Posts

Showing posts from September, 2011

நியாய நாய்

Image
விபத்து நடந்து, வினாடிகளில் காணாமல் போகும் நகைகளில், தொகைகளில் இருக்கிறது மனிதாபிமானப் பிசாசுக்கும் சுயநல தெய்வத்துக்குமான அமைதிப் போரின் அநியாய வெற்றி! வெற்றியின் ருசியில் நாளைய  விபத்துக்காய் நாக்கைத் தொங்கப் போடுகிறது நியாய நாய்!

இரத்தம்

Image
         சவுதி அரேபியாவின் யான்பு வில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, 1998ன்  பக்ரீத் விடுமுறை!!. ஒரு வாரம் போர் அடிக்கும்., எங்காவது டூர் செல்லலாம் என்று முன்னரே, நண்பர்களுடன் ஆலோசித்தபோது, சவுதி அரேபியாவின் மலை நகரங்கள் தபுக், ஹெய்ல் போன்றவை பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் திடீரென்று எகிப்து அருகில்தான் என்பதால், கெய்ரோ போகலாம் என்று முடிவெடுத்து வேலைகளை ஆரம்பித்தோம்.        அடப்பாவிகளா! ஏதாவது பக்கத்துல இருக்குற ஒரு ஊருக்குப்போகலாம்னா, பக்கத்து நாட்டுக்கே போக ஐடியா குடுக்குறீங்களே? என்று திட்டினாலும், எனக்கும், பிரமிடுகளின் பிரம்மாண்டத்தின் மீது இருந்த அளப்பரிய ஆர்வம் காரணமாக, ஒரு மாத சம்பளத்துக்கும் மேல் செலவாகும் என்று தெரிந்தாலும், ஆசையுடன் ஏற்பாடுகள் செய்தோம்.      பயண நாளும் வந்தது. யான்புவிலிருந்து ஜெட்டா, பின் அங்கிருந்து கெய்ரோ.! கெய்ரோ விமானநிலையத்தில் இறங்கி இமிக்ரேஷன் க்ளியரன்ஸுக்காக வரிசையில் காத்திருந்தோம். அப்போது, அரபிக் கலந்த ஒரு மொழியில் , - அப்போது எனக்கும் அரபிக் தெரியாது. – ஏதோ ச...