Posts

Showing posts from March, 2014

ஊடலே யுத்த காரணி

Image
அலங்கோலமாய்க்கிடக்கும் வீட்டில் இருவரும் வேலைசெல்லும் பரபரப்பில்! அமீபாவாய் ஆரம்பித்த வார்த்தைகள் அனகோண்டாவாக மாற... ஆனந்துக்கும் , அகிலாவுக்கும் ஆரம்பமானது சண்டை..! அடிப்படைக்காரணம்.? நேரமாகிவிட்டது இன்னும் காலுறையைக்காணவில்லையாம்! யாருக்கு பொறுப்பு என்று பாப்பையா இல்லா பட்டிமன்றம்! தடித்த வார்த்தைகளை தவ்விப் பிடித்துக் கொண்டு தகராறை முற்றவிட்டு கணவனும் மனைவியும் கால்சென்ட்டர் கிளம்புகிறார்கள் ! நிறுவனத்தில் நுழைந்து தன் இருக்கைவந்து ' தலை பேசியை ' மாட்டிக்கொண்டு அழைப்புக்காய் காத்திருக்கிறான்.! 'என்னமாய் பேசிவிட்டாள் !' துடிக்கிறது உதடுகள்.. முதல் அழைப்பு வந்ததுமே பதில்சொல்ல விழையும் முன்' கேட்பவனின் கேள்வியில் கடுகளவு கோபம்! 'உன் நிறுவன மடிக்கணிணியில் இப்படி ஒரு பிரச்சனை!' என்னவென்று விளக்கவேண்டிய இவன் பதிலும் இனிமையில்லை.! இவன் பொறுமையெல்லாம் எப்போதோ போய்விட்டது! அதை எடுத்து மடித்துக்கொண்டு அவள் காலை சென்றுவிட்டாள் இது தெரியா எதிராளி எதிர்க்கேள்வி கேட்டுவைக்க எரிந்து விழுந்து முழங்குகிறான்.. "என்னய்யா ஆட்கள் நீங்கள்? இது கூடத்தெரியாமல்? என் உயிரை