Posts

Showing posts from March, 2008

மங்களூர் சிவாவுக்கு ஒரு முரட்டு பின்னூட்டம்

மங்களூர் சிவா போட்ட இந்தப்பதிவுதான், இந்தப்பதிவுக்குக்காரணம்.. முதலில் எனக்கு பார்த்திபனின் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது! வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் செத்துதான் தொலைப்போமே! செத்து என்ன செய்யப்போகிறோம் வாழ்ந்துதான் தொலைப்போமே! இதில் இரண்டு விஷயங்களை அலச வேண்டியிருக்கு! முதல்ல.. ஆண் பெண் உறவுமுறை .. (ஏன்னா இதுதான் அதிகபட்ச உணர்ச்சிவசப்படலுக்கான காரணி) அடுத்து..தற்கொலை !       இந்த ஆண், பெண் உறவுமுறையை நாம சரியா பாக்கலைங்கறதுதான் பெரிய கொடுமை! அது, அன்றாடம் சம்பாதிச்சு வாழ்க்கை நடத்துறவனா இருந்தாலும் சரி! அடுத்த ஜென்மத்துக்கும் சேத்து சம்பாதிச்சு வச்சு சொகுசு வாழ்க்கை நடத்துற ஆளா இருந்தாலும் சரி..(என்ன இருந்தாலும் மூதாதையர் ஒண்ணுதானே ! )       அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பிடிச்சுப்போய். திருமணம் செய்தோ, இல்லாமலோ சேர்ந்து வாழத்துவங்குகிறார்கள்.முதல்ல எல்லாம் சுமுகமாத்தான் போயிக்கிட்டிருக்கும். ஒருத்தர் குறை இன்னொருத்தர் கண்ணுக்குத்தெரியும் வரை ! இந்த இடத்தில் அன்னை தெரசாவின் வாக்கியம் ஞாபகம் வருது.! ' குணத்தைப்பார்க்கத்துவங்கிவிட்டால் நம்மால் அன்புகாட்ட முடியாது! '...

நான் என்ன தப்பு செஞ்சேன்..?

சுக்ரீவ ராசா ரொம்ப கவலையா இருக்காரு! அவரு சம்சாரம் அவுக அண்ணன் வூட்டுலயே இருந்துக்கிச்சாம். அதுவா இருந்துக்கிச்சா? அவரு புடிச்சு வச்சுக்கிட்டாரா? அதுவும் தெரியலை..மொத்தத்துல ராசா ரொம்ப கவலையோடவே திரியிறாரு! சரி..சரி..நீ இருக்குற வாழத்தாருல கொஞ்சத்தை எடுத்து தின்னுப்புட்டு போ..தோலை வாசல்லயே போட்டுறாத.. புள்ள வழுக்கி வுழுந்துட்டான். நான் ஏதாவது ரோசனைல இருந்திருப்பேன்.நீயாவது எடுத்து வீசியிருக்கலாமுல்ல.! சரி நம்ம சோட்டான் எங்க போனான். ? அதான் பத்து வயசுக்கு மேல உள்ள புள்ளைங்களுக்கெல்லாம் சண்ட கத்துத் தராகளாமுல்ல ! அதான் போயிருக்கான். ஒங்க ராசா பொண்டாட்டிய மீக்க, ஏம்புள்ளய சண்டைக்கு அனுப்ப வேண்டியிருக்கு! அடியே சத்தம்போட்டு பேசாதடீ! யாரு காதுலயாவது வுழுந்துடப்போவுது! சரி..சரி பாத்து போ..வாலை மிதிச்சுப்புடாத! ஒதுங்கி ஒக்காராம..பாதைல ஒக்காந்துக்கிட்டு அளும்பு பண்றியா? கோவுச்சுக்காதய்யா..என் ம்ம்முத ராசா! இப்புடி பாசமான பொஞ்சாதிக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்டீ! அது சரி..எனக்காக நீ என்னவேணும்னாலும் பண்ணலாம். ஒரு கூட்டத்தையே சங்கடப்படுத்தினா நல்லா இல்லைல்ல! ஏய்..இப்ப என்ன சொல்ல வர்ற? இல்ல...நம...

