Posts

Showing posts from August, 2009

சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.!

பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை ! கவனம் கவர்பவை! எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ! ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்! அது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட..! நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்..! கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம்! எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை! அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது. வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன். ஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்கொண்ட

சாருவுடன் ஒரு விமானப்பயணம்!

அந்த விமானப்பயணம் திடீரென்று நிகழ்ந்தது. ஒரு அவசரவேலைக்காக சென்னை வரவேண்டியிருந்ததால், இருக்கும் 4 மணிநேர இடைவெளியில் பஸ்ஸிலோ, காரிலோ பயணிப்பது இயலாது என்பதாலும், அத்தனை அவதியாகச் சென்று அமைதியைக்குலைத்துக்கொள்ளாத ஆள் என்பதாலும், திடீரென்று திருச்சி விமான நிலையத்தில் நுழைந்தேன். சரியாக காலை 8.45க்கு ஒரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்புவதாக அங்கிருக்கும் நண்பர் அரவிந்த் சொல்ல, உடனே டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அது பன்னாட்டு விமானம். சென்னை சென்று, பின் சிங்கப்பூர் செல்லும் என்றார்கள். ஆரம்பகட்டச் சடங்குகளெல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் வாங்கி அமர்ந்தபின் நம்முடன் பயணிக்கப்போகும் அன்பர்களை கவனிக்க ஆரம்பித்தேன். முதல்முறையாக வெளிநாட்டுக்கு தாயைக்கூட்டிவரும் மகன்! அந்தத்தாயின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி ! (திடீரென்று ஈரானியப்பெண்மணி நம் அப்துல்லாவை ஹஜ்ஜுக்கு அம்மாவுடன் சென்றபோது வாழ்த்தியதை நினைத்துக்கொண்டேன்.) புதுமணப்பெண்ணாக, பெற்றோரிடம் விடைபெற்று கணவனுடன் சிங்கையில் வாழப்போகும் ஒரு பெண்! (அவள் கண்களில்தான் எத்தனை எதிர்பார்ப்புகள்! சகோதரி உன் வாழ்வு இனிதாகட்டும்) எ

இந்த வினாடி என்ன செய்கிறோம்? -ஒலிப்பதிவு

மறுபடியும் ரேடியோ...மறுபடியும் அறிவுரை மழை..! இஷ்டப்பட்டவுங்க நனையலாம்! இல்லைன்னாலும் தூறல் விடாது! :) Get this widget | Track details | eSnips Social DNA பயன்படுமா?