Posts

Showing posts from January, 2008

உன்னைத்தேடும் முயற்சியில்..

Image
எழுத யத்தனிக்கும் எல்லாக் கவிதைகளுக்குள்ளும் ஓடி ஒளிந்துகொள்கிறாய் நீ ! உன்னைத்தேடும் முயற்சியில் வார்த்தை வசப்படாமல், ஏதோவொன்றை கிறுக்கவும் முடியாமல் காகிதச்சிறையில் சிக்கி முடிகின்றன என் எல்லாக் கவிதைகளும்! எப்படியாவது கண்டுபிடித்து விடலாமென்று பேனா மையை அனுப்பினால் அதற்கும் கரிபூசி வெண்மையாய் சிரித்து வைக்கிறாய்! உன்னை வெளியே கொண்டுவர அதிக வார்த்தைகளை வீணாக்க விரும்பவில்லை! ஒரு அறிவிப்பு வெளியிடுகிறேன். 'முத்தமிடும் நேரமிது!' இதழ்களை மட்டுமாவது அனுப்பிவை! நான் எழுதவேண்டும்.!

குழப்பம் மட்டுமே நிரந்தரம்.

இப்படி ஒரு பதிவு போட்டுட்டு அதுக்கு தொடரும் வேற போட்ட எனக்கு எந்த ஜென்மத்திலும் மோட்சம் :-) கிடைக்காது ன்னு தெரிஞ்சிருந்தும்.... கடவுள் யார் யாருக்கு தேவையில்லைன்னு பாக்கவேண்டிய கட்டாயத்தில்...இறங்கிட்டேன்..! தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன? நிறைய தப்பு பண்ணிட்டு.. தனக்கெதிரா ஒண்ணுமே நடக்காம இருக்கவும்..இன்னும் தவறுகளின் செறிவை அதிகப்படுத்திக்கிட்டு..ஒரு ஈன மானமே இல்லாத எல்லா ஆளுங்களுக்கும்.... கடவுள் தேவை இல்லை! இன்னிக்கு செத்தா...நாளைக்கு பீருன்னு..! (எங்க பால் கிடைக்கும்?) தன் சந்தோஷம் மட்டுமே குறியா வாழ்ந்து..தன் சார்பான குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துற எல்லா குடிகார ஓநாய்களுக்கும்... கடவுள் தேவை இல்லை! எல்லா இயமும் பேசிக்கிட்டு...அவர்கள் சொன்னதில் கடவுள் மேட்டரை மட்டும் எடுத்துக்கிட்டு..ஆனா சொன்னவுங்களுக்கே சிலை வச்சு மாலை போடும் எல்லா கலர் சட்டைக்காரங்களுக்கும்... கடவுள் தேவை இல்லை! தன் சார்ந்த மக்களுக்கு எல்லா நன்மையும் செய்து. அடிப்படையில் அன்பை மட்டுமே வேலையாகவும்..மனிதாபிமானமே தொழிலாகவும் கொண்ட எல்லா மனிதனுக்கும்.... கடவுள் தேவை இல்லை! தன் தாய் தந்தையை அன்புட...

கடவுள் தேவையா? தேவையில்லையா?

கடவுள் இருக்கிறாரா? என் அறிவுக்கு எட்டாத, என் சிந்தனை போய் முட்டி நிற்கும் எல்லாச்செயலிலும் கடவுளைக்கொண்டுவந்து நிறுத்தி, திருட்டுப்போன பொருளுக்கு மட்டும் போலீஸைத்தேடியும், முடியாத உடலுக்கு மருத்துவரைத்தேடியும் கடவுளை நட்டாற்றில் நிறுத்துகிறான் ஆத்திகன்! கடவுள் இல்லையா? என் பகுத்தறிவை கூறாக்கி,,, பின் அதனைக்கூராக்கி..எல்லாம் உன்னால் முடியும்.! அதற்கு ஏன் இன்னொரு ஆளை இழுக்கிறாய் ? அதற்கு கடவுள் என்று பெயர் இடுகிறாய் என்று தெளிவான முடிவைச்சொல்லிவிட்டுவீட்டுக்கார அம்மாவின் பக்தியைத்தடுக்க முடியாமல் தவிக்கிறான் நாத்திகன்.! எனக்கு இந்த இரண்டில்கூட குழப்பமில்லை!! ஆனால் ஒரு முக்கியக்கேள்வி! அதெல்லாம் சரி! கடவுளைப்பயன்படுத்தி நாம் சாதித்தது என்ன? நாம் பெரியவர்களா? கடவுள் பெரியவரா? என்று எழும் கேள்விக்கு..எப்போதும் என் பதில், நாம்தான்..ஏனெனில்..நம்மைப்படைத்ததாகக்கூறி கடவுளையே படைத்தவர்கள் நாம்.! ஆனாலும் கடவுள் பெரியவராக ஆகிவிடுகிறார். நம்மைவிட்டே தம்மைப்படைக்கவைத்துவிட்டு! என்னதான் கோயில்,சர்ச், மசூதி, இன்னபிற மத ஆலயங்கள் போய் கும்பிட்டு வந்தாலும் நாம் சொல்லும் பொய்களும், புரட்டும், திருட்டும்,...

