கால ஓட்டத்தில் காணாமல் போனவை !
அதெல்லாம் அந்தக்காலம்’ என்று அங்கலாய்க்கும் மனோபாவம் அனேகமாய் எல்லோருக்கும் ஆங்காங்கே வருவதுண்டு! அடிப்படைக்காரணமாய் சிறுவயதில் சிறப்பாக நீங்கள் பார்த்த ஒரு விஷயம் மாறிப்போய் வந்திருக்கும்! கால ஓட்டம் அதன் காரணமாய் கட்டாயம் இருந்திருக்கும்! எத்தனையோ ஆண்டுகள் உங்கள் உணர்வோடு கலந்துவிட்டு இப்போது திடீரெனறு இல்லாமல் போய்விட்ட அவ்விஷயம் உங்களுக்குள் தாக்கங்கள் தந்திருக்கும்! மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் மாறியவை என்னவென்று மறக்காமல் இருப்போம் ! வேப்பங்குச்சிகள் செய்துவந்த பல்விளக்கும் வேலைதன்னை பிரஷ்கள் தட்டிப்பறித்ததுபோல் நெற்றிப்பொட்டாய் ஜொலித்திட்ட சாந்தை, ஸ்டிக்கர் பொட்டு சாய்த்ததுபோல் கெந்தி விளையாடும் கில்லிதாண்டை கிரிக்கெட் ஆட்டம் கெடுத்ததுபோல் கடிதம் எழுதும் அழகுதன்னை கையில் செல்போன் பறித்ததுபோல்.... டிக்கெட் எடுத்து விசிலடித்து பார்த்த திரையரங்கை டிவிடியும் , விசிடியும் வீழ்த்தியதுபோல் ஆப்ரகாம் பண்டிதர் தெரு நண்பனை நேரில் வைத்துக்கொண்டே அமெரிக்க புதியவனுடன் சாட்டுவதுபோல், எத்தனை எத்தனை மாற்றங்கள்! கல்கோனா, கட்டை வண்டி பெல்பாட்டம் பேண்ட் பெட்ரோமாக்ஸ் விள