தள்ளிப்போட்டால்....!

இன்னிக்கு பாக்கவேண்டிய இந்த பதிவை அப்புறம் பாத்துக்கலாம்னு தள்ளிப்போட்டீங்கன்னா ..இந்த விஷயம் உங்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். நல்ல வேளை தள்ளிப்போடலை.!

ஒரு சினிமா நாளைக்கு ரிலீஸ் ஆகுதுன்னா...என்னமோ நாளைக்கே அதோட ரீல் எல்லாத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிடுவாங்கங்கிற மாதிரி...ரொம்ப வேகமா..கூட்டத்துல சட்டை கிழிஞ்சாலும் பரவாயில்லைன்னு முதல்நாள் முதல் ஷோ பாத்தேன்னு சொல்லிக்கிற பெருமைக்காகவே போய் பாத்துட்டு வந்து லந்து பண்ணிக்கிட்டிருப்போம்.

அதை ஒரு வாரம் தள்ளிப்போட்டா சந்தோஷமா இரைச்சல் இல்லாம படம் பாக்கலாம்.

நம்ம கூடப்படிச்ச நண்பன் ஒரு வேலைக்கு அப்ளை பண்ணும்போது, நான் நாளைக்கு பண்ணிக்கிறேண்டான்னு சொல்லிட்டு அப்புறம் கடைசி நாள் , நேத்திக்கே முடிஞ்சுபோச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கும்போதே...அப்ளை பண்ணின நண்பனுக்கு அந்த வேலை கிடைச்சுட்டா , ச்சே! எனக்கு அதிர்ஷ்டமே இல்லைன்னு புலம்பிக்கிட்டிருந்திருப்போம். (இப்படி பலப்பல புலம்பல்களுக்கு காரணமே தள்ளிப்போடுதல்தான்)

முதல்நாளே அதை உடனே தள்ளிப்போடாம செஞ்சிருந்தா நமக்கும் வேலை கிடைச்சிருக்கும்.

அப்படின்னா எதை தள்ளிப்போடணும் , எதை தள்ளிப்போடக்கூடாதுன்னு கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.

முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தள்ளிப்போடணும்
முக்கியத்துவம் உள்ள விஷயங்களை உடனே செய்யணும்!
ஆனா..
எதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுங்கிறதுல, தெளிவா இருக்கணும்!

நாம எதையுமே தள்ளிப்போடாதவரா இருந்தா, முதல் நாள் முதல் ஷோ பாக்குறதும் தப்பே இல்லை!

நம்ம மொக்கச்சாமியும் அவரோட நண்பரும்.. ஒரு காட்டு வழியா போயிக்கிட்டு இருந்தாங்க.. அப்பன்னு பாத்து ஒரு சிங்கம் வந்துருச்சு.. உடனே அதுக்கிட்டயிருந்து தப்பிக்கிறதுக்காக ரெண்டு பேரும் ஓட ஆரம்பிச்சாங்க! சிங்கம் துரத்த ஆரம்பிச்சுடுச்சு! வேகமா ஓடிக்கிட்டிருக்காங்க! ஒரு இடத்தில் மொக்கச்
சாமி...குனிஞ்சு அவரோட ஷூ லேசை நல்லா கட்டிக்கிட்டிருந்தாரு. அப்ப ஓடிக்கிட்டிருந்த நண்பர் கேட்டாரு.. என்ன மொக்கச்சாமி! சிங்கம் தொறத்துது. இப்ப பாத்து ஷூ லேசை கட்டிக்கிட்டிருக்க நம்மளை எப்ப அந்த சிங்கம் பிடிக்கப்போகுதோன்னு பயத்தோட ஓடிக்கிட்டிருக்கோம்.அதோட வேகத்துக்கு ஈடு குடுத்து வேகமா ஓட் வேண்டாமா? ன்னு கேட்டாரு. அப்ப மொக்கச்சாமி பொறுமையா சொன்னாரு. சிங்கத்தோட வேகத்துக்கு ஈடு குடுக்க முடியுமான்னு தெரியலை.ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் வேகத்துக்கு ஈடு குடுத்து உன்னைவிட முன்னாடி ஓடிட்டேன்னா போதும் ..அதுக்கிட்டயிருந்து தப்பிச்சுருவேன்.

