மூன்றுவரித் திரைப்படங்கள்
ராமாயணத்தை சுருக்கிச் சொல்லச்சொன்னால், இப்படித்தான் சொல்வார்களாம்..! தம்பி கிழித்தான் கோட்டை! அண்ணி தாண்டினாள் கோட்டை! அண்ணன் விட்டான் கோட்டை! இதுபோல் நமது படங்களைப்பற்றி கூறமுடியுமா என்று யோசித்தேன்! படித்து கிராமம் சென்றான்! ஊருக்காக நின்றான்! பங்காளியைக் கொன்றான்! ---- பொய்யாய் வேலை வைத்தியம்! பொதுவாய் கட்டிப்புடி வைத்தியம்! மருத்துவமனைக்கே வைத்தியம்! ----- பத்துபேரும் பினாமி! கிருமிதான் எனிமி! எனிமி கொல்ல சுனாமி! ----- சேர்த்துவைத்த நட்புக்கு வலி! நட்பினால் காதல் பலி! மீண்டும் பிரிந்தால் பொலி! ------ ஆசையாய் இலவசப் படிப்பு ! ஆதிகேசவனால் இடிப்பு ! கள்ளப்பணத்தால் முடிப்பு! பொழுதுபோகலைன்னா இதுமாதிரி சொல்லி விளையாடிக்கலாம்! படங்களைக் கண்டுபிடிங்கன்னு சொல்லி படுத்தமாட்டேன். நீங்களே கண்டுபிடிச்சுருவீங்க!!