லட்சியம் நிச்சயம் வெல்லும் ! - பாகம் 2

இதுதான் லட்சியம்னு முடிவெடுத்துட்டா..அதுக்கப்புறம் அதை நோக்கிய பயணம்தான் நம் கண்ணுக்கு தெரியணும். சின்ன வயசுலேயே கார்கள்மேலயே கவனத்தை வச்சு..அதுதான் வாழ்நாள் லட்சியம்னு இருந்த ஹென்றி போர்டுதான் Ford ங்கிற கார் கம்பெனியையே உருவாக்கினாரு.! சினிமாதான் உலகம்னு 9 வயசுலேருந்து கனவுகண்டுக்கிட்டிருந்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் உலகமே வியக்குற அளவுக்கு ஜுராசிக் பார்க்ன்னு படம் எடுத்தாரு! ஒருநாள் இந்த உலகத்தையே தன் வார்த்தைகளால் கட்டிப்போடலாம்னு சிறுவயதிலேயே நினைச்சதால்தான் கண்ணதாசன் சிறந்த கவிஞரா ஆனாரு! அமைதிப்படை படத்துல...ஒரு நாயோட சண்டை போட்டு தேங்காய் பொறுக்குறவரா இருக்கும் சத்யராஜிடம் , மணிவண்ணன் கேப்பாரு..உன் லட்சியம் என்னன்னு, அதுக்கு அவரு..பக்கத்தில இருக்குற அரண்மனைய வாங்கணும் னுவாரு.! அதுக்கு மணிவண்ணன் சிரிச்சுட்டு...இதெல்லாம் நடக்குற காரியமான்னுவாரு..அப்ப சத்யராஜ் சொல்வார். முடியும்னு நெனச்சுத்தானுங்கண்ணா..நிலாவுல கால் வச்சாங்க..! நம்ம முடியாதுன்னு நினைச்சதாலதான் இன்னும் நிலாச்சோறே ஊட்டிக்கிட்டிருக்கோம். அதே மாதிரி அந்த அரண்மனையை அடைஞ்சிடுவார் சத்யராஜ். நம்மள்ல பாதி பேர் தோல்வி பற்றிய...

லட்சியம் நிச்சயம் வெல்லும் !

எல்லாருக்கும் லட்சியம்கிற வார்த்தை நல்லா தெரியும்..ஆனா திடீர்ன்னு கேட்டா எத்தனை பேரால என் லட்சியம் இதுதான்னு அறுதியிட்டு சொல்லமுடியும்.? லட்சியத்துல இப்போதைய லட்சியம், குறுகிய கால லட்சியம், நீண்ட நாள் லட்சியம், வாழ்நாள் லட்சியம் ன்னு நாலுவகை இருக்கு..! இந்த பதிவை பாக்கணும்னு உக்காந்திருக்கீங்க இல்லயா? இதுதான் இப்போதைய லட்சியம் ! இன்னும் 4 நாளைக்குள்ள ஒரு அதிகாரியை சந்திக்கணும், ஒரு அப்ளிகேஷன் போடணும், டெலிபோன் பில் கட்டணும்னு இருந்தால் அது குறுகிய கால லட்சியம்.! நீண்ட நாள் லட்சியங்கிறது...ஒரு பள்ளிப்படிப்பையோ கல்லூரிப்படிப்பையோ சிறப்பா முடிக்கணும்னு நினைக்கிறது. அப்ப வாழ்நாள் லட்சியம்? ...அதுதான் ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும்....நடிகராகனும், தொழிலதிபராகனும், கலெக்டராகனும்னு...ஒவ்வொண்ணும் ஒரு வகை...! ஆனா லட்சியமே இல்லாம இருக்குறது ரொம்ப கொடுமை! ஒரு சாதாரண ஊர்ல..மிஸ்டர் சாதாரணம்னு ஒருத்தர் இருந்தாராம். அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாராம். அதுனால அவரை ஒரு சாதாரண ஸ்கூலில் சேத்தாங்களாம். அவரும் சாதாரணமா படிச்சு சாதாரண மார்க் வாங்கினாராம். அதுனால ஒரு சாதாரண காலேஜ்ல சாதாரண டிகிரிதான் கெட...

எல்லாரும் பதில் சொன்னபிறகு...ஒப்புக்கு..!