ஈரோட்டு சாப்பாடு.

ஈரோட்டில் சில நாட்களா வேலை நிமித்தமா இருக்கறதால, சாப்பாட்டுக்கு சுத்த வேண்டியதாயிடுச்சு! மேலும்.. நம்ம உடம்பு எதைப்போட்டாலும் தாங்குங்கிறதனாலயும்,ஒரே ஹோட்டலில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கவேண்டாம்னு நினைச்சும், பதிவுலகத்துக்கு ஈரோட்டு உணவுவிடுதிகளை அறிமுகப்படுத்த வேண்டியும், ஊரில், ஒரு ஏரியாவை சுத்தி சுத்தி... பேருந்து நிலையத்திலிருந்து இறங்கின உடனேயே எதிரில் தெரிவது, கண்ணன் உணவகம்...உயர்தரம்னு இப்ப எல்லாருமே போட்டுவிடுவதால். உள்ளே போனால், பார்க்க நல்லா இருக்கு !...சாப்பாடு சூப்பர்ன்னு சொல்ல முடியாது...ஓகே! உள்ளே மற்ற விஷயங்கள் அழகா இருக்கு! ஊருக்குள்ள ஆர்.கே.வி ரோட்டில்.. இரண்டு உணவகங்கள் உள்ளன.! (எனக்குத்தெரிஞ்சு) ஒண்ணு பாரத் - உணவும், கவனிப்பும் ரொம்ப சுமார்.!அதனால் அதைப்பற்றிய விமர்சனமே வேண்டாம். ஆனால் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருப்பவர் நாம் சொல்வதை ஆமோதித்து கேட்டுக்கொள்கிறார். அது மட்டும்தான் கூட்டல்புள்ளி (+.) :-) அதை அடுத்து ஜோதி உணவகம் இருக்கு..! மிகவும் அருமையான உணவும், நல்ல காபியும், மனிதாபிமானமுள்ள முதலாளியும்... அன்று முகூர்த்த நாள், காலை உணவு சாப்பிடப்போனபோது, சரியான க...

தொப்பைக்கு லீவு - குசும்பனுக்காக...!

இந்தப்பதிவு என் லிஸ்ட் லயே இல்ல! ஆனாலும் நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா இதை செஞ்சா தப்பில்லன்னு..வேலு நாயக்கர் சொன்ன மாதிரி...நண்பர் குசும்பனுக்காக! படிக்கறப்ப ஒல்லிப்பிச்சானாவோ..கொஞ்சம் பூசினமாதிரியோ இருந்துட்டு, ஒரு நல்ல வேலைக்குச்சேரும்போதுதான்..இந்த தொப்பச்சாமி நம்மகிட்ட லேசா ஒரு இடம் கேக்கும். நம்பளும்..இருந்தா நல்லதுதானேன்னு இடம் கொடுத்துருவோம். அப்புறம்தான் இருக்கு தீபாவளி! அது மெதுவா சுற்றுவட்டாரத்தை ஆக்கிரமிச்சு, ஒரு பழைய பேண்டை 'டர்' றாக்கும்போதுதான் தெரியவரும்..ஆஹா..வில்லன் வீட்டுக்குள்ள பாய் போட்டு படுத்துட்டாண்டான்னு..! விருந்தாளி வீட்டு ஓனராகும் வாய்ப்பு ஆரம்பிக்கும்.! அது சொல்றபடியெல்லாம் நாம கேக்குறமாதிரி ஆரம்பிக்கணும். துணி அதிகமா தேவைப்படுவதால், மணியும் அதிகமா தேவைப்பட்டு... தொப்பை சரணம் கச்சாமின்னு ஆகிடுவோம்... அப்பதான்..வீட்டுல கல்யாண பேச்ச ஆரம்பிப்பாங்க! அதுவரைக்கும் கூடவே இருந்த ஆள கழட்டிவிடும் பழக்கம் மனைவி வருவதற்கு முன்னரே ஆரம்பிக்கிற கால கட்டம் இதுதான்..!எப்படியாவது இந்த தொப்பச்சாமியை கழட்டிவிட்டுடலாம்னு முடிவுக்கு வந்துடுவோம். அதுக்கான வழிமுறைதான் இ...