இப்படித்தான் நாமளும் ஓடவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். எந்த விஷயத்தையுமே தள்ளிப்போட்டோம்னா நம்மளை விட வேகமா ஓடறவுங்களுக்கு அந்த விஷயத்தில் வெற்றி காத்துக்கிட்டிருக்கும்.

நாம அன்றாட வாழ்க்கைல எத்தனை இடங்களில் தள்ளிப்போடுறதை பயன்படுத்துறோம்.?


அடுத்த பஸ்ல போயிக்கலாம்!
நாளைக்குதானே கடைசி நாள் ,நாளைக்கு டிடி எடுத்துக்கலாம். (ஆனா நாளைக்கு பேங்க் ஸ்ட்ரைக்குன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்காது)
வர்ற ஞாயித்துக்கிழமை வண்டிய துடைச்சுக்கலாம்!
இந்த வாரக்கடைசில மேசைல இருக்குற குப்பையை ஒழுங்கு பண்ணிறலாம்!
பதில் மெயில் அப்புறம் போட்டுக்கலாம்ன்னு இப்படி பலப்பல ஒத்திப்போடல்கள்!

இதுதான் உங்களை வெற்றியை அணுக விடாமல் தடுக்கும்னா நம்பவா போறீங்க? ஆனா அதுதான் உண்மை!

மருத்துவமனைகள்ல சொல்றதை கேட்டிருப்பீங்க! அரை மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா உயிரை காப்பாத்திருக்கலாம்.
எக்ஸாம் ஹால்ல சொல்லியிருப்பாங்க! இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா எப்படிப்பா உள்ள விடுறது?
ஒரு வாடகை வீடு பாத்திருப்பீங்க! நாளைக்கு பேசி முடிச்சுறலாம்ன்னு தள்ளிப்போட்டுட்டு அடுத்த நாள் போய் நின்னீங்கன்னா அடடே! நேத்து சாயங்காலமே ஒருத்தர் வந்து அட்வான்ஸ் குடுத்துட்டு போயிட்டாரே..ஸாரிங்க! ன்னு அந்த வீட்டுக்காரரு சொல்லுவாரு!

இதெல்லாம் சரியான திட்டமிடல் இல்லாம ஒத்திப்போடறதோட விலை! எப்பவுமே நல்ல விஷயங்களை தள்ளிப்போடாம உடனுக்குடன் செஞ்சு பழகுங்க! முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அப்புறம் அது பழகிப்போச்சுன்னா வெற்றியும் உங்களுக்கு பழகிப்போகும்.

நல்ல தொழிலுக்கு ஒரு இலக்கணம் சொல்லுவாங்க! நாளைய ஆர்டர்! இன்றைய டெலிவரின்னு! நாளைக்கு வரப்போற வேலைக்கு தள்ளிப்போடாம இன்னைக்கே தயாரா இருக்கணும்னுதான் அதுக்கு அர்த்தம். ஏன்னா சில சமயம் வேலை எவ்வளவு இழுக்கும்னு நமக்கே கூட தெரியாது.

மொழி படத்துல பிரகாஷ்ராஜும், பிருதிவிராஜும் பேசிக்கிட்டிருப்பாங்க! பிருதிவிராஜ் சொல்லுவாரு..ச்சே! கல்யாணம் ஆகலைன்னு சொன்னா வீடே தரமாட்டேங்கிறாங்க! அதுக்கு நடுவயசுக்காரரா இருக்கும் பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க! திருமணத்தை தாமதிக்காம பண்ணியிருந்தா இந்த கொடுமை இருந்திருக்காது.

