Posts

Showing posts from June, 2013

அவளின்றி அணுவும்...

Image
மனைவி என்ற பெண்ணை நேசிக்க பல்வேறு தருணங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டால்.. ஆனந்தம் நிச்சயம்! உங்களுக்கான காஃபியை அருந்திப்பார்க்கும்போது நேசியுங்கள்...அது உங்களுக்கு பிடிக்கும்படி இருக்கிறதா என்று சுவை பார்க்கிறாள் என்று அர்த்தம்.. உங்களை சாமி கும்பிட வலியுறுத்தும்போது நேசியுங்கள். அவளுக்கு நீங்கள் கிடைத்ததுபோல், உங்களுக்கும் புண்ணியமும், சொர்க்கமும் ஒருசேரக் கிடைக்கட்டும் என்று எண்ணுகிறாள் என்று அர்த்தம். உங்களை, குழந்தைகளுடன் விளையாடச் சொல்லும்போது நேசியுங்கள்… பிள்ளைகள் தன்னை மட்டுமல்ல..! அப்பாவையும் அதிகம் உணரட்டும் என்று எண்ணுகிறாள் என்று அர்த்தம்.. அவள் உங்களைக் கண்டு பொறாமைப் படும்போது நேசியுங்கள். இரகசியமாக உங்களை தேர்ந்தெடுத்ததை நினைத்துப் பெருமைப்படுகிறாள் என்றுதான் அர்த்தம்… அவளது சில சிறு செயல்கள் உங்களுக்கு எரிச்சலூட்டும்போதும் நேசியுங்கள். அந்தச் செயல்களை நீங்களும் சில நேரங்களில் செய்திருப்பீர்கள்.அதனை அவள் சுட்டுவதில்லை. அவளது சமையல் ருசிக்கவில்லையென்றால் நேசியுங்கள்.. அவள் நன்கு சமைக்க முயற்சிக்கிறாள் என்று அர்த்தம். அவள் க...

தங்கம் வாங்குவதை நிறுத்துங்க!

Image
           மக்கள் எல்லோரும்,  குறிப்பாக இந்தியர்கள்… அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு தன்னிடம் அதிகமாகச் சேரும் தொகையை இரண்டு இடங்களில் முதலீடு செய்ய ஆசையாய் இருக்கும். ஒன்று தங்கம். இரண்டாவது வீட்டு மனை..!      அந்த முதல் பொருள்தான் நம்மிடையே மிகவும் அதிகமாகப் புழங்கி, இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டுவிக்கிறது என்றால் நம்பத்தான் வேண்டும். இந்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை அதிகப்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி எல்லோரும் மிகவும் அதிர்ச்சியடைந்து பேசுகிறார்கள். குறிப்பாக நகைக்கடை முதலாளிகள், ‘அய்யோ! இது மக்களைத் தங்கம் வாங்க விடாமல் செய்யும் முயற்சி! நடுத்தர ஏழை மக்கள் தங்கமில்லாமல் தத்தளிப்பார்கள் என்று குலவையிடுகிறார்கள். ஏன், இறக்குமதி அதிகமாவதற்கு முன் அவர்கள் வாங்கிய நகையை பழைய விலைக்கு நமக்காகக் கொடுப்பார்களா என்று கேட்டுப்பாருங்களேன். அதேபோல், சேதாரத்தின் ஆதாரங்களை அலசினால் இன்னும் கொடுமையாகை இருக்கும். ஆனால், அரசோ, நாம் தங்கம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு வரி போடுகிறது....