பயணச் CHEAT
இந்த மாதத் தொடக்கத்தில், விருதுநகர் செல்லவேண்டிய வேலை இருந்தது. உடனடிப்பயணம் என்பதால், எந்த முன்பதிவும் செய்யவில்லை. அப்படியே கிளம்பி கோயம்பேடு சென்று மதுரை செல்லும் பேருந்தில் சென்றுவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி கோயம்பேடு சென்றால், அங்கு போக்குவரத்தை திருப்பி விட்டிருந்தார்கள். பேருந்து நிலையத்தின் உள்ளிருந்து , பிரதான வாசலை நோக்கி, எல்லா ஊர்களுக்குமான பேருந்துகளும் வந்துகொண்டிருந்தன. வரிசையாக, திருச்சி, சிதம்பரம் என்று படித்துக்கொண்டே வந்தபோது, மதுரை என்று போட்டு ஒரு ULTRA DELUXE பேருந்து நகர்ந்து வந்துகொண்டிருந்தது. உடனடியாகக் கை காட்டி, மதுரைக்கு இருக்கை இருக்குமா? என்று கேட்டேன். முன்னால் அமர்ந்திருந்த நடத்துனர், ஒரு சீட்தான் இருக்கு! ஏறுங்க என்றார்… உடனே ஏறினேன். வண்டி நகர ஆரம்பித்தது. நான் உள்ளே செல்வதற்குள் , நடத்துனர் என்னை அழைத்து, ’மதுரைக்கு 400 ரூபாய் ஆகும்’ என்றார். பேருந்து கட்டண உயர்வுக்குப்பிறகு இவ்வளவு ஆகிவிட்டதா? என்ற அதிர்ச்சியில் … ’அவ்வளவா? அடேயப்பா!’ என்றேன். ’இல்லை..ட