முடிஞ்சவரைக்கும், எந்த காரியத்தையும் தள்ளிப்போடாம உடனே செஞ்சு பாருங்க! அந்த காரியம் ரொம்ப சுலபமா முடியும். ஏன்னா தள்ளிப்போடப்போடத்தான் சுமை அதிகரிக்கும்.

இப்ப இந்த பதிவை படிச்சு முடிச்ச உடனே...இதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்!

Comments

 1. /
  முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தள்ளிப்போடணும்
  முக்கியத்துவம் உள்ள விஷயங்களை உடனே செய்யணும்!
  /
  மிகச் சரி

  ReplyDelete
 2. /
  முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தள்ளிப்போடணும்
  முக்கியத்துவம் உள்ள விஷயங்களை உடனே செய்யணும்!
  /

  அதை கண்டுபிடிக்கிறதுலதான் நம்ம சாமர்த்தியமே இருக்கு

  ReplyDelete
 3. /
  நாமளும் ஓடவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். எந்த விஷயத்தையுமே தள்ளிப்போட்டோம்னா நம்மளை விட வேகமா ஓடறவுங்களுக்கு அந்த விஷயத்தில் வெற்றி காத்துக்கிட்டிருக்கும்.
  /

  well said

  ReplyDelete
 4. /
  ஒத்திப்போடல்கள்!

  இதுதான் உங்களை வெற்றியை அணுக விடாமல் தடுக்கும்னா நம்பவா போறீங்க? ஆனா அதுதான் உண்மை!
  /

  உண்மை!
  உண்மை!!
  உண்மை!!!

  ReplyDelete
 5. /
  மொழி படத்துல பிரகாஷ்ராஜும், பிருதிவிராஜும் பேசிக்கிட்டிருப்பாங்க! பிருதிவிராஜ் சொல்லுவாரு..ச்சே! கல்யாணம் ஆகலைன்னு சொன்னா வீடே தரமாட்டேங்கிறாங்க! அதுக்கு நடுவயசுக்காரரா இருக்கும் பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க! திருமணத்தை தாமதிக்காம பண்ணியிருந்தா இந்த கொடுமை இருந்திருக்காது.
  /

  வேணாம்........ வலிக்குது.........
  அழுதுருவேன்

  :)))))))))))))

  ReplyDelete
 6. /
  இதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்!

  /
  ஓகே. டண்.

  ரொம்ப நல்ல பதிவு சுரேகா. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. nallathai thaan solreenga

  kedpavan kekattumae

  baa

  ReplyDelete
 8. <== வகை : தத்துவம் மாதிரி ==>
  எனக்கு இந்தப்பதிவில பிடிச்சது இதுதான்.

  ReplyDelete
 9. மங்களூர் சிவா said...

  //////vஅதை கண்டுபிடிக்கிறதுலதான் நம்ம சாமர்த்தியமே இருக்கு//

  கண்டிப்பா..

  இதை இப்படி சொல்லுவாங்க

  உனக்குப்பிடித்ததை செய்வதைவிட உனக்கு வேண்டியதை உடனே செய்!

  ReplyDelete
 10. //vanakkam... nalla visayam,,.

  last chance aa State Bank Exam...afternoon session... my friend's sister also reminded me "don't forget to paste your photo in the Hall Ticket" nalla thalai aattinen... Exam hall poy paartha photo missing - veettukku vanthu eduthu poga no time... last chance poyae pochee,..intum varunthukiraen.

  anbudan...vij//

  ReplyDelete
 11. சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

  //<== வகை : தத்துவம் மாதிரி ==>
  எனக்கு இந்தப்பதிவில பிடிச்சது இதுதான்.//

  :)
  பரவாயில்ல! அதுவாவது பிடிச்சதே! ?

  ReplyDelete
 12. மங்களூர் சிவா said...

  //
  ஓகே. டண்.

