Posts

Showing posts from February, 2014

ஆட்டோ மீட்டர் - கேட்டால் கிடைக்கும்

Image
குற்றாலத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்து, சென்னை வடபழனியில் இறங்கும்போது காலை 6:20 ஆகியிருந்தது.      கதவு திறந்தவுடன் வரவேற்கக் காத்திருந்தவர்கள்போல், ஆட்டோ டிரைவர்களின் கூட்டம் மொய்த்தது. இறங்கி, விருகம்பாக்கம் போகணும். ஆனா மீட்டர் போட்டாத்தான் வருவேன் என்று நான் சொல்லி , நாக்கை மடித்து உள்ளே வைப்பதற்குள் கூட்டம் காலி…!! என்னை விட்டுவிட்டு அடுத்த பயணியைத் தேடிச் சென்றுவிட்டார்கள். நான் விடவில்லை. அந்த வரிசையில் இருந்த சுமார் 15 ஆட்டோக்களிலும் வரிசையாகக் கேட்டேன். அனைவரது பதில்களும் இப்படி இருந்தன.. 100 ரூபா ஆகும் சார்! டேய்! சாருக்கு மீட்டர் போடணுமாம். வராது சார்! என் மீட்டர் ரிப்பேர். சார் மீட்டர் போட்டாத்தான் வருவாராம்..நீ போறியா? இப்போ இன்னாத்துக்கு சார் மீட்டரு 60 ரூவா வரும். 10 ரூபா சேத்து 75(!) ஆ குடுத்துருங்க! மீட்டரெல்லாம் சும்மா சார்… அதெல்லாம் கட்டுப்படியாவாது. பேப்பர்ல படிச்சுட்டு வராதீங்க சார்! சென்னைல எங்கயும் மீட்டர் போடுறதில்லை. மீட்டர் போடுறேன். ஆனா, 80 ரூவா தரியா? பக்கத்து ஏரியாக்கெல்லாம் மீட