கந்தக சாமி!
அய்யா.. ஏம்பேரு கந்தக சாமி! பொறந்த எடம் பூமிதாஞ் சாமி! நான் வானத்தில் இல்லாத சாமி ஆனா வாணம் செய்யுற சாமி! நாம்பாட்டுக்கும் செவனேன்னு நல்லகாலம் பொறக்குமுன்னு மண்ணுக்குள்ள மகிழ்ச்சியா மக்கிக்கெடந்தேன் சாமி! என்னயத்தேடிவந்து எக்குத்தப்பா நோண்டித்தந்து எதுக்காவது பயன்படுவேன்னு எப்படியோ கண்டுக்கிட்டாங்க.! மொதல்ல நாம்பாட்டுக்கும் மொறயாத்தான் இருந்தேன். பொறவியிலேயே நமக்கு கோபம் கொஞ்சம் அதிகம் சாமி! அதப்போய் மறந்துப்புட்டு அடக்கிவச்சு அடக்கிவச்சு அழுத்தமா மூடிவச்சு ஒருநாள் வெடிக்கவச்சு ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்டாங்க! நானும் சும்மா இல்ல.. நாலஞ்சு பயலுகளை நயமா நரகத்துக்கனுப்பிட்டு.. அதெப்புடி நரகம் னு அசதியா கேக்குறீகளா? என்னய தூக்கிப்போட்டு எகனை மொகனையா வெளயாண்டவன் எப்புடி சாமி சொர்க்கம் போவான்? நல்லதே நடக்காதான்னு கலங்கிப்போய் கெடந்தப்பதான் பளபளப்பா எரிய வச்சு பட்டாசா மாத்தி என்னை பார்புகழ வச்சாங்க.! சிவகாசிப்பக்கம் அந்த சின்னப்புள்ளைங்க என்னைத்தொட்டு வேலைபாத்து அவுக தாத்தா பட்ட கடன தடுமாறி அடச்சாங்க! அதுல ஒரு கொடுமை சாமி! ஏங்கொணம் எனக்கே பிடிக்காது. மனுசப்பய மாதிரியே எங்க இருக்கோம