இங்கயும் டிரைலர் ஓட்டுறோம்.!

கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இருப்பதால், பதிவுகளுக்கான எண்ணங்கள் ஓடி முடிந்து... வடிவமும் வார்த்தைகளும் வரும் வரை.. பதிவுலகில்...(அனேகமாக) முதல் முறையாக...எனது..வரப்போகும் பதிவுகளின் தலைப்புகள் இப்போது.. 1. ஈரோட்டு சாப்பாடு - ---------ஒரு அனுபவப்பகிர்தல் 2. கடவுள் தேவையா? இல்லையா? ------------கொஞ்சம் சூடு 3. குழப்பம் மட்டுமே நிரந்தரம்.------------------- பட்டறிவு 4, செத்தாருள் வைக்கப்படும்..! -------------------எல்லாம் புலம்பல்தான். 5. எப்படில இருக்க?------------------------கவிதை..மாதிரி 6. தோத்து ஜெயிச்சவன்!-----------------கதை...மாதிரி கூடிய விரைவில்....(எத்தனை டிரைலர் பாத்து ஏமாந்திருப்பீங்க?- அதான் கலர்புல்லா..) எது எதுக்கோ காத்திருக்கீங்க..! இதுக்கு காத்திருக்க மாட்டீங்களா? :-)

இது வேறு..இதிகாசம்..

தமிழில் திரைப்படக்கலை இன்னும் அதிகப்படிகள் முன்னேறும் என்று பறைசாற்றும்வகையில், இப்போது ஆவண, குறும்படங்கள் நன்கு அமைகின்றன.அப்படி ஒரு வரிசையில் இன்று நாங்கள் பார்த்த ஒரு அற்புத ஆவணப்படம்! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தலித்களுக்கு நடந்த கொடுமைகளைத்தொட்டுவிட்டு,தமிழகத்தில் மாஞ்சோலை மரணங்களைக்காட்டிவிட்டு நேரடியாக.பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊர்களில் நடத்த முடியாத தேர்தல்களையும், அதன் விளைவுகளையும், முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை , யார் மனதும் நோகாமல் நடுநிலையோடு எடுக்கப்பட்டிருக்கும் இதன் தலைப்பு... இது வேறு...இதிகாசம்! 1996முதல் அந்த ஊருக்குள் தேர்தலே நடத்தமுடியாமல் திணறும் அரசு, வேட்பு மனு தாக்கல் செய்வதையே ஏற்றுக்கொள்ளாத சமூகம், துணிந்தவர்கள் கொலைசெய்யப்பட்ட நிலை! அந்த மக்களின் இயல்பான வாழ்க்கை அவலங்கள்! சர்வசாதாரணமாக கொலைகளுக்கு சாட்சியாக இருக்கும் ஆலமரம்,! ஒப்புக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தி அடுத்த நாளே அவரை ராஜினாமா செய்யச்சொல்லும் கயமைத்தனம், பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள்! மாவட்ட ஆட்சியர் உதயசந்திரனின் முயற்சிகள், அதன் மூலம் நடக்கும் தேர்தல்! வெற்றி பெற...

ஈரோட்டுப் பெண்கள்

கொஞ்ச நாளாக ஈரோடு வாசம்.. அற்புதமான ஊர் ! வியாபாரத்தை வியாபார நோக்கோடு மட்டும் அணுகாத வியாபாரிகள்! வாடகை மட்டுமல்ல, மரியாதை கொடுத்தும் மனதுக்குள் குடியிருக்கலாம் எனும் மனிதர்கள்! வழிசொல்வதே வாழ்வுக்கடன் என்று அழகாக வழி சொல்லும் வழிப்போக்கர்கள் அருகில்தான் இருக்கிறது ! நடந்தே போய்விடுங்கள் எனும் ஆட்டோக்காரர்கள்!! வரி சேமிப்பு பற்றி போட்ட நாணயம் விகடனா? என்று கேட்டு விற்கும் புத்தகப்பிரியர்கள்! யோகாவில் வென்றுவிடலாம் என்று வாழ்வியல் சொல்லும் அற்புத மாணவிகள்! இவர்தான் முதலாளியா? என்று வியந்தபின் வணங்கி நிற்கும், தோற்றத்தில் எளிமை பூண்ட இயல்பான ரசனைக்காரர்கள்! ஒரு மாபெரும் துணிக்கடையின் தொழிலாளர்களை வேலை நிமித்தம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அதிகம் படிக்காத பெண்கள்! ஆனால் எத்தனை தெரசாக்கள் ? எடுத்தவுடன் உண்மைசொல்லும் நம்பிக்கை! நான் சந்தித்த நங்கைகளில் சிலரது வாழ்வுத்துளிகள், படித்தபின் தான் புரியும், இந்த கணிணிக்கு முன்னால் அமர்ந்து கலாய்த்துக்கொண்டிருக்கும் நாமெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று! அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒருநாள் அம்மாவின் கையை அப்பா க...

