Posts

Showing posts from November, 2009

என்ன செய்யலாம்?

லவ்டேல் மேடியின் திருமணம், ஈரோட்டில்.. கண்டிப்பாகப்போய்விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திருமண கொண்டாட்டங்களை மீறி அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஆனால் இப்போது செய்ய ஆரம்பித்துள்ள வேலையின் திடீர் அழைப்பால் , போக இயலவில்லை. நிறைய பதிவர்கள் வருவதாக வால்பையன் கூறியிருந்தார். நண்பர்களைச் சந்திப்பதில் வெறி பிடித்தலையும் எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டதில் பெருத்த ஏமாற்றம்தான். பதிவர்களின் நட்பு மிகவும் அன்பும், ஆச்சர்யமும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உதவும் எண்ணமும் நிறைந்ததாக உணர்கிறேன். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள்கூட எங்கெங்கிருக்கிறார்கள் என கண்டுபிடித்து நட்பைத்தொடர்வது மிகவும் இயலாத சூழலாக உள்ளது. ஆனால் பதிவர் நட்பு, உலகம் முழுக்க வியாபித்து, எல்லாத்துறைகளிலும் கோலோச்சி, நம்மை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்வதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன். இத்தகைய சந்திப்புகளை, நம் நட்பை பலப்படுத்தும் நிகழ்வாக மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் சமூக அக்கறைக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன். நாம் பல்வேறு செயல்பாடுகளால் சமூக வளர்ச்சியை ஏ

வாழ்த்துக்கள் மேடி

Image
நமது அன்புப்பதிவர், நண்பர் லவ்டேல் மேடி க்கு இன்று திருமணம்...! அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று அன்பே அரசாய் அறிவே அமைச்சாய் அறமே அரணாய் இல்வாழ்க்கை அமைய எல்லோரும் வாழ்த்துவோம்....!

மகிழ்துக்கம்...!

Image
மறுபடியும் யூத்புல் விகடனில்...கவிதை! இன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு! ஆச்சர்யமா இருக்கு! http://youthful.vikatan.com/youth/Nyouth/sureka05112009.asp கவிதை இதுதான்..! காணாமல் போன தோழியைத் தேடும் முயற்சியில் காவலர்கள் வந்து பார்க்கச்சொன்ன, விபத்தில் இறந்த பெண்ணை அடையாளம் காட்டும் அந்த விநாடியில் அவளில்லை என்று சொல்லும்வரை பரிதவித்த மனம் அகமகிழ்ந்தாலும் அடுத்து யாரோ ஒருவனுக்கு அந்தப் பெண்ணை ’அவள்தான்!’ என்று கூறவேண்டியதன் அவலம் கொஞ்சம் அதிகமாகவே கனத்தது. நன்றி: யூத்ஃபுல் விகடன்.காம்