கால ஓட்டத்தில் காணாமல் போனவை !
அகில இந்திய வானொலி
திருச்சிராப்பள்ளி
ரெயின்போ பண்பலை 102.1 ல்
தினமும் காலை 8 மணிமுதல் 10 மணிவரை 'வசந்த அழைப்பு' ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றோம்.
ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து நேயர்களை அது சம்பந்தமா பேசச் சொல்றது.
அழைக்கும் நேயர், அந்தத்தலைப்புக்கு ஏற்றார்ப்போல் பேசவேண்டும்.
இரண்டு மணிநேரம் போவதே தெரியாது. சரியா கலாய்க்கலாம்.
அப்படி நான் கொடுத்த தலைப்புகளில் சிலவற்றின்...
என் துவக்க அறிமுகத்தை மட்டும் கொஞ்சம் பதிவா போடலாமேன்னு.. (வேற மேட்டரே இல்லையோ?)
கால ஓட்டத்தில் காணாமல் போனவை !
அதெல்லாம் அந்தக்காலம்’
என்று அங்கலாய்க்கும் மனோபாவம்
அனேகமாய் எல்லோருக்கும்
ஆங்காங்கே வருவதுண்டு!
அடிப்படைக்காரணமாய்
சிறுவயதில் சிறப்பாக
நீங்கள் பார்த்த ஒரு விஷயம்
மாறிப்போய் வந்திருக்கும்!
கால ஓட்டம் அதன் காரணமாய்
கட்டாயம் இருந்திருக்கும்!
எத்தனையோ ஆண்டுகள்
உங்கள் உணர்வோடு கலந்துவிட்டு
இப்போது திடீரெனறு
இல்லாமல் போய்விட்ட
அவ்விஷயம் உங்களுக்குள்
தாக்கங்கள் தந்திருக்கும்!
மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும்
மாறியவை என்னவென்று
மறக்காமல் இருப்போம் !
வேப்பங்குச்சிகள் செய்துவந்த
பல்விளக்கும் வேலைதன்னை
பிரஷ்கள் தட்டிப்பறித்ததுபோல்
நெற்றிப்பொட்டாய்
ஜொலித்திட்ட சாந்தை,
ஸ்டிக்கர் பொட்டு
சாய்த்ததுபோல்
கெந்தி விளையாடும்
கில்லிதாண்டை
கிரிக்கெட் ஆட்டம்
கெடுத்ததுபோல்
கடிதம் எழுதும்
அழகுதன்னை
கையில் செல்போன்
பறித்ததுபோல்....
எத்தனை எத்தனை
மாற்றங்கள்!
கல்கோனா,
கட்டை வண்டி
பெல்பாட்டம் பேண்ட்
பெட்ரோமாக்ஸ் விளக்கு
ஆடுபுலி ஆட்டம்
அம்புலிமாமா புத்தகம்
ஐந்து பைசா நாணயம்
ஆரஞ்சு மிட்டாய்
சாவி கொடுக்கும் கைக்கடிகாரம் என
காலஓட்டத்தில் நாம் கடந்து வந்த
விஷயங்கள் !
அது ஒரு பொருளாக இருக்கலாம்
செயலாக இருக்கலாம்!
விழாவாக இருக்கலாம்!
விளையாட்டாக இருக்கலாம்!
விலங்ககாக இருக்கலாம்!
உணவாக இருக்கலாம்!
உடையாக இருக்கலாம்!
வாகனமாய் இருக்கலாம்..!
எதுவாக இருந்தாலும்
இதயத்தில் தோன்றுவதை
இதழ்களுக்குக் கொண்டுவாருங்கள்!
இந்தத்தலைப்பில் நேயர்கள் ரொம்ப நல்லா பேசினாங்க!
இப்ப ஒரு வேண்டுகோள்
உங்கள் வாழ்க்கையின்
கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் ஏதாவது ஒன்றைப்பற்றி
பதிவிடுங்களேன்.
அதுக்கு நானே ஐந்து பேரை அழைக்கிறேன்
1. தெக்கிக்காட்டான்
2. புதுகைத்தென்றல்
3. மங்களூர் சிவா
4. புதுகை எம்.எம்.அப்துல்லா
5. துளசிகோபால் அம்மா
திருச்சிராப்பள்ளி
ரெயின்போ பண்பலை 102.1 ல்
தினமும் காலை 8 மணிமுதல் 10 மணிவரை 'வசந்த அழைப்பு' ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றோம்.
ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து நேயர்களை அது சம்பந்தமா பேசச் சொல்றது.
அழைக்கும் நேயர், அந்தத்தலைப்புக்கு ஏற்றார்ப்போல் பேசவேண்டும்.