Image
மூளைக்கு வேலைன்னு நானே சுட்டுப்போட்டா.. நமக்கும் மேல உடனே சுடச்சுட பதிலை அடிச்சுத்தட்டிவுட்டுட்டாங்க நம்ம மக்கள்! அதிலும் ஒரு கூத்து என்ன ஆச்சுன்னா.. நான் பாட்டுக்கும் எல்லா பதிலையும் உடனுக்குடன் பிரசுரிச்சு சுவாரஸ்யத்துக்கே வழியில்லாம செஞ்சுட்டேன். (முன்ன பின்ன போட்டி நடத்தியிருக்கணும்...!) படக்குன்னு பதில் சொன்ன பதிவர் மாதங்கிக்கு வாழ்த்துக்கள்! ஒப்புக்கு ...பதில் தாள்!

மூளை வேலைக்கு வேளை !

Image
இந்த கேள்வித்தாளுக்கு பதில் எழுதி பின்னுட்டத்தில் போடுங்களேன். உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கும். இருந்தாலும்............... எவ்வளவோ செய்றீங்க ! இதைச்செய்ய மாட்டீங்களா ? பதில் அடுத்த பதிவில்...!

புதுசு புதுசா மொபைல் போன்..பாகம் 2

Image
பில்டிங் கட்டி...ஒக்காந்து...பேரு வச்சு யோசிச்சிருக்காங்க....

புதுசு புதுசா மொபைல் போன்..

Image
பல்வேறு மொபைல் போன் கம்பெனிகள் புதுசு புதுசா மாடல்களை அறிமுகப்படுத்தப்போறாங்க! அவைகளில் சிலதான் மேல பாத்தது..! 

விடைபெறுகிறேன்..

அற்புதமான சூழலில் எழுதத்தூண்டி சினேகத்துடன் வாசித்து பின்னூட்டங்களிட்டு மகிழ்வூட்டிய உங்களிடமிருந்து...... இல்லை...! (அதுக்குள்ள விட்டுருவோமா?) இப்ப ஒரு அரசு பண்பலையில் வானொலி ஓட்டி (RJ க்கு தமிழில் என்னப்பா?) யாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால், கொஞ்சம் நல்லபிள்ளையா நடிக்கவேண்டிய கட்டாயத்தில் பதிவெழுத முடியலை... இப்போதெல்லாம் நேயர்களிடம்.. நேரடி தொலைபேசி நிகழ்ச்சியில் பேசி...கேள்விகள் கேட்டு விடைபெறுகிறேன்.. அதைத்தான் சொல்லவந்தேன்.. அதுக்குள்ள...!

ஆனந்த விகடனில்.....

ஆனந்த விகடனில் டிக்..டிக்..டிக் என்ற தலைப்பில் வந்த ஜாலியான, ஆனால் ஏறத்தாழ உண்மையான தத்துவங்கள் மிகவும் நன்றாக உள்ளன. இப்போதெல்லாம், வாங்கியவுடன் அதைப்படிக்கும் அளவுக்கு அடக்கமுடியாத ஆவலைத்தூண்டும் தத்துவங்களை கொஞ்சம் கொத்தி எடுத்து..உங்கள் முன்னால்..!  ஒரே காரணம்! விவாகரத்துக்கு முக்கியக் காரணம்... திருமணம்தான்! பெண்களின் தப்பு! பல பெண்கள் ஒன்றுமில்லாததுக்கெல்லாம் பரவசப்படுகிறார்கள். அது கூடப் பரவாயில்லை; அவர்கள் செய்யும் தப்பு, அதையே கல்யாணமும் செய்துகொள்வதுதான்! மனிதன் திருமணம் ஆகும் வரை எந்த ஒரு மனிதனும் முழுமை பெறுவதில்லை; திருமணம் ஆன பின்போ... முடிந்தேபோகிறான்! பின்புத்தி! இரண்டு கால்களாலும் நீரின் ஆழத்தைச் சோதிக்காதே! சொல்லாதே! உண்மை என்பது மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒரு விஷயம். அதனால், தகுதியற்றவர்களிடம் அதைக் கொடுக்கலாகாது! அந்த முயற்சியாவது... யாராவது உங்களிடம் வந்து உதவி கேட்டால், அதைச் செய்து தர நீங்கள் முயற்சி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை; ஆனால், முயற்சி செய்யவாவது முயற்சி செய்யுங்கள்! வித்தியாசம் அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் ஒரு சின்ன வித்தியாசம்தான். ...