  ரொம்ப நல்ல பதிவு சுரேகா. வாழ்த்துக்கள்.//

  அன்புக்கு நன்றி சிவா!

  ReplyDelete
 13. நாளைய ஆர்டருக்கு இன்றே டெலிவரி. கீழ உள்ள பின்னூட்டங்கள் எல்லாம் உங்களோட அடுத்தடுத்த பதிவுகளுக்கு தான். ஓக்கேவா?

  ReplyDelete
 14. பதிவு அருமை சுரேகா.

  ReplyDelete
 15. நல்ல விஷயம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. நல்லா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 17. நானும் வந்துட்டு போனேன்னு சொல்ல இந்த பின்னூட்டம்.

  ReplyDelete
 18. கலக்கிட்டீங்க சுரேகா!

  ReplyDelete
 19. ////இன்னிக்கு பாக்கவேண்டிய இந்த பதிவை அப்புறம் பாத்துக்கலாம்னு தள்ளிப்போட்டீங்கன்னா ..இந்த விஷயம் உங்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். நல்ல வேளை தள்ளிப்போடலை.!///


  அது சரி

  ReplyDelete
 20. ////ஒரு சினிமா நாளைக்கு ரிலீஸ் ஆகுதுன்னா...என்னமோ நாளைக்கே அதோட ரீல் எல்லாத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிடுவாங்கங்கிற மாதிரி...ரொம்ப வேகமா..கூட்டத்துல சட்டை கிழிஞ்சாலும் பரவாயில்லைன்னு முதல்நாள் முதல் ஷோ பாத்தேன்னு சொல்லிக்கிற பெருமைக்காகவே போய் பாத்துட்டு வந்து லந்து பண்ணிக்கிட்டிருப்போம்.////


  எதுக்கு சுரேகா நம்ம பழைய விஷயத்த கிண்டுறீங்க?

  ReplyDelete
 21. ///அதை ஒரு வாரம் தள்ளிப்போட்டா சந்தோஷமா இரைச்சல் இல்லாம படம் பாக்கலாம்.///  மூணு நாளுல படத்த தியேட்டர விட்டு தூக்கிட்டா என்ன பண்ணுறது?

  ReplyDelete
 22. ////அப்படின்னா எதை தள்ளிப்போடணும் , எதை தள்ளிப்போடக்கூடாதுன்னு கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.///  உங்க பதிவ தள்ளிப்போடாம படிச்சி கும்மி அடிக்கணும் அதானே சொல்ல வாறீங்க?

  ReplyDelete
 23. ///ஆனா..
  எதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுங்கிறதுல, தெளிவா இருக்கணும்!///  இங்க தான் இடிக்குது!!!!

  ReplyDelete
 24. ///நம்ம மொக்கச்சாமியும் அவரோட நண்பரும்.. ஒரு காட்டு வழியா போயிக்கிட்டு இருந்தாங்க..///


  அதாவது அபி அப்பாவும் நம்ம சிவாவும் சரியா?

  ReplyDelete
 25. ///ஒரு இடத்தில் மொக்கச்
  சாமி...குனிஞ்சு அவரோட ஷூ லேசை நல்லா கட்டிக்கிட்டிருந்தாரு./////


  கண்டிப்பா இது அபி அப்பா தான்:)

  ReplyDelete
 26. ////அப்ப மொக்கச்சாமி பொறுமையா சொன்னாரு. சிங்கத்தோட வேகத்துக்கு ஈடு குடுக்க முடியுமான்னு தெரியலை.ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் வேகத்துக்கு ஈடு குடுத்து உன்னைவிட முன்னாடி ஓடிட்டேன்னா போதும் ..அதுக்கிட்டயிருந்து தப்பிச்சுருவேன்.////

  மங்கலூறு நல்லா பார்த்துக்கப்பா அபி அப்பா உன்மேல வச்சிருக்கிற பாசத்த!!!!!

  ReplyDelete
 27. ////இப்படி பலப்பல ஒத்திப்போடல்கள்!

