Posts

Showing posts with the label புத்தகம்

புதிய நூல்.. !

Image
பொறியியல் தவிர கலை மற்றும் அறிவியலில் ஏராளமான படிப்புகள் உள்ளன. அதனைப் படிப்பவர்களுக்கு அதைவிட ஏராளமான வேலை வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அவற்றை முறையாகச் சொல்ல ஒரு நூல் இல்லை என்று ஒரு கல்லூரி முதல்வர் பேசிக்கொண்டிருந்தார்.  ஏன் நாமே அதனை முயற்சிக்கக்கூடாது என்று எண்ணியதன் விளைவு.. கொஞ்சம் நேர முதலீடு, பல வல்லுனர்களின் சந்திப்புகள் பல கல்வியாளர்களின் உள்ளீடு இவற்றை வைத்துக்கொண்டு ஒரு நூலை எழுதினேன். ( டைப்பினேன்) பின்னர் பதிப்பித்து, வெளிப்படுத்துவதை விட, மின்னூலாக வெளியிட்டால் என்ன என்று எண்ணியதன் விளைவு : இதோ .. https://gumroad.com/l/doQz#

தலைவா, வா! - விமர்சனம்

Image
    தலைவா, வா! என்கிற தலைமைப் பண்புகள் பற்றியதொரு புத்தகத்தை நண்பர் சுரேகா அவர்கள் அண்மையில் எழுதி உள்ளதாகக் கூறி எனக்கொரு பிரதி அன்புப்பரிசாக அளித்தார்.     மதி நிலையம் பதிப்பித்துள்ள இந்த புத்தகம் ரூ.80 மதிப்பு என்றாலும் ரூ.8000 மதிப்பு பெற்று, பயிலரங்கங்களில் பெறக்கூடிய அறிவினை வழங்கும் ஒன்று என்று படிக்கத் தொடங்கியவுடன் புரியவில்லை.    'பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்துமுடித்துத்தான் எழுவீர்கள்' என்று நூலாசிரியரே வக்குமூலம் சொல்லிய்ருந்தாலும்..எனது கருத்து வேறு. ஏனெனில் இது ஒன்று சுவாரஸ்யமான காதல், சமூக நூல் அல்ல!    நாம் பார்ப்பது சில படமாக இருக்கும். வெகுசில பாடமாக இருக்கும். ‘அபியும் நானும்’ படம் போல!    நாம் கேட்பது சில பாட்டாக மட்டும் இருக்கும். சில..வெகுசில மீண்டும் மீண்டும் கேட்டு பிரமிக்க வைத்து மனதில் ஓடும் மந்திரமாக மாறும். ‘ ’உயிரும் நீயே உடலும் நீயே’ போல.! சில புத்தகங்களை படித்து ரசிக்கலாம். ரசித்துப் படிக்கலாம் (யவன ராணி)  சில புத்தகங்களை படிக்கலாம். படித்துப் பாதுகாக்கலாம்.(ப...

தலைவா, வா!

Image
             நீண்ட நாட்களாகவே நண்பர்கள் கேபிள் சங்கர், கே ஆர் பி செந்தில் ஆகியோர், நீங்கதான் சாவிக்குப் பிறகு, அடுத்து மேலாண்மை சம்பந்தமாக மிகவும் எளிமையான நடையில் ஒரு புத்தகம் எழுதுங்கள் என்று வலியுறுத்தினார்கள். சரியான விஷயம் கிடைக்காமல் தேடிக்கொண்டே இருந்தேன்.          சென்ற மார்ச் மாதம், என் விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்த அன்று, அன்பு எழுத்தாளரும், இளைஞர்களை ஊக்குவிக்கக்கூடிய ஆசானுமான பா.ராகவன் அவர்கள் ‘லீடர்ஷிப் பற்றி ஒரு புத்தகம் எழுது! ஒரு மாசம் டைம் தரேன் என்று ஆணையிட்டார். சில குறிப்புகளும் கொடுத்தார்.    தலைவனுக்குரிய தகுதிகளை பல்வேறு புத்தகங்கள் பிரித்து மேய்ந்து விட்டிருந்தாலும், ஆங்கிலத்தில் வெளிவந்த சில புத்தகங்கள் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அவற்றிலிருந்து அடி நாதத்தை எடுத்துக்கொண்டு, நம் சூழலுக்கேற்ப ஒரு கதையாக வடிவமைத்து மெதுவாக ஆனால் சீரியஸாக எழுத ஆரம்பித்தேன். தலைமைப்பண்புகளை தனித்தனி கட்டுரைகளாகப் படிக்காமல், ஒரு கதையாக, நாவலாகப் படிக்கும் அனுபவத்தைக் கொடுக்...