அப்படியாவது தண்டனையை.....காப்பாற்றலாம்.!

இந்தப்பதிவு போடும் எண்ணமே இல்லை! இந்த செய்தியை படிக்கும்வரை ! தர்மபுரி' வழக்கு ! மூவரின் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு- இதைப்படிச்சவுடனேயே இன்னும் கொதிப்பு அதிகமாகுதுங்க! 1.முதலில் இந்த வழக்கு எடுத்துக்கொண்ட காலமே மிக அதிகம். 2. குற்றவாளிகள் முழுமையாக இனம்கண்டபின்னர் உடனே தீர்ப்பு அளித்திருக்கலாம். 3. பொது இடத்தில் நடந்த,(பலரும் பார்த்த) ஒரு நிகழ்வுக்கு இன்னும் என்ன மறு விசாரணைகள்? 4. தன்னுடைய சொந்த கட்சியில் தன் பலத்தையும் - பார்! பஸ்ஸெல்லாம் எரிச்சேன்னு சொல்லி தலைமையிடம் சீட்டு கேட்கவும் பயன்பட்ட ஒரு அடிப்படை சுயநல, கயமை,,காட்டுமிராண்டி,பொறுக்கித்தனத்துக்கு இவ்வளவு நாளே அதிகம்.இந்த தண்டனையே கம்மி. ஆனா இதைவிட பெரிய தண்டனை இந்தியாவில் இல்லையே ! 5. ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனும் வாதத்தை இந்த சமூகம் உடைத்து பல ஆண்டுகளாகிவிட்டது. 6. இப்போதெல்லாம். ஒரு குற்றவாளியை விடுவிக்க, ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். 7.அதுனால, இடையில் ஒரு நிரபராதி மாட்டினால் கூட பரவாயில்லை. ஆயிரம் குற்றவாளிகளும் தண்டிக்கப்படணும். அப்பதான் இந்த சமூகத்தில்...

தண்டனைக்கு தண்டனையா?

கொஞ்சநாளைக்கு முன்னால சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்குவதை நேரில் பார்த்து இப்படி ஒரு பதிவு போட்டிருந்தேன். எனக்கும் மனசுக்குள்ள, இப்படிப்பட்ட தண்டனைகள் தேவைதானா? ஆனா இப்படி பண்ணினாத்தானே நம்ம ஆளுக திருந்தும்னு நடுவர் இல்லாத பட்டிமன்றமெல்லாம் ஓடிக்கிட்டிருந்தது. சாதாரணமாகவே, இரண்டுபேருக்கு இடையில் சண்டை ஏற்பட்டு ஒரு பாதிப்பில் நீதி(?)மன்றம் போனால், இரண்டு பேரும் சமாதானமாகி , வக்கீலுக்கு கொடுக்க ஒன்றுமில்லைன்னு ஒரு முடிவுக்கு(!) வரும்வரை வழக்கு நடக்கும். இல்லைன்னா பகைவளர்ந்து அதை அடுத்த தலைமுறை எடுத்து நடத்தும்.அப்படியும் தீர்ப்பு சாதகமா இல்லைன்னா அப்பீலேய்! எத்தனைநாளைக்குத்தான் இப்படியோ? ஆனா நடு ஊரில் வைத்து தலையை வெட்டும் சவுதியில் , தீர்ப்புகள் சுடச்சுட ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் கிடைச்சுடும். (அதுக்கு மக்கள் தொகை, குற்ற எண்ணிக்கைன்னு பல காரணங்கள் இருக்கும்.) ஆனா இங்க அப்படி இல்ல.! அதுனாலயே இதெல்லாம் நமத்துப்போயி, குற்றம் செய்தவுங்க மேல ஒரு பரிதாபத்தையே உருவாக்கிடுறாங்க நம்ம வாய்தா ராஜாக்கள்! (மக்கள்தொகைக்கு ஏற்றமாதிரி நீதிமன்றங்களும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஓரளவுக்கு இருந்...