Posts

Showing posts from May, 2010

எதிரிவினைகளுக்கு எதிர்வினை!

நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. ஆனால், அத்தகைய நட்பு தரும் பதிவுலகில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது. இதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும். அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும். தொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு பதிவுகள் ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி ச

தேவையான எண்கள்!

இப்போது எல்லா பெரிய நிறுவனங்களும் தங்களுக்கென ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வைத்துக்கொண்டுள்ளன. நாம் தொடர்பு கொள்ள விழையும்போது அந்த நிறுவனம் சம்பந்தப்பட இணையத்தளத்தையோ, அதன் விளம்பரத்தையோ வைத்து அந்த எண்ணை தெரிந்துகொண்டு அழைப்போம். இந்த எண்களை தொகுப்பாகக்கொண்டு ஒரு மின்னஞ்சல் வந்தது. அது அப்படியே இங்கே! Airlines Indian Airlines - 1800 180 1407 Jet Airways - 1800 22 5522 SpiceJet - 1800 180 3333 Air India -- 1800 22 7722 KingFisher - 1800 180 0101 Banks ABN AMRO - 1800 11 2224 Canara Bank - 1800 44 6000 Citibank - 1800 44 2265 Corporatin Bank - 1800 443 555 Development Credit Bank - 1800 22 5769 HDFC Bank - 1800 227 227 ICICI Bank - 1800 333 499 ICICI Bank NRI - 1800 22 4848 IDBI Bank - 1800 11 6999 Indian Bank - 1800 425 1400 ING Vysya - 1800 44 9900 Kotak Mahindra Bank - 1800 22 6022 Lord Krishna Bank - 1800 11 2300 Punjab National Bank - 1800 122 222 State Bank of India - 1800 44 1955 Syndicate Bank - 1800 44 6655 Automobiles Mahindra Scorpio - 1800 22 6006 Maruti - 1800 111 515 Ta

இரத்த சொங்கி - 2

Image
முதல் பாகம் இங்கே! உடனே ஓடி இரத்தவங்கிக்குள் நுழைய முயன்றேன். இரத்தவங்கி மூடப்பட்டிருந்தது. மீண்டும் தடுத்து நிறுத்தினார் டாக்டர். முத்துக்கிருஷ்ணன். வேற ஒரு பிரச்னை சார்! என்ன பிரச்னை! நீங்க ப்ளீட் பண்ணிறலாம்.! ஆனா நாளைக்குத்தான் கையில் தருவாங்க போலிருக்கு! ஏன்? டெஸ்ட் கிட் இல்லையாம்! ( கொடுக்கப்பட்ட இரத்தத்தை எல்லா வியாதிகளுக்காகவும் பரிசோதித்து அறியும் கருவிகள் - வேதிப்பொருட்கள் அடங்கியது ) அதைச்சொல்ல இவ்வளவு நேரமா? ஏன் சார்! நாமளாவது திருச்சி போய் இன்னேரம் குடுத்திருக்கலாமுல்ல? இதுகூடத் தெரியாமலா இவ்ளோ நேரம் வேலை பாக்குறானுங்க! கொஞ்சம் குரலை உயர்த்தினேன். ஆனால், அங்கு பதில் சொல்ல யாரும் இல்லை! அந்த மருத்துவமனை தலைமை மருத்துவரை நன்கு அறிவேன் என்பதால் அவருக்கு அழைத்தேன். நீண்ட நேரம் பிஸியாக இருந்தது. அப்போது மணி 10:30 பின்னர் அவசரமாக திருச்சி சென்று நள்ளிரவில் ஒரு தனியார் ரத்தவங்கியில் ரத்தம் கொடுத்துவிட்டு வீட்டுக்குத்திரும்பும்போது நள்ளிரவு மணி 1. இதற்கிடையில் திரு.பிரகாஷுக்கு ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அபாயகட்டத்தில் இருந்து கொ

இரத்த சொங்கி!

Image
மே 18ம்தேதி மதுரையில் நாம் தமிழர் மாநாடு முடித்து மூன்று பேர் ஒரு பேருந்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். திருச்சிக்கருகில் ஏற்பட்ட ஒரு சாலைவிபத்தில், அந்த மூவருக்கு மட்டும் அடிபடுகிறது.அதில் ஒருவர் திரு.பிரகாஷ். அவருக்கு தொடையில் மட்டும் ஒரு சிறு அடிபட்டிருக்கிறது. அதற்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். சிறிது நேரத்தில் கழிவறைக்குச்சென்று திரும்பியவரின் உடல் சில்லிட ஆரம்பிக்கிறது. அப்போதுதான் மருத்துவர்கள் அவரை முழுமையாக பரிசோதிக்கிறார்கள். வயிற்றின் உள்ளே ஏதோ அடிபட்டு, உள்ளேயே இரத்தம் கசிந்து இரத்த இழப்பு வேகமாக ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது. மணிக்கு 600 மிலி வீதம் இழப்பு! உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும், A-ve இரத்தம் 20 யூனிட்கள் தேவை என்று மருத்துவர்கள் சொல்ல, அவரது நண்பர்கள் அரசு இரத்தவங்கிகளையும், குருதிக்கொடையாளர்களையும் அணுக முயற்சிக்கிறார்கள். திருச்சியில் முடிந்தவரை அவசரமாக இரத்தம் தேற்றுகிறார்கள். சிகிச்சை ஆரம்பமாகிறது. A-ve மிகவும் அரிய வகை என்பதால், பக்கத்து மாவட்டங்களுக்கும் தகவல் செல்கிறது. அன்று மாலை, எனக்கு உள்ளூர் ரோட்டரி சங

இன்றே சொல்லவேண்டிய நன்றி!

Image
திருமணம் மீது எனக்கிருந்த பயத்தைவிட, அதற்குப்பின் தேவைப்படும் பொறுப்புணர்ச்சியின் மீதுதான் அதிக ஐயம் இருந்தது.சரியான நேரத்துக்கு வீட்டுக்குத்திரும்பமுடியுமா? சொல்லும் பொருட்களை வாங்கிவர முடியுமா? ஓவராகப் பேசினால் சமாளிக்கமுடியுமா? இவற்றை மீறி, நம்மால் ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு கெடுதலும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்கள் வீட்டிலிருந்து தாயும், தந்தையும் ஒரு பரபரப்பான மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து என் பெற்றோரைச்சந்தித்தார்கள். நாங்கள் ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குச்சென்றோம். போனால் ' சரி ' என்றுதான் சொல்லுவேன் என்ற நிபந்தனையுடன் போனேன். ஒரு பெண்ணைப் பார்த்து உன்னை எனக்கு ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்று கூறுவதில் எனக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை. நிராகரிப்பின் வலியை நானும் உணர்ந்திருந்ததால்...! திருமணமும் நடந்தது. அவள் வீட்டுக்குள் வந்ததிலிருந்து எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் என் வாழ்வில் ஏற்படுத்திவிடாமல் சகஜமான வாழ்க்கையை அப்படியே வாழவைத்தாள். என் பெற்றோரிடம் தகுந்த மரியாதையுடனும், அன்புடனும