Posts

Showing posts from 2016

இறைவி - எண்ணங்கள் எனது !

Image
 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று! இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார். ஆண் – நெடில்..  பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட...

ஜில்லெட் - கேட்டால் கிடைக்கும்

பொதுவாக ஷேவிங்குக்கு ஜில்லெட் நிறுவனத்தின் மாக் 3 (Mach 3) அல்லது வெக்டர் பிளஸ் (Vector Plus) ஆகிய ரேஸர் மற்றும் பிளேடு ரகங்கள்தான் வாங்குவது வழக்கம்!  அன்று கொஞ்சம் ஆர்வமாக வெக்டர் 3 என்ற ரகத்தில் 3 பிளேடு கொண்ட ஒரு ரேஸரைக்கண்டவுடன் , இதை முயன்றால் என்ன? என்ற எண்ணத்தில் வாங்கி வந்துவிட்டேன்.  இரண்டு நாட்களுக்குப்பிறகு அதனைப் பிரித்து பயன்படுத்தினால், முதல் ஷேவே தோலின்மீது எரிச்சலாகப் பரவியது. பொதுவாக புதிய ப்ளேடில் இருக்கும் வழுக்கும் தன்மை இல்லை. இந்த ப்ளேடு மட்டும்தான் இப்படி என்று நினைத்து, அடுத்தடுத்தவற்றைப் பயன்படுத்தினால், அன்று முழுவதும் முகத்தில் யாரோ உண்மையிலேயே வன்மத்தில் ப்ளேடு போட்டமாதிரி எரிச்சல்.! அப்படியே அடுத்தது சரியாக இருக்கும் என்று முயற்சித்தே, அந்தப் பெட்டியில் இருந்த நான்கு ப்ளேடுகளும் காலி! மொத்தத்தில் வெக்டர் 3 ப்ளேடு சரியில்லை என்பதுதான் முடிவாக வந்தது.  உடனே சிரமம் பாராமல், ஜில்லட்டின் இணையதளத்தைத் தேடி, அதன் வாடிக்கையாளர் பின்னூட்டப் பக்கத்துக்குள் நுழைந்து, வெக்டர் 3 உடனான எனது அனுபவத்தைப் பகிர்ந்து, இதுக்கு என்ன செய்யப்போறீங்க எ...

சரவணா ஸ்டோர்ஸ் ! BRANDமாண்டமாய் !!

Image
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் பார்த்து ஏகப்பட்ட விவாதங்கள்! அதற்குள் இருக்கும் நேர்மறை சூட்சுமம் நமக்கு புரிவதில்லை. சரவணா ஸ்டோர்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண பெரும் கடை! ஆனால் இப்போது ஒரு பிராண்ட்..! அதற்கு தேவையில்லாமல் ஒரு நடிகருக்குக் கோடிக்கணக்கில் கொடுத்து, அவர் முகத்தை அந்த நிறுவனத்துக்கு அடையாளமாக்குவது ஒரு பிராண்டுக்கு தேவையில்லை. மேற்கத்திய பிராண்டுகள் , பெரும்பாலும் ஒரு குறியீட்டைக் கொண்டிருக்கும் அல்லது அதன் முதலாளியின் படத்தைத்தான் கொண்டிருக்கும். உலகெங்கும் பொரித்த கோழி விற்கும் KFC யின் பிராண்ட் பாருங்கள்.. அதன் முதலாளியின் படம்தான் இருக்கும். நிதி நிர்வாகம் செய்யும் FRANKLIN TEMPLETON பாருங்கள்! அதன் முதலாளி படம்தான் இருக்கும். பாலு ஜுவல்லர்ஸ் முதலாளிதான் அதன் பிராண்ட் ரத்னா ஸ்டோர்ஸுக்கு முதலாளிதான் பிராண்ட் வசந்த் அண்ட் கோவுக்கு முதலாளிதான் பிராண்ட் சரவணா ஸ்டோர்ஸின் மூலக் குடும்பத்துக்கு இன்னும் அண்ணாச்சியின் சிரித்த முகம்தான் பிராண்ட்! அதனால், அவர் முகம் காட்டியதில் ஒன்றும் தவறில்லை.!! நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ, இன்னொரு பிராண்டுக்க...