சூப்பரா கீதுபா 2010!
சின்னச்சின்ன நிகழ்வுகளால் நிறைந்தது வாழ்நாள்! 2009 வெளியே போய்....அழகான 2010 ஐ அனுப்பி வைத்திருக்கிறது! போகும்போது அது பல விஷயங்களைச் செய்துவிட்டுச்சென்றிருக்கிறது. அதுவும் டிசம்பரில் ஆரம்பித்த ஆட்டம் இன்னும் முடியவில்லை. நட்பு விறுவிறுவென்று தன் எல்லையை பிரம்மாண்டமாக விரிக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த கிறிஸ்துமஸுக்கு இரண்டாம் நாள், திருப்பூரில் பரிசல் கிருஷ்ணாவைச்சந்திக்க.. கூடவே ஈரவெங்காயம் சுவாமி, பேரரசன் செந்தில், முரளிகுமார் பத்மநாபன்,.நிகழ்காலத்தில் சிவா என அன்புசால் நண்பர் கூட்டம்!. அது மிகச்சிறந்த சந்திப்பாக அமைந்துவிட..அன்று நடந்த கூத்து யூ ட்யூபில்... சுரேகா என்றோ பரிசல் என்றோ தேடினாலே... வந்து நின்று லந்து செய்கிறது. நன்றி : பேரரசன் செந்தில் அடுத்து சென்னை புத்தகக்காட்சி.. வாசலிலேயே எனக்காகக் காத்திருந்து, இதை வாங்கலாம்.. இது வேண்டாம் என்று உரிமையுடன் அன்பு காட்டிய அப்துல்லாவை விட சிறந்த நட்பை யாரால் கொடுக்கமுடியும்? நண்பர் நர்சிம்முடன் செலவிட்ட அந்த சில மணி நேரங்கள் மிகவும் அன்பு பொருந்தியதாக இருந்தது. அதுவும் கார்னர் ஸ்டாலில் குடித்தோமே? அது பேரு என்ன பாஸு? சிறிது நேரமே இரு