Posts

Showing posts from April, 2014

Veள்ளி Black Colour ஜுவல்லரி

Image
     அன்று நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு…       இன்று மாலை தி.நகரில் இருக்கும் VBC ஜுவல்லரிக்கு வர முடியுமா? ஒரு பிரச்னை என்றார்.       விபரம் கேட்டேன். சொன்னார்.       அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தது. அதுசமயம், அவரது மனைவி வீட்டில் அந்த ஜுவல்லரியில் வெள்ளிச் சொம்பு, தட்டு, விளக்கு, குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் வாங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் வந்தபின் , வாங்கிய வெள்ளிப்பொருட்களை அட்டைப்பெட்டியிலிருந்து பிரித்துப் பார்த்தபோது, கன்னங்கரேர் என்று இருந்திருக்கிறது. உடனே பயந்துபோய், எடுத்துக்கொண்டு அந்த ஜுவல்லரிக்குச் சென்றிருக்கிறார்கள். கடையில்,  அதைப்பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாமல், உப்புக் காற்றுப் பட்டால் வெள்ளி கறுத்துப்போவது சகஜம்தான் என்று நண்பரை பல்வேறு காரணங்கள் சொல்லி, சமாதானப்படுத்தி, மீண்டும் பாலீஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள்.      அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் 2 ந...

திறமை இடைவெளி

Image
இந்தியாவின் அடுத்த அரசு செய்யவேண்டியது , போர்க்கால அடிப்படைச் செயல்பாடுகள் பற்றி ‘நீயா நானா’வில் விவாதிக்கப்பட்டது. நான் நீண்ட நாட்களாக, பல்வேறு இடங்களில் சொல்லிவருவதை இருவேறு கோணங்களில்  Badri Seshadri  அவர்களும், அழகேசன் அவர்களும் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. ஆம்.. இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய தேவை... இந்திய இளைஞர்களின் வேலைத்திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துவதுதான். படித்தால் போதும்... எல்லா நிறுவனமும் எனக்கு வேலை தந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலிருந்து துவங்குகிறது இந்த Skill gap.. வேலை கிடைத்தால் போதும். பிறகு சிரமப்பட வேண்டியதில்லை ...எதுவும் கற்றுக்கொள்ளவேண்டியதில்லை என்ற நினைப்பில் நிலை கொள்கிறது இந்த Skill gap. இரண்டு ஆண்டு ஓட்டினால் போதும். பிறகு அடுத்துவருபவர்களை அடிமைப்படுத்தியே ஓட்டிவிடலாம். நிறுவனத்தைக் குற்றம் சொல்லி சாதித்துவிடலாம் என்ற நினைப்பில் வேர் பிடிக்கிறது இந்த Skill gap. கிடைத்த வேலையில் , ஓட்டிக்கொண்டே ,வேறு நிறுவனத்துக்கு வலைவீசலாம். இருக்கும் நிறுவனத்தில் என்னை, யாராவது ஏதாவது சொன்னால், தாங்கிக்கொள்ளவே முடி...