாம அதை பின் தொடர்ந்தா ஏதாவது சிக்குதான்னு பாக்கலாம். அந்தக்கிளவி ஏதோ மொணகிக்கிட்டே போயிட்டிருந்தது. மரங்கள் அடர்த்தி கொறஞ்சு..ஒரு மண்ரோடு தென்பட்டுச்சு! ஆஹா ...கிளவி அதுல இல்ல ஏறிப்போகப்போகுது...நமக்கு வேற ஏதாவது கிடைக்குதா பாப்போம்னு நினைச்சுக்கிட்டே திரும்பறதுக்குள்ள கிளவி என்னைப்பாத்துருச்சு....வீச்சுன்னு கத்திக்கிட்டே கம்பைத்தூக்கி என்மேல வீச, எகிறி ஓடினேன் ஒரு ஓட்டம்...பொசுக்குன்னு ஒரு பெரிய மரத்துக்குப்பின்னாடி போய் ஒளிஞ்சுக்கிட்டேன். அய்யய்யோ....யாராவது இருக்கீகளா...நரி...நரின்னு கிளவி

ஓ - போடப்போறேன்

அன்பு நண்பர்களே..! உண்மையிலேயே உங்கள் வேட்பாளர் சரியில்லாதவர் என்று தெரிந்தால் 49 (O) போடுங்கள்.செய்யவேண்டியதெல்லாம்.. வாக்குச்சாவடிக்கு செல்லவேண்டும். வாக்குச்சாவடி அலுவலரிடம் சென்று நம் முகவரியையும் , பெயரையும் சரி பார்த்து 17A புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டு. மையிட்டுக்கொண்டு....49 (O) என்று சொல்லுங்கள்! அவரே அதை பூர்த்தி செய்வார்...காரணமாக...நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்..எழுதப்படும்.. மீண்டும் கையெழுத்திட்டுவிட்டு....கையைத்தட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்..! நான் 49 (O) தான் போடப்போகிறேன்..காரணமாக , புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை நீக்கியது பொறுக்காமல் -என்று சொல்லப்போகிறேன். விபரம் அறிய தயவு செய்து இதையும் படியுங்கள்.

நியூட்டனின் 3ம் விதி - அட !

தமிழில் , பழிவாங்கும் கதைகளில்,அடிதடியை விட்டால் வேறு ஒன்றுமே திரைக்கதையாக இல்லையா என்று அடிக்கடி நாங்கள் விவாதித்துக்கொள்வோம். அதில் பெரும்பகுதியை நிவர்த்தி செய்ய வந்துள்ளது நியூட்டனின் 3ம் விதி! எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு சிறந்த படம் அமைந்தது அவர் செய்த புண்ணியம்! முழுக்க முழுக்க புத்திசாலித்தனத்தை மட்டும் பயன்படுத்தி, ஒரு திருப்தியான படத்திற்கு அடிகோலியிருக்கிறார் இயக்குநர் தாய்முத்துச்செல்வன் குரு(எஸ் ஜே சூர்யா) , ஈகிள் டிவி காம்பியரான ப்ரியாவை(ஷாயாலி பாகத்) க்காதலிக்கிறான். ஒரு சில கலாட்டாக்களுக்குப்பிறகு காதல் கைகூடி திருமணம் செய்யலாமென்று முடிவெடுத்த தினத்தன்று ஓரிரு சம்பவங்களுக்குப்பிறகு...ப்ரியா தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார். ஏன் என்று அவன் அலையத்தேவையே இல்லாமல், ஒரு ஆதாரத்தை ப்ரியா விட்டுச்செல்கிறாள். அடுத்த ஆண்டு அவள் இறந்த அதே நாளில், காலை 10 மணிக்கு , குரு பிரம்மாண்டமான மீடியா சாம்ராஜ்ய மன்னன் ஈகிள் டிவியின் ஜேப்பி(ராஜீவ் கிருஷ்ணா)க்கு ஒரு போன் செய்கிறான் ! இன்று பகல் சரியாக 12 மணிக்கு உன்னைக்கொல்கிறேன் என்று ! அதை முதலில் நம்பாத ஜேப்பியை நம்பவைக்க, அடுத்த 3 நிமி