Posts

Showing posts from January, 2013

புத்தகக் காட்சி - தரிசனங்கள்

Image
பொங்கலுக்கு புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டதால், புத்தகக் காட்சியின் முதல் நாளிலிருந்து செல்ல முடியவில்லை. ஒய் எம் சி ஏ வில் நுழையும்போதே, பார்க்கிங்குக்கும், கண்காட்சிக்கும் இருக்கும் தூரம் கொஞ்சம் அதிகம்தான் என்று தெரிந்தது. எப்பொழுதும்போல், தனியாக ஒரு முறை சுற்றிவர ஆரம்பித்தேன். இந்த முறை குழந்தைகளுக்கான புத்தகங்களும், கற்பிக்கும் கருவிகளும் அதிகம் பங்கெடுத்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற GROLIER நிறுவனம் குழந்தைகளின் அறிவூக்கம் செய்யும் பேக்கேஜைப் பற்றி பொறுமையாக விளக்குகிறார்கள். உண்மையிலேயே பயனுள்ள கல்விப் பொருட்கள்தான். ஆனால் விலை மிகமிக அதிகம். 9 வயதுச் சிறுவனுக்கான கற்றல் கருவிகள் அடங்கிய  செட் 36000 ரூபாய் சொல்கிறார்கள். எங்க ஊர்ல ஒரு வருஷ ஸ்கூல் ஃபீஸே அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு வந்தேன். (சதி லீலாவதியில், கோவை சரளா ஹேண்ட் பேக் வாங்கும் காட்சி நினைவுக்கு வந்தது. ஏனுங்…இந்த பேக்கு  மாட்டுத்தோல்லதானே பண்ணது.. ஆமா!   எம்புட்டு? ஜஸ்ட் ..4000 .. ….எங்கூர்ல மாடே அவ்வளவுதாங்க!)   சில பதிப்பகங்களின் இடங்களையும், வாங்கவேண்டிய புத்தகங்களையும் குறிப்பெடுத்துக்கொண்டபின், ம