பெண்களே..பெண்மையே....வாழ்க நீங்கள்!

பெண்களே..பெண்மையே வாழ்க..நீங்கள்! அம்மா ராதா.. தங்கை வித்யா மருமகள் சொர்ணா மனைவி ஹேமா வயதில் மூத்த சொந்தங்களாய், ஜம்பா டீச்சர் இரண்டு லட்சுமிகள் விசாலாட்சி மீனாட்சி சரோஜா தங்கம்மாள் விஜயலட்சுமி கமலா ஆசிரியைகளாய் மேரி டீச்சர் ரத்னாபாய் டீச்சர் வளர்மதி டீச்சர் சித்ரா மேடம் பேபி லதா மேடம் கீதா மேடம் சகோதரிகளாய், சாந்தி சித்ரா ஆனந்தி ஷோபனா உஷா உமா புஷ்பா மீனாட்சி மகேஸ்வரி சாந்தி ரேவதி அகிலா சுமதி அக்கா அண்ணிகளாய் பத்மா விஜி ரமா உமா புஷ்பா மற்றும் ராஜி உமா சின்ன ராஜி வித்யா சத்யா ஹரிணி சத்யா ஐஸ்வர்யா காயத்ரி கீர்த்தனா தோழிகளாய் மல்லிகா செலின் ப்ளோரா சுகுணா சாந்தி அவாகனி சுமதி கல்யாணி வித்யா சாமுண்டீஸ்வரி கவிதா ரத்னா சுனிதா ரோகிணி சில்வியா ஜன்னத் ஜோஸ்லின் மெட்டில்டா சிந்தாமணி டெலா க்ரூஸ் ஆன் செலிபேத் சிவகாம சுந்தரி புவனா ஹேமா அனிதா சத்யா சுமதி லதா மங்கேஷ் ராஜி ரமணி சந்தியா கவிதா அபிராமி சூர்யா தேவி பதிவர்கள் புதுகைத்தென்றல் துளசி கோபால் டெல்பைன் மேடம் மங்கை காயத்ரி...... பிறக்கப்போகும் என் மகளுக்கும்.... நீங்கள் என்றென்றும் இனிமையாய், நிறைவுடன் வாழ்ந்து நின்று எல்லா வளமும் பெற்று மகிழ, என் இ...

தொடர் விளையாட்டா....? சரி...சரி..

சமீப காலமா...பதிவுலகத்துல பாத்துக்கிட்டிருந்தேன்..ஒருத்தர் பதிவு போட்டுட்டு. அது சம்பந்தமா 4 பேரை தொடரச்சொல்றது ! அட..இது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் மாதிரி இருக்கேன்னு பாத்தேன். ஆனா...வேடிக்கை பாத்தவனை கூத்தாடச்சொன்னமாதிரி... புதுகைத்தென்றல்..என்னைய இதுல இழுத்துவுட்டுப்புட்டாங்க! சாதாரணமாவாவது ஏதாவது ரைம்ஸ் ஞாபகம் இருக்கும்! இப்ப சுத்தமா இல்லை! அப்துல் ரகுமான் ஒரு கவிதை எழுதியிருப்பாரு. நான் மழைக்குக்கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்லை! ஒரு நாள் ஒதுங்க நேரிட்டபோது கூட மழையைத்தான் ரசித்துக்கொண்டிருந்தேன்...! அதுமாதிரி...எனக்கு இந்த pre-KG அனுபவமெல்லாம் கிடையாது. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு ..பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த பாட்டுக்கள்னா....! 1.தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்யமதுரமாமே! 2. பெத்லகேமில் பிறந்தவரை போற்றித்துதி மனமே! (ரொம்ப நாள் இதை வெத்திலையில் பிறந்தவரைன்னே பாடிக்கிட்டிருந்திருக்கேன்) 3. அதோ பார் ரோடு ரோட்டு மேல காரு காருக்குள்ள யாரு? நம்ம மாமா நேரு நேரு என்ன சொன்னாரு? எழுதப்படிக்க சொன்னாரு! ( இதையும் எலியப்புடிக்க சொன்னாருன்னு மாத்திப்பாடி வாங்குப்பட்டிருக...

