ஒரு பேரீச்சையும் , இரண்டு மிக்ஸிகளும்..!!
இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் கேட்டால் கிடைக்கும் என்று நிரூபித்திருக்கிறது இந்த உலகம்.! இந்த ஏப்ரல் 14 அன்று புதுக்கோட்டை சென்றிருந்தேன். அங்கு ஒரு லயன் டேட்ஸ் பேரீச்சை அரைக்கிலோ பெட்டி ஒன்று வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தாயிற்று.! பெட்டியை பிரிக்காமலேயே வைத்திருந்து, 19ம் தேதி அதைப் பிரித்து ஒரு பழம் எடுத்து தின்னலாம் என்று பார்த்தால், முதல் பழத்திலேயே வாலைக்குழைத்துக்கொண்டு, மூக்கை நீட்டியது ஒரு குட்டி வெண் புழு ஒன்று! திடுக்கிட்டுப் போனேன். சரி.. ஒரு பேரிச்சையில் தான் இருக்கும்போல என்று அடுத்ததை எடுத்தால் அதில் ஒரு கருப்பு நிற குட்டீஸான வண்டு.. புழுவின் பெரியக்கா போலிருக்கிறது. அப்புறம் சில பழங்கள் சுத்தமாக இருந்தது. மீண்டும் புழு..! ஆஹா.. பழைய சரக்கை வாங்கிவிட்டோம் போலிருக்கிறதே என்று நினைத்து டப்பாவைப் பார்த்தேன். தெளிவாக மார்ச் 2012 என்று போட்டிருந்தது. ஆக இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. அதில் நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் ...