  இதுதான் உங்களை வெற்றியை அணுக விடாமல் தடுக்கும்னா நம்பவா போறீங்க? ஆனா அதுதான் உண்மை!////

  நீங்க சொல்லி நம்பாம இருக்க முடியுமா?

  உண்மை!
  உண்மை!!

  ReplyDelete
 28. ///எப்பவுமே நல்ல விஷயங்களை தள்ளிப்போடாம உடனுக்குடன் செஞ்சு பழகுங்க! ///


  ரொம்ப டயர்டா இருந்தேன். இத படிச்சவுடனே என்ன நடந்தாலும் சரின்னு கும்மிய ஆரம்பிச்சுட்டேன்:)

  ReplyDelete
 29. ///அப்புறம் அது பழகிப்போச்சுன்னா வெற்றியும் உங்களுக்கு பழகிப்போகும்.///  வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்!!!!

  ReplyDelete
 30. ////பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க! திருமணத்தை தாமதிக்காம பண்ணியிருந்தா இந்த கொடுமை இருந்திருக்காது.////  சிவா நீ சுரேகா கிட்ட ஆள்மாறாட்டம் பண்ணுனதை இன்னும் மறக்கல போல. அதான் உன்னை குத்தி காமிக்கிராரு!!

  ReplyDelete
 31. ////முடிஞ்சவரைக்கும், எந்த காரியத்தையும் தள்ளிப்போடாம உடனே செஞ்சு பாருங்க! அந்த காரியம் ரொம்ப சுலபமா முடியும். ஏன்னா தள்ளிப்போடப்போடத்தான் சுமை அதிகரிக்கும்.////


  முதல்ல தள்ளிப்போடாம பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணுங்க சாமி!

  ReplyDelete
 32. ////இப்ப இந்த பதிவை படிச்சு முடிச்ச உடனே...இதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்!////  நன்றி சுரேகா. மிக நல்ல பதிவு. அடுத்த பதிவுல பார்க்கலாம்:)

  ReplyDelete
 33. நிஜமா நல்லவன் said...
  said..said...x 21

  வாங்க! வாங்க! வாழ்த்துக்களுக்கு நன்றி!

  தள்ளிப்போடாம பின்னூட்டமா போட்டு தள்ளிட்டீங்க போங்க!

  (எவ்வளவுதான் கும்மியடிச்சாலும் அசராம வாங்கிக்கிவோம்ல..! எப்புடி?)

  உங்க மாமனாரைப்பாத்தேனே!
  ஆனா சிவா அறிமுகப்படுத்தி வைக்கல!
  (ஏதாவது உள்குத்து இருக்குமோ?)

  ReplyDelete
 34. சிவா பண்ணுன கூத்த இளையகவி சொன்னாரு. அப்புறம் எப்படி அறிமுகப்படுத்துறது? இந்த சிவாவ என்ன பண்ணலாம் சொல்லுங்க சுரேகா?

  ReplyDelete
 35. Romba nalla katurai!....

  When i was 9 years my mother is admitted in the hospital and she wants to meet me, and she informed this thro' my aunt. and she asked me to meet my mother. that day i got fever and i said i will see her tomorrow.

  But the very next day i got a shock news that she was passed away..due to some cardiac attack,. It is in the very little age and i came to know the content of the death very much later only.where can i see her? atleast... i missed the last chance.. But still that missing is paining me till this date...

  unga தள்ளிப்போட்டால்....!"parthavuden
  yenakku intha nabagam vanthathu...!
  lifela marakka mudiyatha ilappu!....

  ReplyDelete
 36. இதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்!

  mikka nantri sureka sir!

  ReplyDelete
 37. வாங்க சின்ன மயில்..

  தங்கள் வாழ்வில் நடந்த மிகப்பெரும் சோகத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  இப்படித்தான் தள்ளிப்போடலில், பலர் பல விஷயங்களை இழக்கிறோம்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!