ஒற்றை நொடி வாழ்க்கை..பாகம் 2

             நம்ம ஆளும் அலட்டிக்காம சொன்னாரு..             'நானும் அடிக்கலாம்னுதான் கிட்டக்க போனேன். தண்டவாளத்தை விட்டு எறங்கி ஓட ஆரம்பிச்சுட்டான்.. தொரத்தி அடிக்கறதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு' ன்னாராம்.              ஒரு விஷயத்தை தப்பா புரிஞ்சிக்கிட்டோம்னா அதை எவ்வளவுதான் கவனமா செஞ்சாலும் ரிஸல்ட் தப்பாத்தான் ஆகும். நம்ப புத்திசாலித்தனம் அந்த நொடிகளில் விவரமா பயன்படுத்தப்படணும். அதைத்தான் ஆங்கிலத்தில் அழகா சொல்லுவாங்க...Presence of Mind ன்னு.. அதாவது மனம் அந்த இடத்தில் கவனமா இருந்தால் கண்டிப்பா சிறப்பா செயல்படலாம். சில சமயங்களில் அவசரப்பட்டும் அந்த நொடி முடிவெடுத்துடக்கூடாது. ஞாலம் கருதினும் கைகூடும்- காலம் கருதி இடத்தாற் செயின்..னாரு வள்ளுவர்!           அதுபோல சந்தர்ப்ப சூழலையும் பாத்துக்கணும். அப்பதான் உலகையே வெல்லமுடியும். சூழலைப்பாக்காம எது செஞ்சாலும் சொதப்பிடும்!             நம்ம மொக்கச்சாமி செத்துப்பொயிட்டாராம். அவருக்கு நரகம் அலாட் பண்ணியிருந்தாங்களாம்.! அன்னிக்கு நரகத்தில் கடவுள் விஸிட் இருந்ததால, எமன் ரொம்ப பரபரப்பா இருந்தாராம். உன் அக்கவுண்ட்டெல்லாம் பாத்துக்கிட்டுருக்...

ஒற்றை நொடி வாழ்க்கை..

நமக்கு வேலைகளைப்பற்றின பிரமிப்பு ஏற்படுறதுக்கு காரணமே, அதை அப்பவே செய்யும் மனநிலை இல்லாததுதான் ! மேலும் அதைப்பத்தி ரொம்ப பூதாகரமா நினைச்சுக்கிறதுதான்.!           ஒரு கடிகாரம் இருந்ததாம்.! அதிலுள்ள ஒரு நொடிமுள்ளுக்கு தன் வேலையைப்பத்திய பயம் வந்துடுச்சாம். நாம ஒரு நிமிஷத்துக்கு 60 நொடி டிக், டிக் னு சுத்தணும், அது போல 60 நிமிஷம் ஆனாத்தான் ஒரு மணி நேரம் ஆகும் ! 24 மணி நேரமானாத்தான் ஒரு நாள்! ஆக ஒரு நாளைக்கு 60 x 60 x 24 , 86400 தடவை டிக், டிக்குங்கணுமே, மேலும் இந்த கடிகாரத்தில் எத்தனை நாள் பேட்டரி தீராம இருக்குமோ..? நான் இவ்ளோ வேலை பாக்கணுமா? அப்டின்னுட்டு மயக்கம்போட்டு விழுந்துடுச்சாம்..! அப்ப பக்கத்திலிருந்த நிமிஷ முள் , நொடிமுள்ளை தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டுட்டு சொல்லிச்சாம். நீ ஏன் இப்படி கவலைப்படுற ! உன் வேலை ரொம்ப சிம்பிள்! ஒரு தடவை டிக் ன்னு நகரணும். அவ்வளவுதான். அதுக்கப்புறம் அடுத்த நொடி வேலையைப்பாரு! ன்னுதாம். அப்பதான் நொடிமுள்ளுக்கு ஒரு தெளிவு பிறந்ததாம்.                    அதுபோலத்தான் நாமளும் , காலேஜ் போறதும் , வேலைக்குப்போறதும் வருஷக்கணக்கா பண்ணனுமேன்னு கவலைப்பட்டா ஒரு வே...