சாதனை அரசிகள்

Image
வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்! அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள். மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது. முதலில் ரம்யா தேவி! – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணி...

தெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு....

Image
   ’தலைவரே! நான் BLOGல் எழுதின சிறுகதைகள் ’உ’ பதிப்பகம் மூலம் தொகுப்பா வருது! அந்த ராஜி, ஜெயா அதெல்லாம்… கதைகளின் தலைப்பையே புத்தகத்தலைப்பா வைக்காம, புதுசா ஒரு தலைப்பு வைக்கணும்..!! ஒரு டைட்டில் பிடிங்க! ‘ இதுதான் அன்பு நண்பர் கேபிள் சங்கர் என்னிடம் போனில் சொன்னது..! சில தலைப்புகளைச் சொல்ல ஆரம்பித்தேன்..! அவர் போக்குவரத்தில் இருக்கும்போது, வண்டியை நிறுத்திவிட்டு கேட்க ஆரம்பித்தார். மெழுகுப் பாறைகள் ம்ஹூம்.. தாழம்பூத் தாரகைகள் ம்ஹூம்.. பாதரசப் பறவைகள் ம்ஹூம் மகரந்தச் சாட்டைகள் ம்ஹூம்.. தீக்குச்சி தேவதைகள் ம்ஹூம்.. தெர்மகோல் தீபங்கள்! ம்…இதுல ஏதோ இருக்கே..! இதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க? தீக்குச்சி தேவதைகள்! கரெக்ட்…அப்ப அதுல இருக்குற தேவதைகளைத் தூக்கி…இதுல போடுங்க…! எதுல தெர்மக்கோலிலயா? ஆமா.. தெர்மக்கோல் தேவதைகள்! இதான்..இதான் ஜி..! என் அடுத்த புக்கோட டைட்டில்! என்று சடுதியில் முடிவெடுத்துவிட்டார்..!! அப்படி உருவான தெர்மக்கோல் தேவதைகள் , சுகுமார் சுவாமிநாதனின் அற்புதமான வடிவமைப்பில் புத்தகமாக என் கையில...

அழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது?

Image
      யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன் நாவல் நேற்று மாலை ’உ’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவுடன் உடனே படிக்கவேண்டுமென்ற ஆவல் எனக்கிருந்தது. ஏனெனில், அவரது வலைப்பூவில் முதல் 6 அத்தியாயங்களை எழுதியிருந்தார். அந்த சுவாரஸ்யம் என்னை, புதிதாக வாங்கிய சட்டையை உடனே அணிய ஆர்வம் காட்டும் சிறுவனைப்போல் ஆக்கியிருந்தது. அதற்கேற்றார்ப்போல் இரவே எனக்கு வானொலி ஒலிபரப்பு இருந்தது. அது இரவு 11 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை இருக்கும். அந்த நான்கு மணி நேரங்களும், திரைப்படப்பாடல்களை ஒரு சிறு முன் ஜோடனையுடன் ஒலிபரப்புவது என் வழக்கம்.!        பாடல்களை வரிசையாக முன்னரே எடுத்துவைத்துவிட்டால், பின்னர் ஒவ்வொரு பாடலுக்கிடையிலும் பேசினால்மட்டும் போதும். ஆக..ஒவ்வொரு பாடல் இடைவெளியிலும் ‘அழிக்கப்பிறந்தவனைப் படித்துவிடலாம் என்று எடுத்துச்சென்றேன்.      ஏற்கனவே படித்த ஆறு அத்தியாயங்களிலும் வேறு ஏதாவது சேர்த்திருக்கிறாரா என்ற ஐயம் இருந்ததால், முதலிலிருந்து ஆரம்பித்தேன்.       இயக்குநர் ஷங்கரின் ‘நண்பன்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆ...

