செய்யாச் சிந்தனை!
எதை எழுத நினைத்தாலும் ஒன்றும் எழுத முடியாமல் நண்பர்கள் சிந்தனையை வேடிக்கை பார்த்துவிட்டு கணிணியை மூடும்போதுதான் மூளைக்குள் முளைத்திருக்கும் வேர்களுக்கு நான் ஊற்ற நினைத்த நல்நீர் நாக்கில் ஊறியும் வெளிப்படாமல் விரல்களின் வழியும் இலைவிடாமல் சோம்பேறித்தன வெந்நீராய் வேர்களைப் பொசுக்கிவிட்ட செய்தியொன்று கைதவறிய பூங்கொத்தாய் என்னை ஏளனப்படுத்திச் சிரிக்கிறது! பொசுக்கிய வேர்களின் ஏதாவதொரு வித்து நண்பரின் மூளைக்குள் முளைவிடும்போது வெந்நீரைக்குளிரவைக்க வெட்டிச் சமாதான பனிப்பாறைகளை கொட்டக்கொட்ட விஞ்ஞானம் மீறி வெந்நீர் கொதித்து வெடித்தெழும் எரிமலையாய் விடியல்கள் கனக்கிறது! ஒன்றுமட்டும் தெரிகிறது சிந்திப்பது சுலபம்! செயல்படுவதே கடினம்!