புத்தகத்தை திரு.சீமான வெளியிட, திரு.மனோஜ் கிருஷ்ணா பெற்றுக்கொள்கிறார்.
அனைவரும் கையில் புத்தகங்களுடன்...
புத்தகத்தில், தான் படித்தவற்றைப்பற்றி, தெளிவாகவும், அழகாகவும் திரு.சீமான் பேசினார்.
வந்திருந்த அன்பு நண்பர்களும், பதிவர்களும்.... ( சீமான வருவதற்கு முன்)
கூட்டத்தில் ஒரு பகுதி... (சீமான் வந்து சென்ற பின்)
புத்தகவெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்! மின்னஞ்சல் மூலம் வாழ்த்துத்தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
Tuesday, December 28, 2010
Monday, December 20, 2010
ஒரு நல்ல செய்தி!
சிறுவயதில் எல்லோருக்கும் அறிவுரை சொல்லும் சிலரைப்பார்த்திருக்கிறேன். அப்படிச் சொல்பவர்கள், தான் சொல்லியபடி நடந்துகொள்கிறார்களா என்றால், அதுவும் இருக்காது. ஆனால் தன் கடமையை விடாமல் செய்வார்கள். அறிவுரை கேட்டவர்கள் உண்மையிலேயே அதை எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்து, வளர்ந்துவிடுவார்கள். அறிவுரை சொன்னவர், இன்னும் சொல்லிக்கொண்டிருப்பார். வளர்ந்தவர்கள் மீண்டும் அவரிடம் வந்து கேட்பார்கள். அதைப்பார்த்துவிட்டு , அறிவுரை சொல்வதில் ஒரு போதை ஏற்பட்டது. ஆனால் ஒரு சிறிய மாற்றமாக, ’நாமும் வளரணும், அடுத்தவங்களுக்கும் அறிவுரை சொல்லணும்’ என்று எண்ணிக்கொண்டு, சின்னச்சின்ன விஷயங்களில் சரியாக இருக்க ஆரம்பித்தேன்.
எது சரி, தவறு என்று பல்வேறு புத்தகங்கள் கற்றுக்கொடுத்தன. எப்படி கற்றுக்கொடுக்கவேண்டுமென்று ஜேஸிஐ ( Junior chamber International) மிகவும் உதவியது.தன்னம்பிக்கைப் பயிற்சியாளனாக 8 ஆண்டுகள் ஓடிவிட்டது. இன்றுவரை என்னைச் சரி செய்துகொண்டுதான் இருக்கிறேன். . யாருக்காவது அறிவுரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். என் குறை என்று எண்ணிய -அதிகம் பேசும்- குணத்தை ,பல்வேறு தலைப்புகளில் நாள்கணக்கில் பேசும் அளவுக்கு நிறையாக , வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. சொல்லும் விஷயங்களையே எழுத ஆரம்பித்தபோதுதான் , நாகரத்னா பதிப்பக உரிமையாளரும் நமது பதிவருமாகிய குகன் அவர்கள், ஒரு சுயமுன்னேற்றப்புத்தகம் எழுதுங்கள் என்று பணித்தார். அதன்படி , சின்னச்சின்ன கட்டுரைகள் அடங்கிய ஒரு புத்தகம் இப்போது தயார்!
ஆம் நண்பர்களே! ‘நீங்கதான் சாவி!’ என்ற தலைப்பில் , நாகரத்னா பதிப்பகம் வெளியிடும் எனது புத்தகம் வரும் 25ம் தேதி , சனிக்கிழமை மாலை 4:30க்கு , நமது டிஸ்கவரி புத்தக அரங்கில் வெளியிடப்பட இருக்கிற்து. புத்தகத்தை திரு.சீமான் அவர்கள் வெளியிடுகிறார். அவருக்கு அடுத்ததாக 5.30க்கு மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் ஒரு பொதுக்கூட்டம் இருப்பதால் குறித்தநேரத்தில் கூட்டம் ஆரம்பித்துவிடும்.
தாங்கள் அனைவரும் , கண்டிப்பாக வந்திருந்து விழாவினை சிறப்பித்துத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முகவரி:
டிஸ்கவரி புக் பேலஸ்.
எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே கே நகர் மேற்கு. சென்னை- 78
செல்- 9940 44 6650
எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே கே நகர் மேற்கு. சென்னை- 78
செல்- 9940 44 6650
Subscribe to:
Posts (Atom)