ஓமப்பொடி # 5
விடுமுறைக்காலம் துவங்கிவிட்டது.. தன் வீட்டுப்பிள்ளைகளை எந்த கோடைக்காலப் பயிற்சியில் சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் பிய்த்துக்கொண்டுள்ளார்கள். அதை வைத்து எத்தனை எத்தனை பயிற்சிகள்..? ஒரு பிட்நோட்டீஸ் பார்த்தேன்.. கையெழுத்துப் பயிற்சி, கலர் அடிக்கும் பயிற்சி, காசு எண்ணும் பயிற்சி, பூஜை செய்யப் பயிற்சி, புத்தகம் படிக்கும் பயிற்சி, பாட்டுப்பாடும் பயிற்சி, படம் வரையப் பயிற்சி, பறவை பார்க்கப் பயிற்சி போட்டோ எடுக்கப் பயிற்சி, முதலுதவிப் பயிற்சி, பொருள் அடுக்கப் பயிற்சி இசை கேட்கப் பயிற்சி இசை வாசிக்கப் பயிற்சி சதுரங்கப் பயிற்சி சக்கரக்கால் பயிற்சி சோறு உண்ணப் பயிற்சி யோகா பயிற்சி அபாக்கஸ் பயிற்சி என்று ஒரு மாதத்தில் பசங்களை மிகப்பெரிய வல்லுநராக்கும் முயற்சியில் ஆங்காங்கே முளைத்துள்ள summer camp ல் சேர்க்கத் துடிக்கிறார்கள். இதில் ரொம்ப காமெடி..குழந்தைகளோடு பழகும் பயிற்சி...ஹலோ அதை குழந்தைகள்தான் கத்துத்தரணும்..பெரியவர்கள் என்னத்தை கற்றுத்தரப்போகிறார்கள்? அப்பனிடம் இருது, 2500 ரூவா வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று புலனாகியது.