இரண்டு மணிநேரம் போவதே தெரியாது. சரியா கலாய்க்கலாம்.
அப்படி நான் கொடுத்த தலைப்புகளில் சிலவற்றின்...
என் துவக்க அறிமுகத்தை மட்டும் கொஞ்சம் பதிவா போடலாமேன்னு.. (வேற மேட்டரே இல்லையோ?)
கால ஓட்டத்தில் காணாமல் போனவை !
அதெல்லாம் அந்தக்காலம்’
என்று அங்கலாய்க்கும் மனோபாவம்
அனேகமாய் எல்லோருக்கும்
ஆங்காங்கே வருவதுண்டு!
அடிப்படைக்காரணமாய்
சிறுவயதில் சிறப்பாக
நீங்கள் பார்த்த ஒரு விஷயம்
மாறிப்போய் வந்திருக்கும்!
கால ஓட்டம் அதன் காரணமாய்
கட்டாயம் இருந்திருக்கும்!
எத்தனையோ ஆண்டுகள்
உங்கள் உணர்வோடு கலந்துவிட்டு
இப்போது திடீரெனறு
இல்லாமல் போய்விட்ட
அவ்விஷயம் உங்களுக்குள்
தாக்கங்கள் தந்திருக்கும்!
மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும்
மாறியவை என்னவென்று
மறக்காமல் இருப்போம் !
வேப்பங்குச்சிகள் செய்துவந்த
பல்விளக்கும் வேலைதன்னை
பிரஷ்கள் தட்டிப்பறித்ததுபோல்
நெற்றிப்பொட்டாய்
ஜொலித்திட்ட சாந்தை,
ஸ்டிக்கர் பொட்டு
சாய்த்ததுபோல்
கெந்தி விளையாடும்
கில்லிதாண்டை
கிரிக்கெட் ஆட்டம்
கெடுத்ததுபோல்
கடிதம் எழுதும்
அழகுதன்னை
கையில் செல்போன்
பறித்ததுபோல்....
எத்தனை எத்தனை
மாற்றங்கள்!
கல்கோனா,
கட்டை வண்டி
பெல்பாட்டம் பேண்ட்
பெட்ரோமாக்ஸ் விளக்கு
ஆடுபுலி ஆட்டம்
அம்புலிமாமா புத்தகம்
ஐந்து பைசா நாணயம்
ஆரஞ்சு மிட்டாய்
சாவி கொடுக்கும் கைக்கடிகாரம் என
காலஓட்டத்தில் நாம் கடந்து வந்த
விஷயங்கள் !
அது ஒரு பொருளாக இருக்கலாம்
செயலாக இருக்கலாம்!
விழாவாக இருக்கலாம்!
விளையாட்டாக இருக்கலாம்!
விலங்ககாக இருக்கலாம்!
உணவாக இருக்கலாம்!
உடையாக இருக்கலாம்!
வாகனமாய் இருக்கலாம்..!
எதுவாக இருந்தாலும்
இதயத்தில் தோன்றுவதை
இதழ்களுக்குக் கொண்டுவாருங்கள்!
இந்தத்தலைப்பில் நேயர்கள் ரொம்ப நல்லா பேசினாங்க!
இப்ப ஒரு வேண்டுகோள்
உங்கள் வாழ்க்கையின்
கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் ஏதாவது ஒன்றைப்பற்றி
பதிவிடுங்களேன்.
அதுக்கு நானே ஐந்து பேரை அழைக்கிறேன்
1. தெக்கிக்காட்டான்
2. புதுகைத்தென்றல்
3. மங்களூர் சிவா
4. புதுகை எம்.எம்.அப்துல்லா
5. துளசிகோபால் அம்மா
சூப்பர் மேட்டர் கையில எடுத்திருக்கீங்க!
ReplyDeleteபார்ப்போம்! எத்தனை பேரின் அனுபவங்கள் வித்தியாசமானதாக நினைக்கவைப்பதாக இருக்கிறது என்று!
:)
திருச்சி வானொலி
ReplyDeleteசென்னை வானொலி
இவையெல்லாம் இணையத்தில் ஆன்லைனில் கேட்டு மகிழும் காலம் வரும் நாள் எம்மாம் தூரத்தில் இருக்கிறது என்பதையும் கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்களேன்!
ஆர்வமுடன் இருக்கிறேன் :)))))
இந்த வருடம் தொடர்விளையாட்டு வருடமா??
ReplyDeleteசரி சரி பதிவுக்கு எதாவது யோசிக்கிறேன்!!
:)))
ஆயில்யன் said...
ReplyDelete//சூப்பர் மேட்டர் கையில எடுத்திருக்கீங்க!//
நன்றிங்க!
