மூட்டை முழுவதும் முரண்பாடு!
இயற்கை சீரழிகிறது மரங்களை வெட்டாதீர்கள் அவைகள் இல்லையென்றால் அவனியே இல்லை! எழுதிவிட்டு புன்னகைத்தான் கவிஞன் ! எதுகை மோனையுடன் மரம் காப்பாற்ற கவிதை எழுதிய காகிதமும் மரம்தான் என்பதை லாவகமாய் மறந்து..! இனி எதில் எழுதினால் மரம் காக்கலாம். ? நீ கவிதை எழுதுவதைக் குறை! நிறைய மரங்கள் மூச்சு விடும். ********************* அரசு மதுக்கடையில் அமிலக்காரமாய் அருந்திவிட்டு வண்டியில் போனால் பிடிக்கிறார்கள் குடித்துவிட்டு ஓட்டினேனாம்! அப்ப எதுக்குய்யா பார் வச்சு குடிக்க பக்குவமா சொல்றீங்க! குடிச்சவன் வீட்டுக்கு உருண்டுக்கிட்டா போவான்? ************************ பையனை கடத்தி அப்பனுக்கு செல்லில் பேசினா பிடிச்சுருவான்னு பயந்து லெட்டரில் எழுதி அனுப்பி வச்சேன் மகனைப்பாத்து சொன்னேன் ஒங்க அப்பனிடம் கொண்டு கொடு! பயந்துக்கிட்டு பணம் குடுப்பான்!