குற்றாலத்திலிருந்து தனியார் பேருந்தில்
வந்து, சென்னை வடபழனியில் இறங்கும்போது காலை 6:20 ஆகியிருந்தது.
கதவு திறந்தவுடன் வரவேற்கக் காத்திருந்தவர்கள்போல்,
ஆட்டோ டிரைவர்களின் கூட்டம் மொய்த்தது. இறங்கி,
விருகம்பாக்கம்
போகணும். ஆனா மீட்டர் போட்டாத்தான் வருவேன்
என்று
நான் சொல்லி , நாக்கை மடித்து உள்ளே வைப்பதற்குள் கூட்டம் காலி…!! என்னை விட்டுவிட்டு
அடுத்த பயணியைத் தேடிச் சென்றுவிட்டார்கள்.
நான்
விடவில்லை. அந்த வரிசையில் இருந்த சுமார் 15 ஆட்டோக்களிலும் வரிசையாகக் கேட்டேன். அனைவரது
பதில்களும் இப்படி இருந்தன..
100
ரூபா ஆகும் சார்!
டேய்!
சாருக்கு மீட்டர் போடணுமாம்.
வராது
சார்!
என்
மீட்டர் ரிப்பேர்.
சார்
மீட்டர் போட்டாத்தான் வருவாராம்..நீ போறியா?
இப்போ
இன்னாத்துக்கு சார் மீட்டரு 60 ரூவா வரும். 10 ரூபா சேத்து 75(!) ஆ குடுத்துருங்க!
மீட்டரெல்லாம்
சும்மா சார்… அதெல்லாம் கட்டுப்படியாவாது.
பேப்பர்ல
படிச்சுட்டு வராதீங்க சார்! சென்னைல எங்கயும் மீட்டர் போடுறதில்லை.
மீட்டர்
போடுறேன். ஆனா, 80 ரூவா தரியா?
பக்கத்து
ஏரியாக்கெல்லாம் மீட்டர் போடமுடியாது சார்!
கம்ப்ளெயிண்ட்
செய்யலாமா என்று கேட்டதற்கும்.. பண்ணிக்க சார்! என்று அடாவடியாக ஒருவர் லந்தடித்தார்.
வடபழனி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் திரும்பி நடந்தால்,
அங்கு ஷேர் ஆட்டோ கிடைக்கும். 10 ரூபாய்க்கு சென்று சேர்ந்துவிடலாம். ஆனால், என்னால்
அப்படிச் செல்ல முடியவில்லை. நேராக வடபழனி காவல் நிலையம் சென்றேன். வாசலிலேயே ஒரு பேட்ரல்
வண்டியில் ஒரு போக்குவரத்துக் காவலரும், சார்ஜெண்ட்டும் இருந்தார்கள். அவர்களிடம் சென்று
விபரம் சொன்னேன்.
உடனே இறங்கினார்கள். சார்ஜெண்ட் என்னிடம் வந்தார்.
“சார்..
நீங்க மறுபடியும் போய் மீட்டர் போடச்சொல்லுங்க…மாட்டேன்னு சொன்னான்னா , சரின்னு ஒத்துக்கிட்டு
ஆட்டோவில் ஏறி இந்தப்பக்கம் வாங்க பிடிச்சுக்கிறேன். என்றார்.
அந்த
வரிசையில் இருக்கும் எல்லா ஆட்டோவும் இதே தப்பைத்தான் செய்யுறாங்க … கேள்வியே வேண்டாம்
எல்லாரையுமே பிடிக்கலாம் என்றேன்.
இருந்தாலும்,
நீங்க கையும் களவுமா பிடிச்சாத்தான் சார் நாங்க கேஸ் போடமுடியும் என்றார். சரி என்று
ஒத்துக்கொண்டு, நானும், மீண்டும் அந்தச் சாலையில் நடந்தேன்.
ஏற்கனவே
என்னிடம் தெனாவெட்டாக பதில் சொன்ன ஒரு டிரைவரிடம் சென்று, மீட்டர் போட்டு, விருகம்பாக்கத்துக்கு
வரீங்களா என்றேன்.
அதற்கு..அந்த
இளைஞன்.
இன்னா
சார்.. யாருமே மீட்டர் போடலையா? அதான் சொன்னேன்ல.. சரி 100ரூபா குடுங்க.. மீட்டரெல்லாம்
ஓடாது . என் மீட்டர் ரிப்பேர் என்றான்.
நான்
அவன் கையைப் பிடித்துக்கொண்டேன். சார்ஜெண்ட் கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டிருந்தார்.
ஸார்…………..வாங்க!
என்று கத்தினேன்.
அவர்
அருகில் வரவும், மீட்டர் ரிப்பேராம். ரிப்பேரான மீட்டருடன் வண்டியை ஓட்டிக்கிட்டிருக்கார்
. பாருங்க ! என்றேன்.
அதை
அந்த இளைஞன் எதிர்பார்க்கவில்லை.
