Posts

Showing posts from April, 2011

குறையொன்றுமில்லை...!

Image
    என் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இந்தப்பதிவு! முன்னுரை தேவைப்படாத சில பகிர்தல்கள் இருக்கின்றன. அத்தகையதில் இதை சேர்க்கலாம்.  பதிவின் நீளம் சம்பவங்களால் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.       நர்சிம்.       இந்தப்பெயரில்தான் எத்தனை வசீகரம்! தெளிவான முகமும், பார்த்தவுடன் ’பச்சக்’ என்று ஒட்டிக்கொள்ளும் நட்பும், இத்தனையும் மீறி,எவ்வளவு பெரிய நிறுவனத்தில் மிகப்பெரும் பதவியில் இருப்பவர் என்ற  மமதை இன்றி இறங்கிப்பழகும் குணமும் பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.       பதிவுகளில் அறிமுகம் இருந்தாலும், அவரை முதலில் பார்த்தது சென்னை புத்தகக்காட்சியில், தனது அய்யனார் கம்மா புத்தகத்தின் விற்பனை பற்றியும் அதன் வீச்சு பற்றியும் அக்கறையுடன் இருந்ததும், ஓடிச்சென்று தனது ஹோண்டா சிட்டி காரிலிருந்து கையிலிருந்த புத்தகங்களைக்கொண்டு கடைகளில் சேர்த்ததும், ஏன் உங்கள் நிறுவன காரை பயன்படுத்தவில்லை என்று நான் கேட்டபோது, பிற நிறுவனங்களின் காரை ஓட்டிப்பார்த்தால்தான் நமது நிறை குறைகள் தெரியும் என்று சொன்னதில் இருந