//பார்ப்போம்! எத்தனை பேரின் அனுபவங்கள் வித்தியாசமானதாக நினைக்கவைப்பதாக இருக்கிறது என்று!
:)//
நீங்களே ஆரம்பிங்களேன்.! :)
//ஆயில்யன் said...
ReplyDeleteதிருச்சி வானொலி
சென்னை வானொலி
இவையெல்லாம் இணையத்தில் ஆன்லைனில் கேட்டு மகிழும் காலம் வரும் நாள் எம்மாம் தூரத்தில் இருக்கிறது என்பதையும் கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்களேன்!
ஆர்வமுடன் இருக்கிறேன் :)))))//
பிரசார் பாரதிக்கு கேட்டு எழுதி இருக்கோம்.
விரைவில் நடக்கும்!
//மங்களூர் சிவா said...
ReplyDeleteஇந்த வருடம் தொடர்விளையாட்டு வருடமா??
சரி சரி பதிவுக்கு எதாவது யோசிக்கிறேன்!!
:)))//
வாங்கப்பு!
அட்டெண்டன்ஸ் போட்டாச்சு!
பதிவு போடும் வழியப்பாருங்க!
//கல்கோனா,
ReplyDeleteகட்டை வண்டி
பெல்பாட்டம் பேண்ட்
பெட்ரோமாக்ஸ் விளக்கு
ஆடுபுலி ஆட்டம்
அம்புலிமாமா புத்தகம்
ஐந்து பைசா நாணயம்
ஆரஞ்சு மிட்டாய்
சாவி கொடுக்கும் கைக்கடிகாரம் என
காலஓட்டத்தில் நாம் கடந்து வந்த
விஷயங்கள் !//
அருமையான மேட்டர் தல.. இதுக்கெல்லாம் பிரத்யேகமா ஒரு வலைப்பூவே தயாராய்ட்டு இருக்கு.. விரைவில் உதயம்.. :)
இறைவா இந்த தொடர்பதிவுக்கு அழைக்கும் நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
ReplyDeleteசூப்பர்:)
ReplyDeleteமாட்டிவிட்டு பார்ப்பதில் அம்புட்டு ஆனந்தமா?
ReplyDelete:)))))
பதிவைப் போட்டு நானும் 5 பேரைக் கூப்பிடணுமா ஒண்ணுமே சொல்லவே இல்லையே.
ReplyDeletehttp://pudugaithendral.blogspot.com/2008/08/blog-post_30.html
ReplyDeleteபதிவும் போட்டாச்சுங்கோ
அண்ணாத்த தொடர்ந்தாச்சு சுட்டி இதோ
ReplyDeleteSanJai said...
ReplyDelete//அருமையான மேட்டர் தல.. இதுக்கெல்லாம் பிரத்யேகமா ஒரு வலைப்பூவே தயாராய்ட்டு இருக்கு.. விரைவில் உதயம்.. :)//
வாங்க ..நன்றி சஞ்சய்!
அப்படியா?
சூப்பருல்ல!
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ReplyDelete//இறைவா இந்த தொடர்பதிவுக்கு அழைக்கும் நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.//
அய்யய்யோ...அப்படியா..ரொம்ப நொந்துபோன மாதிரி தெரியுது?
இடையில் கொஞ்ச நாள் பதிவுலக டச் இல்லாததால...தொடர்பதிவு கலாட்டாவை ரசிக்க முடியலை!
அப்ப சரி...நீங்க ரொம்ப விரும்புவீங்களேன்னு நினைச்சேன். பரவாயில்லை!
http://pudugaitamil.blogspot.com/2008/08/blog-post_25.html
இந்தப்பதிவை...எடுத்துக்குறேன்.
//புதுகைத் தென்றல் said...
ReplyDeleteபதிவைப் போட்டு நானும் 5 பேரைக் கூப்பிடணுமா ஒண்ணுமே சொல்லவே இல்லையே.//
வாங்க வாங்க!
அதெல்லாம் செய்ய வேண்டாம்.
நீங்க மட்டும் எழுதுங்க போதும்.
:)
அருமை, சிவாவின் பதிவிலிருந்து வந்தேன், நல்ல தொடர் பதிவை ஏற்படுத்தி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த தொடரோட நம்ம போர்ஷனை போட்டாச்சி:
ReplyDeleteகாணாமல் போனவை: சைக்கிள், நண்பர்கள் அப்புறம் .... நேர்மை
சீக்கிரமா ஆன்லைன் வசதி வந்தா பரவாயில்ல திருச்சியில இருந்த வரைக்கும் தினமும் கேட்டது.
ReplyDelete