விமானப் பயணத்தில் சினிமா வியாபாரம்

Image
அடுத்தடுத்து சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டுவீரனை அவனும், அவன் நண்பர்களும், ரசிகர்களும், தேசமும் புகழ்ந்துகொண்டிருந்தாலும், அந்த வெற்றி நிலைக்கு வருவதற்காக அடைந்த அவமானங்கள், தலைகுனிவுகள், சிரமங்கள் ஆகியவற்றை அவனால் மறக்கவே முடியாது. அதிலேயே ஊறிப்போன அவன், நல்ல விளையாட்டுவீரனாவது எப்படி என்று ஒரு சிறப்பான பயிற்சியை அளிக்கமுடியும். சினிமா என்பது மற்றவர்களுக்கு பிரம்மாண்டமாய், சுலப வருமானமாய்த் தெரிந்தாலும், உள்ளிருப்பவர்களுக்குத்தான் அதன் சோகங்களும், சூட்சுமங்களும் தெரியும். அந்தவகையில், பல ஆண்டுகளாய் திரைத்துறையிலேயே வாழ்ந்து, வென்று ,தோற்று , மீண்டும் வென்று அதனையே சுவாசித்துக்கொண்டிருக்கும் திரு.சங்கர் நாராயண் (பதிவர் கேபிள் சங்கர் ) அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சினிமா வியாபாரம் படிக்க ஆரம்பித்தது ஒரு விமான நிலைய காத்திருப்பில்..! பின் எப்போது விமானத்தில் ஏறினேன்? அங்கு என்ன உண்ணக்கொடுத்தார்கள்? எப்போது அடுத்த நகரில் வந்திறங்கியது என்று தெளிவாக நினைவில்லாத வகையில் , சினிமா வியாபாரச் சுழலுக்குள் நான் சிக்கிக்கொண்டேன். ...

சீனான்னா சும்மா இல்லை!

Image
சிறுவயதிலிருந்தே சீனாவைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. ஆனால் சொல்ல ஆளோ, படிக்க தாளோ இல்லை! அதனாலேயே சென்னை புத்தகக்காட்சியில், செக்கச்செவேல் என்று இருந்த அந்த புத்தகம் என்னை ஈர்த்தது. கிட்டச் சென்று பார்த்தேன். சீனா- விலகும் திரை என்று போட்டிருந்தது. (உபயம் - கிழக்கு பதிப்பகம்) ஆங்கிலத்தில் பல்லவி அய்யரால் எழுதப்பட்டு வெளிவந்த glasses and smokes என்ற புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பு! நிறைய விபரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளராக சீனாவில் அவர் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஒவ்வொரு விஷயத்திலும்,இந்தியாவுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இது ஒரு கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கிறது. சீனர்களின் நிதானமான வாழ்க்கைமுறை, சரியோ தவறோ அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம், பழமைக்கும், புதுமைக்கும் இடையில் தடுமாறும் நிலை அரசாங்கத்தின் அதிரடித் திட்டங்கள் மொழியின் மீது சீன அரசின் ஆளுமை அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பல்வேறு சூழல்களில் தரப்பட்டிருக்கிறது. சீனா எப்படியெல்லாம் தன்னை உலக நாடுகளிடத்தில் நிலை நிறுத்திக்கொள்ள அடி போடுகிறது. ...