Posts

Showing posts from December, 2010

நீங்கதான் சாவி - புத்தகவெளியீட்டு விழா புகைப்படங்கள்!

Image
 புத்தகத்தை திரு.சீமான வெளியிட, திரு.மனோஜ் கிருஷ்ணா பெற்றுக்கொள்கிறார். அனைவரும் கையில் புத்தகங்களுடன்...  புத்தகத்தில், தான் படித்தவற்றைப்பற்றி, தெளிவாகவும், அழகாகவும் திரு.சீமான் பேசினார்.  வந்திருந்த அன்பு நண்பர்களும், பதிவர்களும்.... ( சீமான வருவதற்கு முன்) கூட்டத்தில் ஒரு பகுதி... (சீமான் வந்து சென்ற பின்) புத்தகவெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்! மின்னஞ்சல் மூலம் வாழ்த்துத்தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

அழைப்பிதழ் இதோ!

Image
இதை க்ளிக்கி பெரிதாக்கிப் பார்த்து, அழைப்பை ஏற்று அன்புடன் வரவும்.

ஒரு நல்ல செய்தி!

Image
     சிறுவயதில் எல்லோருக்கும் அறிவுரை சொல்லும் சிலரைப்பார்த்திருக்கிறேன் . அப்படிச் சொல்பவர்கள், தான் சொல்லியபடி   நடந்துகொள்கிறார்களா என்றால் , அதுவும் இருக்காது . ஆனால் தன் கடமையை விடாமல் செய்வார்கள் . அறிவுரை கேட்டவர்கள் உண்மையிலேயே அதை எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்து , வளர்ந்துவிடுவார்கள் . அறிவுரை சொன்னவர் , இன்னும் சொல்லிக்கொண்டிருப்பார் . வளர்ந்தவர்கள் மீண்டும் அவரிடம் வந்து கேட்பார்கள் . அதைப்பார்த்துவிட்டு , அறிவுரை சொல்வதில் ஒரு போதை ஏற்பட்டது . ஆனால் ஒரு சிறிய மாற்றமாக , ’ நாமும் வளரணும் , அடுத்தவங்களுக்கும் அறிவுரை சொல்லணும் ’ என்று எண்ணிக்கொண்டு , சின்னச்சின்ன விஷயங்களில் சரியாக இருக்க ஆரம்பித்தேன் .         எது சரி , தவறு என்று பல்வேறு புத்தகங்கள் கற்றுக்கொடுத்தன . எப்படி கற்றுக்கொடுக்கவேண்டுமென்று ஜேஸிஐ ( Junior chamber International) மிகவும் உதவியது . தன்னம்பிக்கைப் பயிற்சியாளனாக 8 ஆண்டுகள் ஓடிவிட்டது. இன்றுவரை என்னைச் சரி செய்துகொண்டுதான் இருக்கிறேன் . . யாருக்காவது அறிவுரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் .