Posts

Showing posts from November, 2011

ட்விட்டுரை

Image
பல்வேறு காலகட்டங்களில் நான் ட்விட்டிய உரைகளின் தொகுப்பு  தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து , அதைப்படிக்கும்போது கண் கன்பியூஸ் ஆகுது . ! அடித்தவர் கையை கடித்துவிடலாம்போல் உள்ளது காந்தி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று யாருக்கும் தெரியாது . ஆனால் நாம் சம்பாதிக்கும் எல்லா பணத்திலும் காந்திதான் இருக்கிறார் . சுரேகாத்துவம் ! சும்மா இருக்கும்போது அயன் பண்ணியிருக்கலாமுல்ல ? - தங்கமணி ! அப்ப அயன் பண்ணினா நான் எப்ப சும்மா இருக்குறது ? - # அடி தாங்கலை ! என்னது ? முகப்புத்தகத்தில் அவர் பெயர் ஹாரிஸ் ஜெயராஜ் நாடார்ன்னு இருக்கு !! இது வேறயா ? # கலைஞனுக்கும் ஜாதி உண்டு ! அடுத்த பிறவியில் புரோட்டா செய்யத்தெரிந்த பெண்ணை மணக்கவேண்டும் . புதல்வனின் புரோட்டா வெறிக்கு ........ முடியலை ! பெரிய கடைகள் புறக்கணித்து ... சிறிய கடையொன்றில் துணிகள் அள்ளினோம் . உபசரிச்சு மகிழ்ந்தார் வியாபாரி ! தி நகரில் மரியாதை தெருவில் திரிகிறது . காசும் , கண்ணியமும் கொடுத்தால் , கடைச்சரக்கு வீட்டுக்கு வரும்