நேற்று ஒரு சம்பவம் தூக்கமிழக்கச்செய்துவிட்டது.
தஞ்சாவூரில் , ஒரு பெண்ணின் திருமணம் மீறிய ஒழுக்கத்துக்கு(?) இரு சிறுவர்கள் பலியாகி இருக்கிறார்கள். அவளுக்கு காதல் திருமணத்தில் பிறந்த அந்த பிஞ்சுகள் விக்னேஷ், தினேஷ் முறையே 6, 4 வயதுக்கார அழகன்கள். கணவனின் நண்பனுடன் ஏற்பட்ட தொடர்பை விடமுடியாததால், கணவனே அவளைவிட்டுப்போக, நண்பனுடன் குடித்தனம்... பின்னர் அவளது சொந்தக்காரன் இன்னொருவனுடன் அடுத்த........, அதன் தீவிரம் அதிகமாகி, குழந்தைகளையும், இரண்டாமவனையும் கொன்றுவிடுவதென்று முடிவெடுத்து, முதல் கட்டமாக, விளையாட்டுப்போக்கில் காரில் குழந்தைகளை கூட்டிச்சென்று தஞ்சை பெரியகோவில் அருகிலுள்ள பாலத்திலிருந்து இருவரையும் தூக்கிப்போட்டு கொன்றிருக்கிறான் சண்டாளன்.. இதில் சின்னவன் தினேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறான். இவள் நல்லவள் போல் போய் போலீஸில் என்
பிள்ளைகளைக்காணவில்லை என்று புகார் கொடுத்து புலம்ப, துருவியதில் சரியான துப்பு கிடைக்காமல் போலீஸ் தடுமாற, மறுநாள் ஆற்றில் , விக்னேஷ் மிதக்க , அதை இவள் சலனமில்லாமல் பார்ப்பதைப்பார்த்த போலீஸின் சந்தேகப்பார்வை திரும்பியபின் இவ்வளவும் வெளிச்சத்துக்கு வந்தது.
என்ன சொல்லி திட்டுவதென்றே தெரியவில்லை... உடனே இந்த நாய்களை
சுட்டுத்தள்ளிவிடணும்.
அல்லது அந்த சட்டக்கல்லூரி காட்டுமிராண்டிகள்கிட்ட கட்டையக்குடுத்து இப்ப
அடிடா கொலைகார நாயேன்னு சொல்லணும்.
அப்புறம் அவனை நாம அடிச்சுக்கொல்லணும்.. பேசாம இந்தியாவை சவுதியோட
இணைச்சுடலாமான்ன்னு தோணுதுங்க...இதுதான் காரணம்..!
அந்தக்கொலைகாரிக்கு பிள்ளைகள் வேண்டாமுன்னு சொல்லியிருந்தா , நான் எடுத்து வளர்த்திருப்பேன் அந்த அழகன்களை ! அவதான் சொன்னான்னா, அந்தப்பரதேசிக்கு எங்க போச்சு புத்தி?
அய்யா பத்திரிக்கைக்காரங்களே...! கள்ளக்காதல்ன்னு சொல்லி...காதலை கேவலப்படுத்தாதீங்க! இதுக்குப்பேரு தனிக்காமம்.
இனிமே யாரவது பிள்ளையைக்கொல்றதா இருந்தா, ஒரு தடவை எனக்கு போன் பண்ணி பேசுங்கன்னு விளம்பரம் கொடுக்கப்போறேன். !