கதைசொல்லிகளால்தான் கதைகள் எப்பவும் மெருகடையும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. சொல்லும் விதத்தில் உள்ள வேறுபாட்டால், ஒரு நல்ல கதையை சுவாரஸ்யமாகவும் ஆக்கலாம். அப்படியே சொதப்பவும் செய்யலாம். இந்தக்காலகட்டத்தில் பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், 1940 களில் மராட்டிய எழுத்தாளர் வி.ஸ. காண்டேகர் (1898 - 1976) இந்த அற்புதத்தை சுலபமாகச்செய்துவிட்டுப்போயிருக்கிறார். ஞானாலயா நூலகத்தின் (இந்த நூலகத்தைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்) நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'சினிமால வேலை பாக்குறேங்கிறீங்க! இதைப் படிச்சுப்பாருங்க! ' என்று கொடுத்ததுதான் வி.ஸ.காண்டேகரின் 'சுகம் எங்கே?' என்ற நாவல். இதை தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்துள்ளார். இவரைப்பற்றி மேலதிக தகவல்களை முவளர் என்ற பதிவர் குறிஞ்சி எனும் வலைப்பூவில் அழகாக எழுதியுள்ளார். சுட்டி இதோ! சுகம் எங்கே நாவலின் பாத்திரங்கள் ஆனந்தன், முத்தண்ணா, உஷா, மாணிக்கம்(பெண்), சஞ்சலா,தனஞ்சயன் ஆகியோரைச்சுற்றி பின்னப்பட்டது. ஆனந்தன் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் , வக்கீலுக்குப்படித்திருக்கிறான். அவன் அண்ணன் முத்தண்ணா..அவர் சம