சார்ஜெண்ட்டும்
விரைந்து வந்து, கூடவே வந்த காவலரிடம்..
இவனை
ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப்போங்க என்று சொல்லி, அவனிடமிருந்து ஆட்டோ சாவியை வாங்கினார்.
அதற்குள்
ஆறேழு ஆட்டோ ஓட்டுனர்கள் கூடிவிட்டனர்.
சார்ஜெண்ட்
சொன்னார்.
என்னய்யா..
ஒருத்தனும் மீட்டர் போட்டு ஓட்டமாட்டேங்கிறீங்களாம்..!! சார் வந்து கம்ப்ளெய்ண்ட் பண்றாரு!
என்கிட்ட
கேக்கலையே சார்! நான் மீட்டர் போட்டு ஓட்டுவேனே என்று கூசாமல் பொய் சொன்னார் ஒருவர்.
நான்
பிடித்துக்கொண்டேன்.
அப்படியா…?
உடனே வாங்க ..மீட்டர் போடுங்க..விருகம்பாக்கம் போகணும். என்று சொல்லிக்கொண்டே அவரது
ஆட்டோவில் எனது லக்கேஜை வைத்தேன்.
ஆனால்,
ஆட்டோவில் ஏறுவதற்கு முன்.. அங்கு வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒரு தம்பதி மற்றும்
சிலரிடம் சத்தமாகச் சொன்னேன்.
இங்க
உள்ள ஆட்டோ எல்லாருமே நல்லவங்க…மீட்டர் போட்டுத்தான் ஓட்டுவாங்க.. எல்லாரும் ஏறிக்கிங்க…பேரமே
பேசவேண்டாம்.என்று சொல்லி மூன்றுபேரை ஏற்றிவிட்டேன்.
சார்ஜெண்ட்டை
நோக்கி மற்ற ஆட்டோக்காரர்கள் வந்தார்கள். அவர் அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தார்.
“ஏண்டா இப்படி பப்ளிக்கிட்ட அநியாயம் பண்றீங்க?”
நான்,
லக்கேஜை வைத்த ஆட்டோவில் ஏறி, ஆட்டோவை எடுக்கச் சொன்னேன்.
ஆட்டோ
20 அடி நகர்ந்திருக்கும். போக்குவரத்துக் காவலர்.. நான் முதலில் பிடித்துக்கொடுத்த
இளைஞனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
“காலங்காத்தால
மீட்டர் போடலைன்னு வந்து எங்க உயிரை எடுக்குறான்” என்றார்.
உடனே
ஆட்டோவிலிருந்து இறங்கி.. அவரை நோக்கிச் சென்றேன்.
யாரு
சார் உங்க உயிரை எடுத்தது? போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலேயே இருந்துக்கிட்டு தைரியமா மீட்டர்
போடாம அடாவடி பண்றாங்கன்னா நீங்கதான் பப்ளிக் உயிரை எடுக்கிறீங்க.. இந்த அநியாயத்துக்கு நீங்கதான் காரணம்.. உங்களை வந்து
பாத்த எனக்கு..உங்க உயரதிகாரியப் பாக்க எவ்வளவு நேரமாகும்? போய்ப் பாக்கவா? தட்டிக்கேக்க
நேரம் ஒதுக்காத ஆள் நான் கிடையாது. இப்போ நீங்களும் சேந்து மாட்டுறீங்க! என்றேன். கடைசியாக
என் ஊடக அடையாளத்தையும் சொன்னேன்.
அதிர்ந்தார்..
“சார் அதான் எங்கயோ பாத்தமாதிரி இருக்கேன்னு நினைச்சேன் என்று வழிந்துவிட்டு.....சார்!
நான் உங்களைச் சொல்லலை .. டிரைவரைத்தான் சொன்னேன். பிரச்னையை பெருசு பண்ணாதீங்க சார்!
என்று சொல்லி நான் ஏறிய ஆட்டோ டிரைவரிடம்..
சாரை
பத்திரமா விட்டுட்டு வாய்யா ! என்று சொல்லி என்னை அனுப்ப யத்தனித்தார்.
இந்த
ஸ்டாண்டில் யார் வந்து இறங்கினாலும், ஆட்டோவில் மீட்டர் போட வைங்க சார்! அப்போதான்
கவர்மெண்ட்டுல வாங்குற சம்பளம் ஒட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
அதுவரை
இறங்கிய பயணிகளாகட்டும்.. அந்தப்பக்கம் ஆட்டோவில் பேரம்பேசி ஏறிக்கொண்டிருந்தவர்களாகட்டும்..
ஒருவராவது கவனிக்கவேண்டுமே… ம்ஹூம்..
தட்டிக்
கேட்காதவரை எந்த டேஷையும் யாராலும் சரிசெய்யமுடியாது என்பதை உணர்ந்த பிறகு…இந்தியாவை
புரட்டுவது பற்றிப் பேசலாம்.